முதல் பக்கம்

Oct 30, 2010

அறிவியல் இயக்கம்: மாவட்ட செயற்குழு கூட்டம்



தேனி மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் அக்டோபர்,28ம் நாள் மாலை 6 மணியளவில் தேனி பாரதி புத்தகாலய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் மு.தியாகராஜன் கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர் தே.சுந்தர் நடைபெற்ற/நடந்துகொண்டிருக்கும் வேலைகள் பற்றிய அறிக்கை சமர்ப்பித்தார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு, துளிர் அறிவியல் திறனறிதல் போட்டி ஏற்பாடுகள்,இளைஞர் அறிவியல் மாநாடு, துளிர் அறிவியல் மைய கிளை அமைப்பு, அனைவருக்கும் கல்வி இயக்கத்தோடு இணைந்து மேற்கொள்ளும் பணிகள்,தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வங்கி கணக்கு துவங்குதல் ஆகியன பற்றி விவாதிக்கப்பட்டது.

Oct 26, 2010

ரூ.960 கோடியில் "நியூட்ரினோ' ஆய்வுக்கூடம் ஐந்து ஆண்டுகளில் செயல்பட துவங்கும்

ரூ.960 கோடியில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் ஐந்து ஆண்டுகளில் செயல்பட துவங்கும்._தேவாரம்
நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில்
துவக்கப்படும். திட்ட மதிப்பீடான 960 கோடியில் அடுத்த ஐந்து ஆண்டுகளில்
ஆய்வுக்கூடம் செயல் பாட்டிற்கு வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். தேனி
மாவட்டம் தேவாரம் அருகே, அம்பரப்பர் கரடு பகுதியில் இந்தியன் நியூட்ரினோ
அப்சர்வேட்டரி(ஐ.என்.ஓ) அமைய உள்ளது. ஒரு கி.மீ., உயரம் மற்றும் சுற்றளவுள்ள
மலையை குடைந்து குகை அமைக்கப் பட உள்ளது. இந்த குகைக்குள் 50 டன் எடையுள்ள,
இரும்பு தகடு மற்றும் கண்ணாடி இழைகளால் ஆன மின்காந்தம் அமைக்கப்படவுள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய மின்காந்தமாக இது இருக்கும். இவ்வளவு எடையுள்ள
மின்காந்தம் அமைப்பதற்கு குகையை குடைவதால் சுற்றுச்சூழல் மாசுபடுமா,
சுற்றியுள்ள கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுமா என்ற அச்சம் குறித்து
மக்களிடம் விளக்க, ஆய்வுக்கூடம் அமையவுள்ள இடத்திற்கு அருகில் உள்ள
ராமகிருஷ்ணாபுரத்தில் தேனி மாவட்ட கலெக்டர் முத்துவீரன் தலைமையில் கலந்தாய்வு
கூட்டம் நடந்தது.
மும்பை டாடா அடிப்படை அறிவியல் விஞ்ஞான கழகத்தின் தலைவர் நவமண்டல் தலைமையிலான
விஞ்ஞானிகள் குழுவினர், விஞ்ஞானிகள் இந்துமதி, மூர்த்தி, மதுரை அமெரிக்கன்
கல்லூரி முதல்வர் சின்னாராஜ் ஜோசப் ஜெய்க்குமார் ஆகியோர் கிராம மக்களின்
சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். விஞ்ஞானி இந்துமதி பேசுகையில், ஐ.என்.ஓ.,
அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவக்கப் பட்டுள்ளன. வனத்துறை
உள்ளிட்டவர்களிடமிருந்து தடையில்லா சான்று வாங்கி மத்திய அரசின் அனுமதி
கிடைத்தவுடன் பணிகள் துவங்கும். இதற்கு ஆறு முதல் எட்டு மாதங்களாகும்.
இதையடுத்து நியூட்ரினோ ஆய்வுக்கூடம் துவக்கப்படும். திட்ட மதிப்பீடான 960
கோடியில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆய்வுக்கூடம் செயல் பாட்டிற்கு வரும்
என்றார். கலந்தாய்வு கூட்டத்தில் ஆய்வுக்கூடம் சம்மந்தமான கையேடு
வழங்கப்பட்டது. பிப்ரவரி 27 ல் தினமலர் நாளிதழில் வெளியான நியூட்ரினோ
ஆய்வுக் கூடத்தால் தேனி புகழ் பெறும் என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறிய
கருத்து தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரையை பிரிண்ட் செய்து கூட்டத்தில்
வினியோகித்தனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பற்றி...

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
விஞ்ஞானிகள், பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள்,
கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,
அரசு மற்றும் தனியார் நிறுவன
அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,
பெண்கள் மற்றும் மாணவர்களை
உறுப்பினர்களாகக் கொண்டு
அறிவியல் பரப்புதலை தலையாய
நோக்கமாகக் கொண்டு
இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும்
மேலாக செயல்பட்டு வரும் ஓர் தன்னார்வ அமைப்பாகும்..

அகில இந்திய மக்கள் அறிவியல்
கூட்டமைபபின் உறுப்பினராகவும்
மத்திய அரசின் தேசிய அறிவியல்
& தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின்
உறுப்பினராகவும் உள்ளது.
1980 முதல் செயல்பட்டு வரும்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும்
அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய
பங்காற்றியுள்ளது.
அதுமட்டுமின்றி மகளிர் சுய உதவிக்குழுக்கள்,
பொது சுகாதாரம் மற்றும் வளர்ச்சிப்பணிகளிலும்
கவனம் செலுத்தி வருகிறது.
தேசிய எழுத்தறிவுத்திட்டம்,
அறிவொளி திட்டச் செயல்பாடுகளை
முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன்
மூலம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
மாநிலம் முழுவதும் பரவலான
வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

கடந்த 17 ஆண்டுகளாக
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை
ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான
குழந்தைகளை எளிய அறிவியல்
ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது.

அகில இந்திய வானொலி
முலம் மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார்
நிறுவனத்தின் அறிவியல் நிகழ்ச்சியை
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
வாரந்தோறும் நடத்தி வருகிறது.

மத்திய அரசின்
தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப
பரிமாற்றக்குழுவின்
சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும்
சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக
UGC-யின் ஹரிஓம் விருதையும்
சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக
தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெற்றுள்ளது.
மேலும் ஊரகப் பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வுப் பணிகளுக்காக  
UNICEF_ன் பாராட்டையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெற்றுள்ளது.

18 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2010

18 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு_2010-2011
மையப் பொருள் : நிலவளங்கள்

தேனி மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வருகின்ற நவம்பர் 12 அன்று உத்தமபாளையம் HKRH கல்லூரியில் நடைபெற உள்ளது. மாநாட்டில் தேனி மாவட்ட ஆட்சியர் திருமிகு.பூ.முத்துவீரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். முதன்மைக்கல்வி அலுவலர் திருமிகு.க.செல்வக்குமார் அவர்களும் பங்கேற்க உள்ளார்.

அறிவியல் மாநாட்டுக்கான குறிப்புகள்.: காலை 9 மணிக்கு மாநாட்டிற்கான பதிவு துவங்கும். பதிவுக்கட்டணமாக ரூ.50 மட்டும் செலுத்தவேண்டும். ஆய்வு செய்யும் குழந்தைகள் 10-17 வயதினராய் இருக்க வேண்டும். அவர்களின் வயது டிசம்பர் 31 ம் நாள் என்ன வயதோ,, அதுவே அவர்களின் ஆய்வுக்குழுவின் வயதாகும்.10 -13 வயதினர் இளநிலை/கீழ் நிலை என்றும், 14 -17 வயதினர்,முது நிலை/ மேல்நிலை என்று சொல்லப் படும். இளநிலை மாணவர்கள் 2500 வார்த்தைகளிலும், முதுநிலை மாணவர்கள் 3500 வார்த்தைகளுக்கு மிகாமலும் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஒரு குழுவில் அதிக பட்ச வயது என்னவோ, அதுதான் அந்த குழுவின்வயதாகும். குழந்தைகள்,பள்ளியில் படிக்கலாம்.பள்ளியில் படிக்காமலும் இருக்கலாம். ஆனால் ஆய்வு செய்யலாம்.வயது மட்டுமே ஆய்வுக்கான நிர்ணயம். முறைசாரப்பள்ளி, இரவுப் பள்ளி, சிறார் பள்ளி, துளிர் இல்லத்திலிருந்தும் கூட ஆய்வுகள்செய்யலாம். ஆய்வு பதிவு செய்த உடனேயே, சுமார் ஒரு பக்கத்தில், ஆய்வு பற்றி எழுதி மாநில மையத்திற்கு அனுப்ப வேண்டும். குழந்தைகள், கட்டாயமாய் 3-5 பேர் கொண்ட குழுவாகத்தான் செய்ய வேண்டும். தனி ஒருவராக ஆய்வு அறிக்கை தயார் செய்ய கூடாது. ஆய்வறிக்கைக்கு உதவிட, ஒரு வழிகாட்டி ஆசிரியர் வேண்டும். அவர் பள்ளி ஆசிரியராகவோ, துளிர் இல்ல பொறுப்பாளராகவோ இருக்கலாம். பொதுவாக சோதனை முறையில் ஆய்வு செய்தால்,அதனை சரியாக முறைப்படி செய்ய வேண்டும். ஆய்வின் கருத்து புதிதான, எளிதான, செயல் முறையுடன் கூடியதாய், கூட்டு செயல்பாட்டுடன் இருக்க வேண்டும். ஆய்வு செய்யும் விஷயங்கள், உள்ளூர் பிரச்சினைகளை மையமாக வைத்து, தகவல்கள், கணக்கெடுப்பு ,சோதனைகள் போன்றவற்றை தங்களின் மாவட்டத்துக்குள்ளேயே தெரிவு செய்து, ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

மாவட்ட எல்லை தாண்டுதல் கூடாது. தலைப்பே தன்னிலை விளக்கம் தருவதாக இருக்க வேண்டும். புள்ளிவிபரங்கள் போதுமானதாக இருக்க வேண்டும். புள்ளிவிபரம்/கணக்கெடுப்பு, நேர்காணலுக்கான வினாத்தாள் தயாரிக்கும்போது, அதில் குறைந்த பட்சம் 20 வினாக்கள் இருக்க வேண்டும். அதே போல் ஆய்வுக்காக நேர்காணல் செய்யப்படும் நபர்கள், குறைந்தது 50 நபராவது இருக்க வேண்டும்கட்டாயமாக , மனிதனின் மேலோ, மனிதன் உண்ணும், குடிக்கும் எந்த பொருளிலும்ஆய்வு செய்யக் கூடாது. மேலும், மருத்துவம், மருந்துகள் , வியாதி தொடர்பாகவும்ஆய்வு செய்யக்கூடாது.

ஆய்வறிக்கையை இணையதளத்தில் இருந்து இறக்கி போடக்கூடாது. ஆய்வறிக்கையை கையால் எழுதலாம்; தட்டச்சும் செய்யலாம். ஆய்வறிக்கையில் அதிகபட்சமாக 4 நிழற்படங்கள் / அட்டை/விளம்பரப் படம்மட்டுமே இருக்க வேண்டும். அதிகபட்சமாக உள்ள நிழற்படங்கள் / அட்டைக்கு எவ்வித மதிப்பீடும் கிடையாது. கட்டாயமாக VCD அனுமதிக்கப்பட மாட்டாது. ஆய்வறிக்கைக்கானசெலவைரூ.250க்கு மேல் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆய்வறிக்கையின் போது கட்டாயமாக தினசரி LOG book எழுத வேண்டும்(தினசரி நாட்குறிப்பு போல)

மாநாட்டின் போது, ஆய்வின் சுருக்கம், ஆங்கிலத்தில் 250 வார்த்தைகள்தட்டச்சு செய்து மாவட்ட ஒருங்கிணைப்பாளரிடம் கொடுக்க வேண்டும். மாவட்ட மாநாட்டின் பொது கட்டாய மாக log book சமர்ப்பிக்க வேண்டும். LOG book இல்லாத குழந்தைகள் மாநாட்டில் பங்கெடுக்க முடியாது. ஒவ்வொரு மாநாட்டுப் பிறகும் குழந்தைகள் ஒரு 5 பக்கம்மாநாட்டிற்குப்பின் என்ன செய்தார்கள் என்பது பற்றிய Follow -up Action பற்றிய தகவல் கட்டாயமாய் இணைக்க வேண்டும். இதனை தனியாக மதிப்பீடு செய்வார்கள். குழந்தை விஞ்ஞானிகள் மாநாட்டிற்குப்பின் சமூகத்திடம் எவ்வாறு சென்று செயல் படப் போகிறார்கள் என்பதனையும், மாநாட்டில் அவசியம் சொல்லவேண்டும்.

குழந்தை விஞ்ஞானிகள் ஆய்வறிக்கையை, நேர்காணலின் போது 8 நிமிடத்தில்சொல்லி முடிக்க வேண்டும்.வழிகாட்டி ஆசிரியர்கள் குழந்தை விஞ்ஞானிகளை ஆய்வறிக்கை சொல்லும்போது, நாங்கள் , செய்தோம், கண்ணன் குழி தோண்டினான், நான் மண் போட்டேன், கலா விதைப்போட்டு தினம் நீர் ஊற்றினாள் என குழுவின் அனைத்து குழந்தைகளையும் இணைத்துப் பேச பழக்க வேண்டும். ஏனெனில் இது ஒரு கூட்டு செயல்பாடு என்பதும், கூட்டு செயல்பாடு , நடவடிக்கைக்கு தனியான மதிப்பீடு உண்டு என்பதை, குழந்தை விஞ்ஞானிகளும், வழிகாட்டி ஆசிரியர்களும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும்அவசியம்.

அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் வினாடி வினா போட்டி

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2010

கம்பம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் வினாடி வினா போட்டிகள்ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நடந்தது. மாவட்ட துணை தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுக் குழு உறுப்பினர்ஸ்ரீராமன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுந்தர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அனுசுயா பேசினார். போட்டிகளில் 6,7,8 வகுப்பு பிரிவுகளில் முதல்இடத்தை கூடலூர் வ.உ.சி. பள்ளியும், இரண்டாம் இடத்தை ராயப் பன்பட்டி எஸ்.யூ.எம். பள்ளியும், மூன்றாம் இடத்தை க.புதுப்பட்டி ஏ.எல்.வி பள்ளியும்பெற்றது. 9, 10 ம் வகுப்புகளுக்கான பிரிவில், முதல் இடத்தை கூடலூர்என்.எஸ்.கே.பி. பள்ளியும், இரண்டாம் இடத்தை திருவள்ளுவர் பள்ளியும், மூன்றாம்இடத்தை கம்பம் அரசு பெண்கள் பள்ளி, எஸ்.யூ.எம். பள்ளிகளும் பெற்றன. 11, 12 ம்வகுப்பு பிரிவில் கே.கே.பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் பள்ளி முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தை என்.எஸ்.கே.பி., பள்ளியும், மூன்றாம் இடத்தை திருவள்ளுவர்பள்ளியும் பெற்றது.

மதுரை துளிர் அறிவியல் இயக்கத்தின் இயக்குனர் தியாகராஜன், மாநில கல்விக் குழுஉறுப்பினர் அமலராஜன் பரிசுகளை வழங்கினர். பேராசிரியர்கள் வாணி, சந்திரா,ஆசிரியர்கள் சுரேந்தர், முத்துக்கண்ணன் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர்வெங்கட்ராமன் நன்றி கூறினார்.

நன்றி: தினமலர், கம்பம்

பறவைகளைப் பாதுகாப்போம்


Dear All,
Many Birds die in summer without water. Save them..
Please put water pots for thirsty Birds at Balcony / Window etc...
Please forward to friends.

Oct 25, 2010

இளைஞர் அறிவியல் மாநாடு_2010-11

ஆய்வுகளைச் சமர்ப்பிக்க அழைப்பு:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விஞ்ஞானிகள், பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு மற்றும் தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள், பெண்கள் மற்றும் மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஓர் தன்னார்வ அமைப்பாகும்..

அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. அதுமட்டுமின்றி மகளிர் சுய உதவிக்குழுக்கள்,பொது சுகாதாரம் மற்றும் வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது.

தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. அகில இந்திய வானொலி முலம் மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தின் அறிவியல் நிகழ்ச்சியை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வாரந்தோறும் நடத்தி வருகிறது.

மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்ச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெற்றுள்ளது. மேலும் ஊரகப் பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வுப் பணிகளுக்காக UNICEF_ன் பாராட்டையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெற்றுள்ளது. தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டைப்போல ஒவ்வொரு ஆண்டும் இளைஞர் அறிவியல் மாநாட்டை நடத்துவதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திட்டமிட்டுள்ளது.

இந்திய திருநாட்டின் இளைஞர்கள் நமது சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது புரிதலுக்கு நமது நாட்டின் கல்வி,அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகள் துணைநிற்கின்றன. பள்ளி,கல்லூரி போன்ற முறைசார் கல்வி நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் அனுபவங்கள் அவர்களுக்கு உதவி புரிகின்றன. ஆனாலும் கள ஆய்வுகள்,அனுபவங்கள், பரிசோதனைகள் மூலமாக மட்டுமே அவர்களது புரிதல் வலுப்படும். எனவேதான் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர் அறிவியல் மாநாட்டை நடத்துவதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திட்டமிட்டுள்ளது.




கடந்த ஆண்டு முதலாவது இளைஞர் அறிவியல் மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. 2வது மாநாடு மதுரையில் வருகின்ற 2011,பிப்ரவரி மாதம் 28ந்தேதி தேசிய அறிவியல் தினத்தன்று நடைபெற உள்ளது. பொதுத்தலைப்பு: இயற்கை,அறிவியல் மற்றும் சமூகம்

தகுதி: 17–21 வயது வரையுள்ள கலை,அறிவியல்,பொறியியல்,தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் பங்கேற்கலாம். உயர்கல்வி தொடர முடியாத ஆர்வமுள்ள இளைஞர்களும் பங்கேற்கலாம்.

குழு: 2 முதல் 4 பேர் வரையிலான குழுவாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.இக்குழுவிற்கு கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள் வழிகாட்டியாகச் செயல்படலாம். ஒரு கல்லூரியிலிருந்து அதிகபட்சம் 3 ஆய்வுகள் பங்கேற்கலாம்.

17-21 வயது வரையிலான இளைஞர்கள் தங்களது படைப்பாற்றலை, புதுமையாகச் சிந்திக்கும் திறனை, அறிவியலை சமூகத்தோடு தொடர்புபடுத்தும் ஆற்றலை பகிர்ந்து கொள்ளும் இடமாகவும் இம்மாநாடு அமையும். இளைஞர்கள் செய்யும் ஆய்வுகள் பின்வரும் துணைத்தலைப்புகளுக்குள் அடங்கவேண்டும்.

  1. • கல்வி முறைகள்
  2. • அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவுகள் 
  3. • மக்கள் வாழ்வும் மூடநம்பிக்கைகளும்- அதற்கான தீர்வுகள்
  4. • சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  5. • நகரமயமாதல் மற்றும் தொழில்மயமாதல்
  6. • ஊரக மேம்பாடு
  7. • சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்
  8. • பெண்கள் மேம்பாடு
சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு அறிவியல் அடிப்படையிலான தீர்வுகளை முன்வைக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பது, பிரச்சினைகளை அறிவியல் பார்வையுடன் உற்றுநோக்கச் செய்வது, முன்மாதிரிகளை உருவாக்குவது, களச்செயல்பாடு, ஆய்வு,சோதனைகளின் அடிப்படையில் நடைமுறை சாத்தியமான புதிய மாற்றுக்களை உருவாக்குவது ஆகிய நோக்கங்களை நிறைவேற்றும் வண்ணம் இம்மாநாடு அமையும்.

எனவே ஆய்வுகள் புதியதாக, எளிமையாக, நடைமுறைக்கு உகந்ததாக இருக்கவேண்டும். அன்றாட வாழ்வியல் நடைமுறை சார்ந்ததாக இருக்கவேண்டும். அறிவியல் அணுகுமுறையோடு தீர்வுகளைச் சொல்வதாகவும் தொடர்செயல்பாடுகளைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும். ஒவ்வொரு துறையிலிருந்தும் 50 ஆய்வுகள் மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்படும். அதிலிருந்து துறைவாரியாக 10 ஆய்வுகள் விருதிற்காக தேர்வு செய்யப்படும். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். 

எனவே ஆர்வமுள்ளவர்கள் வருகின்ற டிசம்பர் 10ம் தேதிக்குள் பதிவுப்படிவத்தையும்ஆய்வுச்சுருக்கத்தையும் அனுப்பி வைக்கவும். மேலும் பதிவுக்கட்டணமாக ரூ.100க்கு TAMILNADU SCIENCE FORUM என்ற பெயரில் மதுரையில் மாற்றத்தக்கதாக Demand Draft எடுத்து அனுப்பி வைக்கவும்.

மேலும் விபரங்களுக்கு: முனைவர்.ஜி.செல்வராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், இளைஞர் அறிவியல் மாநாடு(YSF-TNSF), HKRH கல்லூரி, உத்தமபாளையம். செல்:9865073411 மின்னஞ்சல்: rajseldr_1960@yahoo.com

“Let us Discover our Society”
Youth Science Festival-2010-11
Organised by: Tamil Nadu Science Forum (TNSF)





Registration Form

1. Title of the Project:
Area of Study: Natural Science/ Social Science/ Engineering/ Technology
(Tick the appropriate study area)
3. Name Class Age
----------------------------------------- -------------- --------
------------------------------------------ --------------- --------
----------------------------------------- ---------------- --------
----------------------------------------- --------------- -------
4. Contact Person of the Team:
Name, address, email, mobile/phone :



5. Name of the Institution/Organisation :

6. Name, address, email, mobile/phone of the Guide
--------------------------------------------------------------------
7. Fee details: DD------------------------------------
8. Signature of the Team Members:

9. Signature of the Guide:

(This form may be duplicated) www.tnsftheni.blogspot.com