நிகழ்ச்சி
துவக்கம்: மத்திய
அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை,தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய 22
ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு நவம்பர்,27 அன்று பெரியகுளம்
சரஸ்வதி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டதுணைத்தலைவர் முனைவர் ஜி.செல்வராஜ தலைமை வகித்தார்.
பெரியகுளம் கிளைத்தலைவர் ஏ.எஸ்.பாலசுப்ரமணியம்,பெரியகு ளம் கிளைப் பொருளாளர்
திருமிகு.எஸ்.ஏ.செல்வராஜ்,சரஸ் வதி நடுநிலைப்பள்ளி தாளாளர் திருமிகு.எம் ராஜா ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச்செயலாளர் திருமிகு.வி.வெங்கட்ராமன்
வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர்
திருமிகு.மு.தியாகராஜன் மாநாட்டைத் துவக்கிவைத்துப்பேசினார்.
இளம் விஞ்ஞானிகள்
ஆய்வறிக்கை சமர்ப்பித்தல்: அதனையடுத்து
கம்பம், தேனி, கடமலை-மயிலை, போடி, பெரியகுளம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளி,துளிர்
இல்லங்களில் இருந்து மாணவர்கள் வானிலை மற்றும் காலநிலையை புரிந்து கொள்வோம்
எனும் மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.உத்தமபாளையம்
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் முனைவர்
எஸ்.பிரபு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயகத்தின் மாவட்ட தலைவர்
திருமிகு.பா.செந்தில்குமரன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு சிறந்த ஆறு ஆய்வுகளை
தேர்வு செய்தனர்.தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்ட மாணவர்கள் வரும் டிசம்பர்
7,8,9 புதுக்கோட்டை மொளண்ட் ஜியோன் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் மாநில
அள்விலான மாநாட்டில் தேனி மாவட்டம் சார்பில் கலந்து கொள்ள உள்ளனர்.
தேர்வான
ஆய்வுகள்: தமிழ்
முதுநிலை பிரிவில்
ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியரின்
காலநிலைமாற்றமும் உணவுப்பழக்கவழக்கங்களும் (குழுத்தலைவர்:எம்.ஜெயச்சித்ரா)
என்ற ஆய்வும் கம்பம் ஸ்ரீமுத்தையாபிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மேகமலை வனப்பகுதியில் சுற்றுச்சூழல்
மாறுபாடு(எஸ்.கொளதம்) என்ற ஆய்வும் கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர்
இல்ல மாணவர்களின் காலநிலை மாற்றமும்
எம்பகுதி மக்களும்(பா.சரவணக்குமார்)என்ற ஆய்வும் தேர்வுசெய்யப்பட்டன.
தமிழ் இளநிலை
பிரிவில் குண்டல்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் காலநிலை
மாற்றத்தால் விவசாய உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகளும்(பா.அபிநயா) என்ற
ஆய்வும் பெரியகுளம் டிரையம்ப் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் மண்புழு பற்றிய
ஆய்வும் மழைஅளவும்(எஸ்.முகமது வாஹித்) என்ற ஆய்வும் டி.வாடிப்பட்டி ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் கல்குவாரியாக மாறும் மலையும் அதன் விளைவுகளும்(நா.ஜீவித்குமார்)
என்ற ஆய்வும் தேர்வு செய்யப்பட்டன.
நிறைவுரை:பெரியகுளம்
ஒன்றிய கூடுதல் உதவித்தொடக்க அலுவலர் திருமிகு.மு.திலகவதி மற்றும் மாநிலச்
செயலாளர் திருமிகு தே.சுந்தர் ஆகியோர் தேர்வான இளம்விஞ்ஞானிகளுக்கு சான்றிதழ்
வழங்கி பாராட்டிப் பேசினர்.பெரியகுளம் கிளைச் செயலாளர் திருமிகு.எஸ்.ராம்சங்கர்
நன்றியுரை வழங்கினார். மாவட்டப்பொருளாளர் ஜெ.மஹபூப் பீவி,மாவட்ட இணைச் செயலாளர்
திருமிகு.எஸ்.ஞானசுந்தரி,மாவட்ட செயற்குழு உறுப்பினர்
திருமிகு.எம்.மணிமேகலை.ஓவியர் பாண்டி ஆகியோர் மாநாட்டினை ஒருங்கிணைத்தனர்.ஆசிரியர்கள்,
மாணவர்கள், இயக்கப்பொறுப்பாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.