தினமலர்: 24.11.2009
கம்பம்: அறிவியல் விழிப்புணர்வு திறன் அறிதல் போட்டியில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கான அறிவியல் விழிப்புணர்வு திறன் அறிதல் போட்டி லட்சுமிபுரம், தேனி, காமயகவுண்டன்பட்டி, கம்பம் ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளில் நடந்தது. தேனி மாவட்டத்தில் 300 மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். 6,7, 8 வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஒரு பிரிவாகவும், 9 முதல் 12 வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடந்தன.
இரண்டு மணி நேரம் நடந்த தேர்வில் 100 கேள்விகள் கேட்கப்பட்டது. மாவட்ட வாரியாக நடந்த இந்த தேர்வு விடைத் தாள்கள், அடுத்த வாரம் தஞ்சையில் மதிப்பீடு செய்யப்படுகிறது. தேர்வு பெறும் மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். சிறப்பாக தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்காக இந்த ஆண்டு அறிவியல் சுற்றுலா அழைத்து செல்ல அறிவியல் இயக்கம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
“மாணவர்களின் அறிவியல் ஆற்றலை அதிகரிக்கும் வகையில் இந்த சுற்றுலா இருக்கும்” என தேனி மாவட்ட அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தர் கூறினார்.
No comments:
Post a Comment