முதல் பக்கம்

Jul 8, 2012

3வது இளைஞர் அறிவியல் திருவிழா-2012


இயற்கை, விஞ்ஞானம் மற்றும் சமூகம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒரு தன்னார்வ அமைப்பு. குழந்தைகள், ஆசிரியர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, அறிவியல் கருத்தரங்குகள், குழந்தைகள் அறிவியல் திருவிழாக்கள், திறனறிதல் தேர்வுகள், அறிவியல் வினாடிவினா, எளிய அறிவியல் பரிசோதனைகள், ஓரிகாமி, வான்நோக்கல் நிகழ்ச்சிகள்  என ஏராளமான அறிவியல் விழிப்புணர்வுப் பணிகளைக் கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காகவும் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இளைஞர் அறிவியல் திருவிழாவை நடத்தி வருகிறது.

3வது மாநாட்டிற்கான மையக்கருத்து:

மூன்றாவது மாநாட்டிற்கான மையக்கருத்தாக இயற்கை, விஞ்ஞானம் மற்றும் சமூகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு கல்வி முறைகள், சமூகத்தின் மீது அறிவியல் தொழில்நுட்பத்தின் தாக்கம், மூடநம்பிக்கைகளை அகற்றுதல், சுற்றுச்சூழல் பாதுகாத்தல், நகர்மயமாதல் மற்றும் தொழில்மயமாதல், கிராமப்புற வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் மற்றும் பெண் சமத்துவம் ஆகிய தலைப்புகள் சார்ந்து பிரச்சினைகளை நெருக்கமாக உற்றுநோக்கி தெளிவாக ஆராய்ந்து பொருத்தமான கேள்விகளை எழுப்பி பின்பற்றத்தக்க மாதிரிகளை உருவாக்கலாம். தீர்வுகளை முன்மொழிதல், மாற்றுத்தீர்வுகளை முயற்சித்தல், கள ஆய்வுகள் செய்தல் மற்றும் பரிசோதனைகள் மூலம் ஆய்வுகள் செய்வது வரவேற்கத்தக்கது.

பங்கேற்கும் தகுதியுடையவர்கள்:

v 17-23 வரையுள்ள அனைவரும் (கல்லூரி செல்லாதவர்களும்கூட) பங்கேற்கலாம்.

v 2 முதல் 4 நபர்கள் குழுவாக இணைந்து செயல்படவேண்டும்.

v ஒரு ஆய்வுக்கு ஒரு வழிகாட்டி ஆசிரியர் இருக்கவேண்டும்.

vவழிகாட்டி ஆசிரியர் கல்லூரிப் பேராசிரியராகவோ, கல்வியாளராகவோ, சமூக ஆர்வலராகவோ இருக்கலாம்.

v ஒரு கல்லூரியில் இருந்து அதிகபட்சம் 3 ஆய்வுகள் சமர்ப்பிக்கலாம்.

ஆய்வுக்கட்டுரைகள் எப்படி இருக்க வேண்டும்? :

v ஆய்வுகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தயாரிக்கலாம்.

vஆய்வுகள் அவசியம் பதிவு செய்யப்படவேண்டும். ஒவ்வொரு ஆய்வுக்கும் பதிவுக்கட்டணமாக ரூ.100/-க்கு வரைவோலை Tamilnadu Science Forum என்ற பெயரில் சேலம் மாநகரில் மாற்றத்தக்கதாக எடுக்கவேண்டும்.

vபுதுமையான, எளிமையான மற்றும் நடைமுறைக்கேற்றவாறு ஆய்வுகள் இருத்தல் வேண்டும்.

vஅன்றாட வாழ்க்கைமுறைகளை, சூழ்நிலைகளை நன்கு ஆராய்ந்து முடிவெடுத்தல் வேண்டும்.

vகளப்பணி விபரங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

vதகுதியான,பொருத்தமான எளிய தொழில்நுட்பத்தை உருவாக்குதல் வேண்டும்.

vஅறிவியல் முறைகள் மூலம் திட்டமிட்ட பலன்கள் கிடைப்பதாக மைய வேண்டும்.

vநிச்சயமான தொடர் கண்காணிப்பு முறைகள் இருக்க வேண்டும்..

vஅனுப்பக்கூடிய ஆய்வுகள் ஆய்வுத்தலைப்பு, குழுத்தலைவர் பெயர், வழிகாட்டி ஆசிரியர் பெயர் மற்றும் பணிபுரியும் நிறுவனப்பெயர், பொருள், ஆய்வுச்சுருக்கம் (20வரிகளில்), கருத்து, வழிமுறை, முடிவு, விவாதங்கள், சான்றுகள் உள்ளிட்ட  தகவல்களுடன் இருக்கவேண்டும்.


மதிப்பீடு மற்றும் பாராட்டு:

vஉடல் ஆரோக்கியம், இயந்திரவியல் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல்- இவைகளுக்கு தனித்தனியாக ஆய்வுக்கட்டுரைகள் வழங்கப்படவேண்டும்.

vதேர்ந்தெடுக்கப்பட்ட பிரச்சினைகளின் முக்கியத்துவம், புள்ளி விபரங்கள் சேகரித்தல், ஆராய்தல், பரிசோதித்தல், பயன்படுத்துதல், தீர்விற்கு முயற்சித்தல், குழுவாக செயல்படுதல் இவற்றின் அடிப்படையில் ஆய்வுக்கட்டுரைகள் மதிப்பீடு செய்யப்படும்.

v ஒவ்வொரு பிரிவின் கீழும் சிறந்த 10 ஆய்வுகள் தேர்ந்தெடுக்கப்படும்.

vஇம்மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து ஆய்வாளர்களுக்கும் மாநில அளவிலான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

vதேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆய்வுகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புத்தகமாக வெளியிடப்படும்.

முக்கிய தேதிகள்:

v பதிவு செய்வதற்கான கடைசி நாள்:
  ஜூலை 31, 2012

v ஆய்வுக்கட்டுரைகள் அனுப்புவதற்கான கடைசி நாள்:
  செப்டம்பர்,25,2012

v தேர்வு செய்யப்பட்ட ஆய்வுகள் அறிவிக்கப்படும் நாள்:
  செப்டம்பர்,30,2012

v மாநாடு நடைபெறும் நாள்: அக்டோபர்,6&7.2012 இடம்: சேலம்

மேலும் விபரங்களுக்கு: www.tnsftheni.blogspot.com
முனைவர்.ஜி.செல்வராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
இளைஞர் அறிவியல் திருவிழா
தாவரவியல் துறை,
கருத்தராவுத்தர் கலை அறிவியல் கல்லூரி,
உத்தமபாளையம்..
செல்: 9865073411
                                                     மாவட்டச் செயலாளர்

3 comments: