செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் ஆசிரியர்கள் மத்தியில் கல்விசார்ந்த நூல்களை அறிமுகப்படுத்தும் பொருட்டும் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் பொருட்டும் மாநிலம் முழுவதும் புத்தகங்களுடன் தேநீர் விருந்து என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் கம்பம் கிளையின் சார்பில் செப்.5 அன்று மாலை ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாநிலச் செயலாளர் சுந்தர் தலைமை வகித்தார். பங்கேற்ற ஆசிரியர்கள் அவர்கள் வாசித்த நூல்களை அறிமுகப்படுத்திப் பேசினர். மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன் நன்றி கூறினார். கிளைச் செயலாளர் சுரேஷ் கண்ணன் ஒருங்கிணைத்தார்.
அதே நாள் தேனி முல்லை நகரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தேனி கிளையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு தேனி கிளைத் தலைவர் தாழைக்குமரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், இணைச் செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கிளைச் செயலாளர் ராம்குமார் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.
செப்.6 அன்று மாலை உத்தமபாளையம் கிளை சார்பில் ஞானம்மன்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிளைத்தலைவர் இப்ராகிம் தலைமை வகித்தார். கிளைப் பொருளாளர் சத்யா வரவேற்றார். மாநிலச் செயலாளர் சுந்தர், மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இணைச் செயலாளர் அருணா நன்றி கூறினார். அக்.5 சர்வதேச ஆசிரியர் தினத்தை கிளையின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment