முதல் பக்கம்

Jul 7, 2012

சூரியனைக் கடந்தது வெள்ளி: தேனி மாவட்டத்தில் 5 இடங்களில் மாணவர்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு

கம்பம், ஜூன். 6: சூரியினை நேர்கோட்டில் வெள்ளி கடக்கும் அரிய காட்சியை தேனி மாவட்டத்தில் உள்ள மாணவர்களும், பொதுமக்களும் புதன்கிழமை கண்டு ரசித்தனர்.சூரியனை நேர்கோட்டில் வெள்ளி 121.5 ஆண்டுகளுக்கு பின்னர், வரக்கூடிய அடுத்த 8 ஆண்டு இடைவெளியில் வெள்ளி இரண்டு முறை சூரியனைக் புதன்கிழமை கடந்தது. இதேபோன்ற நிகழ்வு 1882 டிசம்பர் 6-ம் தேதி 2004 ஜூன் 8-ம் நாள் சூரியக் கடப்பு நிகழ்வு நடைபெற்றது. அதைபோல் நிகழ்வு புதன்கிழமை காலை 6.30 மணியிலிருந்து காலை 10.20 வரை நடந்தது. இதன் பிறகு 2117-ம் ஆண்டு டிசம்பர் 11 நாளும், 2125 டிசம்பர் 8 நாளும்தான் இந்த அரிய சூரிய கடப்பு நிகழ்வு நடைபெறும் என்பதால் இந்த நூற்றாண்டில் முக்கியத்துவமான நிகழ்வகாக கருதப்பட்டது.தமிழ்நாடு அறிவில் இயக்கத்தின் சார்பில், மாவட்டத்தில் கூடலூரில் 2 இடங்களிலும், கருநாக்கமுத்தன்பட்டி ராமன் துளிர் இல்லம், சுருளிப்பட்டி அரசு கள்ளர் துவக்கப் பள்ளி, நாராயணத்தேவன்பட்டி பெயர்டு துளிர் இல்லம், போடி-சிலைமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும் சூரியனை வெள்ளி கடக்கும் நிகழ்வை காணவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.வெறும் கண்களால் பார்ப்பது ஆபத்து என்பதால் சூரியக் வடிகட்டி கண்ணாடி, தொலை நோக்கி (டெலோஸ் கோப்), முகம்பார்க்கும் கண்ணாடி, ஊசித் துளை கேமரா உள்ளிட்ட சாதனங்களை கொண்டு மாணவர்களுக்கும், பொதுமக்களும் பார்த்து ரசித்தனர். மேலும், பள்ளி மாணவர்களுக்கு வெள்ளி மறைப்பு குறித்து கருத்துரைகள், படக்காட்சி, விளக்கம், போஸ்டர் கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியில் பங்கேற்றவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கருத்தாளர்களான வெங்கட்ராமன், முத்துக்கண்ணன், தெய்வேந்திரன், சிவாஜி, ஜெகதீசன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்வை ஆயிரக்கணக்காண மாணவர்களும், பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.
DINAMANI

No comments:

Post a Comment