முதல் பக்கம்

Oct 10, 2013

நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

சின்னமனூர் ஒன்றியம் மேலபூலானந்தபுரம் கிராமத்தில் உத்தமபாளையம் HKRH கல்லூரி மாணவர்களின் நாட்டுநலப் பணித்திட்ட முகாமில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அறிவியல் கல்வியின் அவசியம் குறித்த கருத்தரங்கம் அக்டோபர் 5 அன்று மாலை 3 மணி அளவில் நடைபெற்றது.மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேரா.முனைவர் முகமது செரீப் அறிவியல் கல்வியின் அவசியம் குறித்து மாணவர்களிடையே அறிமுகவுரை ஆற்றினார்.அறிவியலும் சமூகப்பார்வையும் எனும் தலைப்பில் மாவட்ட செயலாளர் திருமிகு.வி.வெங்கட் ராமன் உரையாற்றினார்.சமூகப் போராளி நரேந்திர தபோல்கர் படுகொலை குறித்தும் தமிழ்நாட்டில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவசரச் சட்டம் இயற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் மாணவர்களிடையே விளக்கப்பட்டது.மாணவர்களை ஆர்வமூட்டும் வகையில் அறிவியல் இயக்க பாடல்களை பாடியதோடு வாசிப்பின் அவசியம் உணரும் வகையில் மாணவர்களுக்கான புத்தகங்களை கம்பம் கிளை செயலாளர் திருமிகு. க.முத்துக்கண்ணன் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் முகமது மீரான் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர் திருமிகு முகமது உசைன் கான் ஆகியோர் கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

No comments:

Post a Comment