தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
விஞ்ஞானிகள், பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள்,
கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,
அரசு மற்றும் தனியார் நிறுவன
அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,
பெண்கள் மற்றும் மாணவர்களை
உறுப்பினர்களாகக் கொண்டு
அறிவியல் பரப்புதலை தலையாய
நோக்கமாகக் கொண்டு
இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும்
மேலாக செயல்பட்டு வரும் ஓர் தன்னார்வ அமைப்பாகும்..
அகில இந்திய மக்கள் அறிவியல்
கூட்டமைபபின் உறுப்பினராகவும்
மத்திய அரசின் தேசிய அறிவியல்
& தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின்
உறுப்பினராகவும் உள்ளது.
1980 முதல் செயல்பட்டு வரும்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும்
அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய
பங்காற்றியுள்ளது.
அதுமட்டுமின்றி மகளிர் சுய உதவிக்குழுக்கள்,
பொது சுகாதாரம் மற்றும் வளர்ச்சிப்பணிகளிலும்
கவனம் செலுத்தி வருகிறது.
தேசிய எழுத்தறிவுத்திட்டம்,
அறிவொளி திட்டச் செயல்பாடுகளை
முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன்
மூலம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
மாநிலம் முழுவதும் பரவலான
வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.
கடந்த 17 ஆண்டுகளாக
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை
ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான
குழந்தைகளை எளிய அறிவியல்
ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது.
அகில இந்திய வானொலி
முலம் மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார்
நிறுவனத்தின் அறிவியல் நிகழ்ச்சியை
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
வாரந்தோறும் நடத்தி வருகிறது.
மத்திய அரசின்
தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப
பரிமாற்றக்குழுவின்
சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும்
சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக
UGC-யின் ஹரிஓம் விருதையும்
சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக
தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெற்றுள்ளது.
மேலும் ஊரகப் பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வுப் பணிகளுக்காக
UNICEF_ன் பாராட்டையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment