முதல் பக்கம்

Sep 30, 2019

துளிர் அறிவியல் திருவிழா

பெரியகுளம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் துளிர் அறிவியல் திருவிழா நடைபெற்றது.. பாடல், கதை, எளிய அறிவியல் பரிசோதனைகள், மந்திரமா தந்திரமா என முழு நாள் நிகழ்வாகத் திட்டமிடப்பட்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது.. கருத்தாளர்களாக நண்பர்கள் வீரையா, முத்துக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பங்கேற்ற குழந்தைகள் அனைவருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள் மணிமேகலை, ஞானசுந்தரி ஆகியோர் செய்திருந்தனர். அவர்களுக்கு மாவட்ட மையத்தின் பாராட்டுகள்.. மாவட்ட, கிளை நிர்வாகிகள் பங்கேற்று இருக்க வேண்டும்.

Sep 20, 2019

பாவ்லோ பிரைரே பிறந்த நாள்

செப்.19 , மாற்றுக் கல்விச் சிந்தனையாளரான பாவ்லோ பிரைரே பிறந்த நாளை முன்னிட்டு பெரியகுளம் கிளை சார்பில் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நெல்லையப்பர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் ஞானசுந்தரி வரவேற்றுப் பேசினார். மாநிலச் செயலாளர் தே.சுந்தர் கருத்துரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், பொருளாளர் மணிமேகலை மற்றும் பெண் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். கிளைப் பொருளாளர் ராம்சங்கர் நன்றி கூறினார்.

Sep 8, 2019

புத்தகங்களுடன் தேநீர் விருந்து நிகழ்ச்சி..

செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் ஆசிரியர்கள் மத்தியில் கல்விசார்ந்த நூல்களை அறிமுகப்படுத்தும் பொருட்டும் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் பொருட்டும் மாநிலம் முழுவதும் புத்தகங்களுடன் தேநீர் விருந்து என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் கம்பம் கிளையின் சார்பில் செப்.5 அன்று மாலை ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாநிலச் செயலாளர் சுந்தர் தலைமை வகித்தார். பங்கேற்ற ஆசிரியர்கள் அவர்கள் வாசித்த நூல்களை அறிமுகப்படுத்திப் பேசினர். மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன் நன்றி கூறினார். கிளைச் செயலாளர் சுரேஷ் கண்ணன் ஒருங்கிணைத்தார்.
அதே நாள் தேனி முல்லை நகரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தேனி கிளையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு தேனி கிளைத் தலைவர் தாழைக்குமரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், இணைச் செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கிளைச் செயலாளர் ராம்குமார் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.
செப்.6 அன்று மாலை உத்தமபாளையம் கிளை சார்பில் ஞானம்மன்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிளைத்தலைவர் இப்ராகிம் தலைமை வகித்தார். கிளைப் பொருளாளர் சத்யா வரவேற்றார். மாநிலச் செயலாளர் சுந்தர், மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இணைச் செயலாளர் அருணா நன்றி கூறினார். அக்.5 சர்வதேச ஆசிரியர் தினத்தை கிளையின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டது.

Sep 3, 2019

ஆசிரியர் தினம்: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கட்டுரை, கவிதை, சிறுகதை போட்டி அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களுக்கு கட்டுரை, கவிதை மற்றும் சிறுகதை போட்டி நடைபெற உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈ.ஜெகநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

5 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு "தேர்வும் நானும்' என்ற தலைப்பிலும், 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு "நான் விரும்பும் வகுப்பறை' என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது. பள்ளி ஆசிரியர்களுக்கு "என்னமோ நடக்குது, மர்மமாக இருக்குது' என்ற தலைப்பிலும், கல்வி ஆர்வலர்களுக்கு "அரசுப் பள்ளிகள் இணைப்பும் அடைப்பும்' என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, "நின்னா தேர்வு, நடந்தா தேர்வு' என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும், கல்வி பொதுத் தலைப்பில் அனைத்துப் பிரிவினருக்கும் சிறுகதைப் போட்டி நடைபெறும்.

கட்டுரைகள் 3 பக்கங்களுக்கும், கவிதை 20 வரிகளுக்கும், சிறுகதை 4 பக்கங்களுக்கும் மிகாமலும், சொந்தப் படைப்பாகவும் இருக்க வேண்டும். படைப்புகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் தின விழா போட்டி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 5-தெற்குத்தெரு, கோட்டூர்-625 534 என்ற முகவரிக்கு தபால் மூலமும், ‌t‌n‌s‌f.‌k​a‌l‌v‌i‌k‌u‌l‌u@‌g‌m​a‌i‌l.​c‌o‌m என்ற மின்னஞ்சல் மூலமும் செப்டம்பர் 11 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். போட்டி முடிவுகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இணைய தளத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிடப்படும்.

போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த படைப்புகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். பரிசு பெற்ற படைப்புகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வெளியாகும் கல்வி மாத இதழில் பிரசுரிக்கப்படும் என்று அறிக்கப்பட்டுள்ளது.