முதல் பக்கம்

Feb 12, 2011

கல்வித் திருவிழா

பிப்ரவரி,11,2011 அன்று மாலை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கூடலூர் சீலையசாமி கோவில் வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்துடன் இணைந்து நடத்திய கல்வி உரிமைச் சட்டம் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் நிறைவுவிழா கல்வித் திருவிழாவாக நடைபெற்றது. முதல் நாள் மாலை சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் பிப்ரவரி,11 அன்று காலை பெண்களுக்கான கோலப்போட்டியும் நடைபெற்றது. 

விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் மண்டலக் கருத்தாளர் திருமிகு.மொ.பாண்டியராஜன் தலைமை தாங்கினார். கருப்புச் சட்டை நடராஜன் ஆசிரியர் துவங்கிவைத்தார். மாவட்டக்கருத்தாளர் க.முத்துக்கண்ணன் வரவேற்றார். அறிவியல் இயக்க கருத்தாளர் டி.கருணாநிதி பாடல்கள் பாடினார். அறிவியல் இயக்கத்தின் முன்னாள் பொறுப்பாளர் க.மா.சிவாஜி வாழ்த்துரை வழங்கினார். அறிவழகன், முனீஸ்வரன் ஆகியோர் தலைமையிலான இரண்டு கலைக்குழுக்களும் இணைந்து விழிப்புணர்வு நாடகங்களை அரங்கேற்றினர்.. இராஜசேகர் நன்றி கூறினார். அறிவியல் இயக்க நண்பர்கள் எஸ்.சிவாஜி, ஆர்.அம்மையப்பன், ப.மோகன்குமாரமங்கலம், ஜெயமுருகன் மற்றும் கூடலூரில் உள்ள வ.உ.சி.நடுநிலைப்பள்ளி, காமாட்சியம்மன் துவக்கப்பள்ளி, கள்ளர் துவக்கப்பள்ளி, புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, திருவள்ளுவர் துவக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.. மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் நினைவுப் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்..

No comments:

Post a Comment