ரூ.960 கோடியில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் ஐந்து ஆண்டுகளில் செயல்பட துவங்கும்._தேவாரம்
நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில்
துவக்கப்படும். திட்ட மதிப்பீடான 960 கோடியில் அடுத்த ஐந்து ஆண்டுகளில்
ஆய்வுக்கூடம் செயல் பாட்டிற்கு வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். தேனி
மாவட்டம் தேவாரம் அருகே, அம்பரப்பர் கரடு பகுதியில் இந்தியன் நியூட்ரினோ
அப்சர்வேட்டரி(ஐ.என்.ஓ) அமைய உள்ளது. ஒரு கி.மீ., உயரம் மற்றும் சுற்றளவுள்ள
மலையை குடைந்து குகை அமைக்கப் பட உள்ளது. இந்த குகைக்குள் 50 டன் எடையுள்ள,
இரும்பு தகடு மற்றும் கண்ணாடி இழைகளால் ஆன மின்காந்தம் அமைக்கப்படவுள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய மின்காந்தமாக இது இருக்கும். இவ்வளவு எடையுள்ள
மின்காந்தம் அமைப்பதற்கு குகையை குடைவதால் சுற்றுச்சூழல் மாசுபடுமா,
சுற்றியுள்ள கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுமா என்ற அச்சம் குறித்து
மக்களிடம் விளக்க, ஆய்வுக்கூடம் அமையவுள்ள இடத்திற்கு அருகில் உள்ள
ராமகிருஷ்ணாபுரத்தில் தேனி மாவட்ட கலெக்டர் முத்துவீரன் தலைமையில் கலந்தாய்வு
கூட்டம் நடந்தது.
மும்பை டாடா அடிப்படை அறிவியல் விஞ்ஞான கழகத்தின் தலைவர் நவமண்டல் தலைமையிலான
விஞ்ஞானிகள் குழுவினர், விஞ்ஞானிகள் இந்துமதி, மூர்த்தி, மதுரை அமெரிக்கன்
கல்லூரி முதல்வர் சின்னாராஜ் ஜோசப் ஜெய்க்குமார் ஆகியோர் கிராம மக்களின்
சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். விஞ்ஞானி இந்துமதி பேசுகையில், ஐ.என்.ஓ.,
அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவக்கப் பட்டுள்ளன. வனத்துறை
உள்ளிட்டவர்களிடமிருந்து தடையில்லா சான்று வாங்கி மத்திய அரசின் அனுமதி
கிடைத்தவுடன் பணிகள் துவங்கும். இதற்கு ஆறு முதல் எட்டு மாதங்களாகும்.
இதையடுத்து நியூட்ரினோ ஆய்வுக்கூடம் துவக்கப்படும். திட்ட மதிப்பீடான 960
கோடியில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆய்வுக்கூடம் செயல் பாட்டிற்கு வரும்
என்றார். கலந்தாய்வு கூட்டத்தில் ஆய்வுக்கூடம் சம்மந்தமான கையேடு
வழங்கப்பட்டது. பிப்ரவரி 27 ல் தினமலர் நாளிதழில் வெளியான நியூட்ரினோ
ஆய்வுக் கூடத்தால் தேனி புகழ் பெறும் என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறிய
கருத்து தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரையை பிரிண்ட் செய்து கூட்டத்தில்
வினியோகித்தனர்.
No comments:
Post a Comment