கோவை : அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டம், குழந்தை தொழில் ஒழிப்பு, பெண் கல்வி ஆகியவற்றைக் குறித்து தெருமுனை நாடகம், நடனம், பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு செய் துள்ளது.
கோவை, தாமஸ் கிளப்பில் உள்ள அறிவொளி சங்கர் கட்டடத்தில் நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை பேசியதாவது: அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடகம், தெருமுனை பிரசாரம், பாடல்கள், வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகளின் உதவியுடன் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஒன்றியம் வாரியாக எட்டு கலைக்குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
இக்குழுக்களுக்கு வரும் 9 முதல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. கிராமங்களுக்கு செல்லும் இக்குழுக்கள் ஒரு நாளைக்கு நான்கு நிகழ்ச்சிகள் வீதம், 20 நாட்களில் 640 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவர். கல்வி உரிமைச் சட்டம், பெண் உரிமை, பெண் கல்வி, குழந்தை தொழில் ஒழிப்பு ஆகியவற்றை மையக் கருத்தாகக் கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பத்து லட்சம் மக்களிடம் கட்டாயக் கல்விச் சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, நடராஜன் பேசினார்.
ஆயத்தக் கூட்டத்தில், தமிழ்நாடு அறிவொளி இயக்க தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். இயக்கத்தின் மாவட்ட செயலாளர் பாதுஷா, வளர்கல்வி பொறுப்பாளர் ஜோதிராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

நன்றி : தினமலர்
No comments:
Post a Comment