முதல் பக்கம்

Feb 13, 2011

நியூட்ரினோ ஆய்வு அலுவலகம் தேனியில் அமைக்க வலியுறுத்தல்

தினமலர்:
பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2010
கம்பம் :
நியூட்ரினோ ஆய்வுக் கூட மைய நிர்வாக அலுவலகத்தை மதுரையில் அமைப்பதை விட்டுவிட்டு தேனியில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.போடி அருகே உள்ள பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வு கூடம் அமைய உள்ளது. ஆய்வு கூடத்தின் மைய கட்டுப்பாட்டு அலுவலகம், மதுரையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் சுந்தர் கூறியதாவது: ஆய்வு கூடம் தேனி மாவட்டத்தில் உள்ள போது, அதன் நிர்வாக அலுவலகமும் தேனி மாவட்டத்தில் தான் அமைய வேண்டும். மதுரையில் அலுவலகம் அமைப்பதை தவிர்க்கவேண்டும். ஆய்வு கூடம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் அனைத்தும் தேனியை மையமாக வைத்தே மேற்கொள்ள வேண்டும் என்றார்.
*மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் ராஜப்பன் கூறியதாவது: நியூட்ரினோ ஆய்வு மையத்தால் தேனி மாவட்டம் உலக வரைபடத்தில் இடம் பெறும், அனைத்து அடிப்படை வசதிகளும் மக்களுக்கு கிடைக்கும் அரசு அறிவித்தது. ஆனால் தற்போது ஆய்வு மைய அலுவலகத்தை மதுரையில் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களிடம் கொடுத்துள்ள வாக்குறுதிப்படி அரசு தேனி மாவட்டத்தில் நிர்வாக அலுவலகம் அமைக்கவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment