முதல் பக்கம்

Dec 13, 2016

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேனி குழந்தைகள் தேர்வு

24வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.. அதில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் இளநிலை, முதுநிலை இரு பிரிவுகளில் தமிழகம் முழுவதுமிருந்து 200க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சிறந்த 30 ஆய்வுக்கட்டுரைகள் தேசிய மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டன.

அதில் நம்முடைய தேனி மாவட்டத்திலிருந்து பெரியகுளம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் கணிதமேதை சகுந்தலாதேவி துளிர் இல்ல மாணவி எ.பி.ஆர்த்திகா தலைமையிலான குழுவினரின் “நலிந்துவரும் தென்னை விவசாயத்தில் காலநிலையின் தாக்கம்” என்ற ஆய்வும் ஒன்று.. இக்குழந்தைகளுக்கு முன்னாள் குடியரசுத் தலைவரும் அனைவரின் பாசத்திற்குரிய விஞ்ஞானியுமான டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் விஞ்ஞானி பொன்ராஜ் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் வருகின்ற 27-31 தேதிகளில் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நடைபெறக்கூடிய தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்று தங்களது ஆய்வறிக்கையினைச் சமர்ப்பிக்க உள்ளனர்.. நம்முடைய நாட்டின் குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சான்றிதழ்களை வழங்குவர்..


தேசிய அளவிலான மாநாட்டில் கலந்துகொள்ளக்குடிய குழந்தை விஞ்ஞானிகளையும் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள் எஸ்.ஞானசுந்தரி மற்றும் எம்.கே.மணிமேகலை ஆகியோரையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தே.சுந்தர், மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன், மாவட்டச் செயலாளர் வி.வெங்கட் ஆகியோரின் சார்பில் வாழ்த்துகிறோம்..

Jul 5, 2016

100% தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளுக்கு தேனியில் பாராட்டு விழா

தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட அளவில் பத்து, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளுக்கான பாராட்டு விழா நேற்று (04.07.2016) தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது..
கல்வியில் ஆண்டுக்காண்டு தனியார் மயமும், ஆங்கில மோகமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.. அதன் விளைவாய் மக்களும் அரசுப் பள்ளிகளுக்கு மாற்றாக தனியார் பள்ளிகளையெ தேர்வு செய்கின்றனர்.. இதனால் அரசு துவக்கப்பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் மிகக் குறைந்த அளவிலான மாணவர்களே பயின்று வரக்கூடிய சூழல் உருவாகிறது.. நாளடைவில் அடைக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது..

அரசுப் பள்ளிகளால் மட்டுமே அனைவருக்கும் தரமான சமமான கல்வியை வழங்க முடியும்.. பாகுபாடற்ற சமத்துவ சமுதாயத்திற்கான அடையாளமாக அரசுப்பள்ளிகளே திகழ்கின்றன.. அரசுப்பள்ளிகள் நமது பள்ளிகள், அரசுப்பள்ளிகள் மக்களுடைய பள்ளிகள்.. அவற்றைப் பாதுகாக்க வேண்டும்.. பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அரசுப்பள்ளிகள் பாதுகாப்பிற்காக கையெழுத்து இயக்கம், ஆய்வுகள் என பலகட்ட முயற்சிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மேற்கொண்டு வருகின்றது.. அதன் ஒருபகுதியாக மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற சுமார் 1500 அரசுப்பள்ளிகளுக்கான பாராட்டு விழாக்களை நடத்தி வருகின்றது..
தேனியில் நடைபெற்ற விழாவிற்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார்.. மாவட்டத்துணைத் தலைவர்கள் அம்மையப்பன், சேசுராஜ், மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. மாவட்டச் செயலாளர் வெங்கட்ராமன் வரவேற்றார்.. அறிவியல் இயக்கத்தின் மாநிலக் கல்வி ஒருங்கிணைப்பாளர் தே.சுந்தர் துவக்கவுரையாற்றினார்..

தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எம். வாசு அவர்கள் சிறப்புரையாற்றினார்.. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பாலுமுத்து, பெரியகுளம் மாவட்டக் கல்வி அலுவலர் செல்வன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் இராகவன், பள்ளித் துணை ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 100% தேர்ச்சி பெற்ற சுமார் 65 பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், நினைவுப்பரிசினை வழங்கினர்.. அறிவியல் இயக்க மாவட்டப் பொருளாளர் ஞானசுந்தரி நன்றி கூறினார்..
10, 12 வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற 65 பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / உதவி ஆசிரியர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் பாண்டி, ஸ்ரீதர், ஜெகநாதன், முருகேசன், ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்..



Jun 9, 2016

கம்பம் கிளை செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளைச் செயற்குழு கூட்டம் ஜூன் 9 அன்று மாலை ஆறு மணி அளவில் கம்பம் கோட்டை மைதானத்தில் நடைப்பெற்றது. கம்பம் கிளைத்தலைவர் திருமிகு.ஜி.பாண்டி தலைமை தாங்கினார். பெருளாளர் மொ.தனசேகரன் வரவேற்றார். கிளையின் கட ந்த கால பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கிளையின் இணைச்செயலாளர் திருமிகு சுரேஷ் கண்ணன் அவர்களது பள்ளீயில் நடைப்பெற்ற மேம்பாட்டு பணிகள் குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி ஓவியப்பணியில் ஈடுபட்ட கிளைத்தலைவர் ஜி.பாண்டி அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அடுத்த கட்ட பணிகளாக துளிர் இல்ல மாண்வர்களூக்கான அறிவியல் படங்கள் திரையிடல், துளிர் இல்ல மாணவர்களுக்கான அறிவியல் நாடக பயிற்சி மற்றும் கம்பம் கிளை அளவிலான துளிர் அறிவியல் வினாடி வினா போட்டி குறித்து விவாதிக்கப்பட்டது.. மாவட்ட செயலாளர் வெங்கட், மாநிலச் செயலாளர் தே.சுந்தர் மற்றும் சோமனாதன் சரவணன் உட்பட செயற்குழுஉறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

May 15, 2016

தரமான கல்வி சமமாக வேண்டும் - வேட்பாளர் சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி உபகுழு சார்பில் தரமான கல்வி சமமாக வேண்டும் எனும் முழக்கத்தோடு மே 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களை சந்தித்து நமது கோரிக்கை மனுக்களை அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களையும் சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த பிரச்சார இயக்கத்தில் மாநிலச்செயலர் தே.சுந்தர் மாவட்ட செயலர் வி.வெங்கட் மற்றும் மாவட்ட இணைச்செயலர் தெய்வேந்திரன் கம்பம் கிளைத்தலைவர் ஜி.பாண்டி கூடலூர் கிளைத்தலைவர் சீனிவாசன் கிளை இணைச்செயலர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நமது கோரிக்கைகள் அடங்கிய புதிய ஆசிரியன் மே இதழ் 150 பெறப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டது

May 9, 2016

புதன் இடை மறிப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கூடலூர் நகரக்கிளை சார்பில் மே 9 அன்று மாலை 5 ,மணிக்கு குரு டிரெயினிங் அகாடமியில் நடைப்பெற்றது.கூடலூர் கிளை இணைச்செயலாளர் போ.பிரபாகரன் மற்றும் பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.மாவட்ட செயலாளர் வி.வெங்கட் கருத்தாளராக கல ந்து கொண்டு புதன் இடைமறிப்பு குறித்து விளக்கம் அளித்தார்.  சரவணன் குழந்தைகளுடன் உரையாடினார். இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்

May 6, 2016

கூடலூர் நகரக்கிளை கூட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கூடலூர் நகரக்கிளைக் கூட்டம் மே 6 அன்று மாலை 5 மணி அளவில் கூடலூர் குரு டிரெயினிங் அகாடமியில் நடைப்பெற்றது. கிளைத்தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார் கிளைச்செயலாளர் சூரியபிரகாஷ் வரவேற்றார். மாவட்ட செயற்குழு முடிவுகள் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. ஆண்டிபட்டி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்தித்து நமது கோரிக்ககை மனுக்கள் அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. மே 9 நடைபெற உள்ள புதன் இடைமறிப்பு நிகழ்ச்சியை குரு டிரெய்னிங் அகாடமியில் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. மாநிலச்செயலர் தே.சுந்தர் மாவட்ட செயலர் வி,வெங்கட் கமபம் கிளை செயலர் க.முத்துக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிளை இணைச்செயலர் பிரபாகரன் நன்றி கூறினார்.

Apr 30, 2016

மாவட்டசெயற்குழு கூட்டம் 2

தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் ஏப்ரல் 30ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணி அளவில் தேனி கருணா பயிற்சி மையத்தில் நடைப்பெற்றது. மாவட்டத்தலைவர் திருமிகு பா.செந்தில்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் எஸ் ஞானசுந்தரி முன்னலை வகித்தார். மாநிலச் செயலாளர் திருமிகு.எல்.நாராயணசாமி மற்றும் தே.சுந்தர் கலந்து கொண்டனர்.வேலை பகிர்மானம், நிதி பகிர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர் ஆர்.மகேஸ், எஸ்.ஜேசுராஜ் துணைச் செயலாளர் தெய்வேந்திரன் மற்றும் ஆர் மணிமேகலை,தேனி கிளை செயலர் ஜெகநாதன் உட்பட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கல்வி உபகுழு சார்பில் ”தரமான கல்வி சமமாக வேண்டும்” முழக்கத்தோடு மே 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களை சந்தித்து நமது கோரிக்கை மனுக்களை அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.. பொறுப்பு கிளைகளை இயக்குவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது

