முதல் பக்கம்

Feb 24, 2011

கல்வி உரிமை சட்ட விழிப்புணர்வு 25 லட்சம் மக்களை சந்தித்த கலைக்குழு

தினமலர்: பிப்ரவரி 10,2011

கம்பம் : கல்வி உரிமை சட்ட விழிப்புணர்வு கலைக்குழு பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது. தமிழ்நாட்டில் 25 லட்சம் மக்களை இந்த கலைக்குழுக்கள் சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது. கல்வி உரிமை சட்டம் 2010 விழிப்புணர்வு பிரசாரத்தை அனைவருக்கும் கல்வி இயக்கத்துடன் இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தியுள்ளது. சென்ற ஆண்டு பிப்., 23 ல் துவங்கிய இந்த பிரசாரத்தில் தமிழ்நாடு முழுவதும் 140 கலைக்குழுக்கள் பங்கேற்றன. 11 ஆயிரம் இடங்களில் 25 லட்சம் மக்களை சந்தித்து இந்த பிரசாரம் நடைபெற்றுள்ளது. பிரசாரத்தின் நோக்கம், இடைநின்ற மாணவர்களின் வயதிற்கேற்ற வகுப்புகளில் சேர்த்துக் கொள்ளுதல், அரசு பள்ளிகளில் பங்களிப்பை அதிகரித்தல், 6 முதல் 14 வயது பிள்ளைகளின் கல்வியை உறுதிப்படுத்துதல், உள்ளாட்சி அமைப்புகள் இதில் கவனம் செலுத்துதல், மாற்றுச் சான்றிதழ் இல்லையென்பதற்காக அட்மிஷன் மறுக்க கூடாது போன்ற விஷயங்களை விளக்குவதாகும்.

தேனி மாவட்டத்தில் இரண்டு கலைக்குழுக்கள் கடந்த 20 நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தன. இன்று கூடலூரில் நடைபெறும் நிறைவு விழா நிகழ்ச்சியுடன் பிரசாரம் முடிவிற்கு வருகிறது. தேனி மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் சுந்தர் கூறியதாவது: கல்வி உரிமை சட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது. ஒரு நாளைக்கு 20 கிராமங்கள் வீதம் கலைக்குழுக்கள் பிரசாரத்தில் ஈடுபட்டன. ஏராளமான பொதுமக்கள் கல்வி உரிமை சட்டம் பற்றி தெரிந்து கொண்டனர். கல்வி உரிமை சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை டில்லியில் உள்ள தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் கண்காணிக்கிறது என்றார்

No comments:

Post a Comment