முதல் பக்கம்

Feb 18, 2011

கல்லூரியில் நியூட்ரினோ ஆய்வு குறித்து கலந்துரையாடல்

கம்பம், ஜன. 28:
தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் இந்தியன் நியூட்ரினோ ஆய்வு (ஐ.என்.ஓ.) குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் பேராசிரியர் ஜி.செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தே.சுந்தர் வரவேற்றார். ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி முதல்வர் காஜா முகைதீன் துவக்க உரையாற்றினார். தேவாரம் அருகே உள்ள பொட்டிப்புரத்தில் அமைய உள்ள இந்தியன் நியூட்ரினோ ஆய்வு மையம் குறித்து சென்னை கணித அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானி டி.இந்துமதி, மும்பை டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி தீபக்சாமுவேல் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி, உடையப்பா பொறியியல் கல்லூரி, ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி, ஆண்டிபட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளிகள், உத்தமபாளையம் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். நியூட்ரினோ ஆய்வு மையத்தில் நடைபெற உள்ள ஆராய்ச்சிகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து விஞ்ஞானிகள் விளக்கிக் கூறினர்.   நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கண்ணன் செய்திருந்தார்.

No comments:

Post a Comment