Mar 26, 2016

விஞ்ஞானி சந்திப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி ஒன்றியக்கிளை சார்பாக குழ ந்தைகளுடான விஞ்ஞானி சந்திப்பு நிகழ்ச்சி தேனி ஒன்றியம் லட்சுமிபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் மார்ச் 26 அன்று மதியம் 3 மணி அளவில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் சென்னை சி.எஸ்.ஐ.ஆர் மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் ஐயப்பன் அவர்கள் கல ந்து கொண்டு குழந்தைகளின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் சிறப்புடன் உரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் தே.சுந்தர் மாவட்ட செயலாளர் வி,வெங்கட் மாவட்ட இணைச்செயலர் எஸ்.தெய்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேனி கிளைச் செயலர் டிருமிகு.ஜெகநாதன் மற்றும் கிளை செயற்குழு உறுப்பினர் கரியன் ஆகியோர் செய்திருந்தனர் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

Mar 12, 2016

புத்தகக் கண்காட்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் ஒன்றியக்கிளை சார்பில் மார்ச் 12 சனி அன்று கம்பம் குலாலர் மண்டபத்தில்ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைப்பெற்ற சேமநலநிதி விழாவில் புத்தகககண்காட்சி நடைப்பெற்றது.கமபம் கிளைத்தலைவர் ஜி,பாண்டி கிளை இணைச்செயலர் சுரேஷ்கண்ணன் கம்பம் கிளை செயற்குழு உறுப்பினர் மொ.ஜெகநாதன் மற்றும் ஆர்வலர் கோகுல் ஆகியோர் புத்தககண்காட்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

Mar 8, 2016

மகளிர் தின போட்டிகள் அறிவிப்பு

கூடலூர் : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் வெங்கட் அறிக்கை: கட்டுரைப்போட்டி: 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, தலைப்பு-கல்வியல்லாப் பெண்கள் களர் நிலம் போன்றவர்கள்.கவிதை: 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, தலைப்பு - அணைகளை உடையுங்கள், ஆறுகள் பாடட்டும்.கவிதை: ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, தலைப்பு- புவியை பொதுவில் நடத்து.கதை: எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு, தலைப்பு-பறக்க மறந்த பறவை. சிறந்த படைப்புகளுக்கு மாவட்டம், மாநில அளவில் பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேற்கண்ட தலைப்புகளின் படைப்புகள் மார்ச் 20க்குள் வெங்கட், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கதவு எண் 6, சவுடம்மன் கோயில் தெரு, கூடலூர், தேனி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு 94886 83229 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Mar 7, 2016

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உலக மகளிர் தின போட்டிகள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் போட்டிகள்...


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் உலகம் முழுவதும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. குடும்பம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்கு தினமும் மனதில் நினைத்து போற்றுதலுக்குரியது. உலகம் பெண்களால் இயங்குகிறது என்பது புதுமொழி.பெண்களின் பெருமைகளை போற்றும் வகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்கும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போட்டிகளை அறிவித்துள்ளது...

அதன் விவரம் பின்வருமாறு...

கட்டுரைப்போட்டி
6,7,8 ஆம் வகுப்பு மாணவர்கள்-தலைப்பு:கல்வியில்லாப் பெண்கள் களர் நிலம் போன்றவர்கள்..

கவிதைப்போட்டி
9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள்
தலைப்பு: அணைகளை உடையுங்கள், ஆறுகள் பாடட்டும்..

கவிதைப்போட்டி
ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள்
தலைப்பு: புவியை பொதுவில் நடத்து....

கதைப்போட்டி
எழுத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள்
தலைப்பு: பறக்க மறந்த பறவை ..


சிறந்த படைப்புகளுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.. மேற்கண்ட தலைப்புகளில்


படைப்புகள் மார்ச் 20 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டிய முகவரி: வி.வெங்கட், மாவட்டச்செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 6/10வார்டு, சௌடம்மன் கோயில் தெரு, கூடலூர்-625518, தேனி மாவட்டம், மேலும் தொடர்புக்கு அலைபேசி: 9488683929

Mar 6, 2016

குழந்தைகள் வாசிப்பு முகாம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்டம் தேனி ஒன்றியக்கிளை சார்பாக குழந்தைகளுக்கான வாசிப்பு முகாம் நிகழ்ச்சி தேனி ஒன்றியம் லட்சுமிபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் மார்ச் 5 சனி அன்று நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட இணைச்செயலர் எஸ்.தெய்வேந்திரன் கிளை செயற்குழு உறுப்பினர் கரியன் ஆகியோர் கலந்து கொண்டனர். கொ.ம.க இளங்கோ அவர்கள் எழுதிய சிறுவர் இலக்கிய வரிசை புத்தகங்கள் வாசிப்பிறகு எடுத்துக்கொள்ளப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேனி கிளைச் செயலர் திருமிகு.ஜெகநாதன் செய்திருந்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.