முதல் பக்கம்

Oct 17, 2013

புத்தகக் கண்காட்சி

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போடி சரகத்திற்கு உட்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்டம் சார்பில் புத்தகக் கண்காட்சி 16-10-13(புதன்கிழமை) அன்று போடி அருகில் தருமத்துப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.போடி கிளை செயலாளர் திருமிகு ஸ்ரீதர் ஏற்பாடு செய்திருந்தார். அறிவியல் இயக்க ஆர்வலர்கள் திருமிகு பொ.சுரெந்தர் மற்றும் திருமிகு.தினேஸ்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் புத்தக விற்பனை செய்தனர்.ஆசிரியர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், விழாக்களில் தொடர்ந்து இலக்கினை கணக்கில் கொள்ளாமல் புத்தக விற்பனை செய்வது ஆரோக்கியமான விசயம் ஆகும்…

Oct 10, 2013

நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

சின்னமனூர் ஒன்றியம் மேலபூலானந்தபுரம் கிராமத்தில் உத்தமபாளையம் HKRH கல்லூரி மாணவர்களின் நாட்டுநலப் பணித்திட்ட முகாமில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அறிவியல் கல்வியின் அவசியம் குறித்த கருத்தரங்கம் அக்டோபர் 5 அன்று மாலை 3 மணி அளவில் நடைபெற்றது.மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேரா.முனைவர் முகமது செரீப் அறிவியல் கல்வியின் அவசியம் குறித்து மாணவர்களிடையே அறிமுகவுரை ஆற்றினார்.அறிவியலும் சமூகப்பார்வையும் எனும் தலைப்பில் மாவட்ட செயலாளர் திருமிகு.வி.வெங்கட் ராமன் உரையாற்றினார்.சமூகப் போராளி நரேந்திர தபோல்கர் படுகொலை குறித்தும் தமிழ்நாட்டில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவசரச் சட்டம் இயற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் மாணவர்களிடையே விளக்கப்பட்டது.மாணவர்களை ஆர்வமூட்டும் வகையில் அறிவியல் இயக்க பாடல்களை பாடியதோடு வாசிப்பின் அவசியம் உணரும் வகையில் மாணவர்களுக்கான புத்தகங்களை கம்பம் கிளை செயலாளர் திருமிகு. க.முத்துக்கண்ணன் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் முகமது மீரான் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர் திருமிகு முகமது உசைன் கான் ஆகியோர் கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Oct 6, 2013

Oct 4, 2013

அறிவியல் மாலை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை சார்பில் கம்பம் ஸ்ரீ முத்தையா பிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளியில் அக்டோபர் 3 அன்று மாலை 4 மணி அளவில் அறிவியல் மாலை நிகழ்ச்சி நடைபெற்றது.கம்பம் கிளை தலைவர் திருமிகு மா.சிவக்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமிகு.ஜி.பாண்டி வரவேற்புரை ஆற்றினார்.தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கவுள்ள மாணவர்களின் ஆய்வு செயல்பாடுகளையும் வழிமுறைகளையும் மாநிலக் கருத்தாளர் திருமிகு மொ.பாண்டியராஜன் அவர்கள் விளக்கிப் பேசினார்.மேலும் ஓரிகாமி மற்றும் எளிய அறிவியல் பரிசோதனைகளையும் மாணவர்களிடம் செய்து காட்டினார்.மாநிலச் செயலாளர் திருமிகு.தே.சுந்தர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே எடுத்துக்கூறினார்.கம்பம் கிளை செயற்குழு உறுப்பினர் திருமிகு. நந்தகுமார் நன்றி கூறினார்.50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அறிவியல் மாலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.