முதல் பக்கம்

Jul 18, 2013

ஜூலை,18: நெல்சன் மண்டேலா-சர்வதேச தினம்

நெல்சன் மண்டேலாவின் 95-வது பிறந்ததினம் இன்று.

நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் கண்டுவருவதாக தென்னாப்பிரிக்க அதிபர் ஜேகப் ஜூமா தெரிவித்துள்ளார்

நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க விடுதலை வீரரும் முன்னாள் அதிபருமான நெல்சன் மண்டேலா 67 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் இருந்துள்ளார்.தென்னாப்பிரிக்காவில் மீள் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்காக உழைத்தமையைப் பாராட்டி அவரது பிறந்த நாளை மண்டேலா தினம் என்று ஐநா பிரகடனப்படுத்தியுள்ளது.

அவரது சமூக அர்ப்பணிப்பை கௌரவிக்கும் முகமாக, மக்கள் இன்றைய நாளில் 67 நிமிடங்களை சமூகத் தொண்டுகளில் செலவிட வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

நுரையீரல் தொற்று காரணமாக மண்டேலா தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, பிறப்பு: ஜூலை 18, 1918), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர்(வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கெரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார்.

தொண்ணூற்று நான்கு வயதான மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இளமை:  நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடிஇன மக்கள் தலைவர். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் 'நெல்சன் ரோபிசலா மண்டேலா'. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவரின் சிறுவயதில் குத்துச் சண்டை வீரராகவே அறியப் பெற்றார்.


1937ஆம் ஆண்டளவில் மண்டேலா: அந்தக் குடும்பத்திலிருந்து முதன் முதலில் பள்ளி சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். இவரின் பெயரின் முன்னால் உள்ள "நெல்சன்" இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1941-ஆம் ஆண்டு ஜோகானஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.

அப்போது 'நோமதாம் சங்கர்' என்ற செவிலியரைத் திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென்னாப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைத் தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது.ஐந்தாண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958-ஆம் ஆண்டு 'வின்னி மடிகி லேனா' என்பவரை மணந்தார். வின்னி தனது கணவரின் கொள்கைகளுக்காகப் போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகளும் 2 வது மனைவி மூலம் 2 குழந்தைகளும் உள்ளனர்.

அரசியல்: தென்னாப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி அதிகாரம் வெள்ளையர்களிடமே இருந்தது. 1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, ‘கறுப்பின மக்கள் அடக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அவர்களுடைய நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது. நிலவுடமையாளர்களாக கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவை சுதேச மக்களுக்கு எதிரானவை. நீதியற்றவை. இவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என அறை கூவி கறுப்பின மக்களை விழிப்படையச் செய்வதில் வெற்றி கண்டார்.[3] 1948 ஆம் ஆண்டுதென்னாப்பிரிக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசு, கறுப்பின மக்களுக்கெதிராக முறையற்ற நடவடிக்கைகளை எடுத்தது. மண்டேலாவும் அவரின் பல்கலைக்கழகத் தோழனாகிய ஒலிவர் ரம்போவும் இணைந்து இன ஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினர்.

இனவாதமும் ஒடுக்குமுறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்து கொண்ட மண்டேலா சீற்றம் கொண்டவராக அரசியலுக்குள் குதித்தார் மெதுவாக . கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவான "ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" என்ற கட்சியின் முதன்மை பொருப்புக்கு வந்தார். அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இனவெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடினார். இவரின் தலைமையில் அரசின் இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக அறப் போராட்டங்கள் முளையெடுக்க ஆரம்பித்தன. இவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட வெள்ளையர் அரசு 1956 இல், அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என கைது செய்தது. சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா தீவிரமாகச் செயற்பட்டார். இதன் காரணமாக 1960 களில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சியடைந்தது. 1960 இல் ஆபிரிக்கர்களுக்கு விசேட கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக ஊர்வலம் ஒன்றை Sharpeville நகரில் நடாத்தினர். பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 69 பேர் கொல்லப்பட்டனர். 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 5ல் தேசத்துரோகக் குற்றம் சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவரின் 150 வரையான தோழர்களும் கைது செய்யப்பட்ப்பட்டனர். நெடிய சட்ட போராட்டத்திற்கு பிறகு 1961 அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து அறப்போர் மூலம் போராடி உரிமைகளைப் பெற முடியாதென்பதை உணர்ந்து கொண்ட மண்டேலா ஆயத வழிமுறையை நாடினார். இதனையடுத்து அவரைக் கைது செய்ய வெள்ளையாட்சியினர் முடிவு செய்தனர்.

1961-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப்படைத் தலைவனாக மண்டேலா உருவெடுத்தார். இதை உருவாக்கியதிலும் இவருக்கு பங்குண்டு. வெளிநாட்டு நட்பு சக்திகளிடமிருந்துபணம் மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்று, அரசு மற்றும் இராணுவ கேந்திர நிலையங்கள் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தினார்.

1961 டிசம்பர் 16 ஆம் நாள் இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடத்தப்பட்டது. அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961 ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார். அவரை பிடிக்க வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பின்னாளில் இவர் தலைமை வகித்த அமைப்பினரின் நடவடிக்கைகளால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இனவெறிக்குஎதிரான இவரது போர் நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனைக் காரணம் காட்டி அமெரிக்காவும் இவர் மீது பயங்கரவாத முத்திரை குத்தியது. மண்டேலாஅமெரிக்காவுக்குள் நுழைவதற்கான தடை ஜூலை 2008 வரை நடைமுறையில் இருந்தது.

1962 ஆகஸ்ட் 05 ஆம் நாள் இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்த காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார். திட்டமிட்டபடி மண்டேலா உட்பட 10 முக்கிய ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் (African National Congress ] தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைந்தது வெள்ளை அரசு. அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தமை, அமைதியைக் குலைத்தமை, கலகத்தை உருவாக்கியமை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வழக்கு 1963 இல் ரிவோனியா செயற்பாடு (process Rivonia) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964-ஆம் ஆண்டு ஜுன் 12-இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.

சிறை: மண்டேலா 1962.ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது.

பல ஆண்டுகள் அவரைத் தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்னாப்பிரிக்க அரசாங்கம். மனைவியைச் சந்திப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988-ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

விடுதலைக்கான போராட்டங்கள்:மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார். மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.

"மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்" என்று தென்னாப்பிரிக்கா அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது.

விடுதலை: அப்போதைய தென்னாப்பிரிக்கா அரசுத் தலைவரான பிரெட்ரிக் வில்லியம் டெக்ளார்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.[4].1990 இல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றார். விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71. இந்நிகழ்வு உலகம் முழுவதும் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது

வரவேற்பு: தென்னாப்பிரிக்கா அரசு அறிவித்தபடியே 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி. பி. சிங் தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில்ஆப்பிரிக்கா நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.

பின்னர் மண்டேலாவை காவலர் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச் சென்றனர். சிறைச்சாலையின் வாசலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரை படம் எடுத்தனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்னாப்பிரிக்கா முழுவதும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-


இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது. நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்.

விருதுகள்:உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார். 1990-ல் இந்தியாவின் 'பாரத ரத்னா' விருதும் வழங்கப்பட்டது. 1993இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது

தென்னாப்பிரிக்காவின் அதிபராதல்: 1994 மே 10 ந் தேதி அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அதிபர் ஆனபின், 1998 ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன்பின் 1999 இல் பதவியை விட்டு விலகினார். இவர் 2வது முறை அதிபர் பதவிக்கு போட்டியட மறுத்துவிட்டார்.

உடல்நலம்: உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2013 ஜூன் மாதம் 8-ம் தேதி மண்டேலா பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளது என தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவின் அலுவலகம் 2013 ஜூன் 23-ம் தேதி அறிவித்துள்ளது.

மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், 2013 ஜூன் 27-ம் தேதி ஜனாதிபதி யாக்கோபு சூமா தனது மொசாம்பிக் பயணம் ரத்து செய்தார். நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் பூர்வீக வீட்டிற்கு அவசரமாக வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உணவு, உறக்கத்தை துறந்து மண்டேலா நலமடைந்து வீடு திரும்ப கண்ணீர் மல்க பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.
நன்றி: விக்கிபீடியா

Jul 14, 2013

ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு பேனா, ஒரு புத்தகம் உலகையே மாற்ற முடியும் : ஐக்கிய நாடுகள் மன்றத்தில் மலாலா போர்க்குரல்


ஐக்கிய நாடுகள் மன்றம் (நியூயார்க்), ஜூலை 13-ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு பேனா, ஒரு புத்தகம் உலகையே மாற்ற முடியும் என்று ஐக்கிய நாடுகள் மன் றத்தில் மலாலா போர்க்குரல் எழுப் பினார். தலிபான் இயக்கத்தினரால் சுடப் பட்டு, காப்பாற்றப்பட்ட 16 வயது சிறு மியான பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப் சாய் பிறந்த தினமான ஜூலை 12ம் நாளை ஐக்கிய நாடுகள் மன்றம் மலாலா தினமாக அறிவித்துக் கொண்டாடியது. அதனையொட்டி ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், சிறுமி மலாலா ஐ.நா. மன்றத்திற்கு வரவழைக் கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். அப் போது மலாலா பேசியதாவது: ‘‘மாண்புமிகு மக்கள் மத்தியில் உரையாட எனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகும். என் உரையை எங்கிருந்து தொடங் குவது என்று எனக்குத் தெரியவில்லை. இங்கு கூடியிருக்கும் மக்கள் என் னிடமிருந்து என்ன எதிர் பார்க்கிறார் கள் என்றும் எனக்குத் தெரியவில்லை. முதற்கண் என்மீது அன்பு செலுத்தி என் உடல்நலத்திற்காக பிரார்த்தனை செய்த அத்துணை உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களில் ஒருத்தி

அன்பார்ந்த சகோதர, சகோதரி களே, ஒரு விஷயத்தை நன்கு நினை வில் வைத்துக்கொள்ளுங்கள். மலாலா தினம் என்பது என்னுடைய தினம் அல்ல. இன்றைய தினம், தங்கள் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பும் ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒவ் வொரு சிறுவனுக்கும், ஒவ்வொரு சிறுமிக்குமான தினமாகும். மனித உரி மைகளுக்காகவும், கல்வி, சமாதானம் மற்றும் சமத்துவத்திற்காகவும் குரல் கொடுக்கிற நூற்றுக்கணக்கான மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக ஊழியர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு குரல் கொடுத்த பல்லாயிரக்கணக்கா னோர் பயங்கரவாதிகளால் கொல்லப் பட்டிருக்கிறார்கள், லட்சக்கணக்கா னோர் படுகாயங்களுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள். நானும் அவர் களில் ஒருத்தி. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஒருத்தியாக இங்கே நான் உங்கள் முன் நின்றுகொண்டிருக்கிறேன். நான் எனக்காகப் பேசவில்லை, இவ் வாறு உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த சிறுவர்களுக்காகவும், சிறுமிகளுக்காகவும் பேசுகிறேன். உரிமைகளுக்காகப் போராடியவர்கள் சார்பாக நான் பேசுகிறேன். அமைதியுடன் வாழ்வதற்கான உரிமைக்காக, கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்ற உரி மைக்காக, எல்லோருக்கும் சமமான விதத்தில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற உரிமைக்காக, எல் லோருக்கும் கல்வி வேண்டும் என்ற உரிமைக்காக, நான் பேசுகிறேன்.

அதே அபிலாசை,அதே நம்பிக்கை, அதே கனவு

அன்பார்ந்த நண்பர்களே, 2012 அக்டோபர் 9 அன்று தலிபான் இயக் கத்தினர் என் நெற்றியின் இடது பக்கத் தில் சுட்டார்கள். அவ்வாறு என் நண் பர்கள்மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி னார்கள். அவ்வாறு துப்பாக்கிக் குண் டுகள் மூலம் எங்களை மவுனமாக்கி விடலாம் என்று அவர்கள் நினைத் தார்கள். ஆனால் அவர்கள் தோல்வி யடைந்து விட்டார்கள். எங்கள் மவு னத்திலிருந்து ஆயிரக்கணக்கான குரல்கள் எழுந்தன. எங்கள் லட்சியங் களை மாற்றிவிடலாம், எங்கள் அபி லாசைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என்று பயங்கரவாதிகள் நினைத்தார்கள். ஆனால் என்னிடமி ருந்த பலவீனம், பயம், நம்பிக்கை யின்மைதான் இறந்தனவேயொழிய, என் வாழ்க்கையில் வேறெந்த மாற்ற மும் இல்லை. அவற்றிற்குப் பதிலாக பலம், சக்தி, துணிவுடைமை ஆகிய வைதான் புதிதாகப் பிறப்பெடுத்திருக் கின்றன. முன்பிருந்த அதே மலாலா வாகத்தான் இப்போதும் இருக்கிறேன். என் அபிலாசைகளும் அதேதான். என் நம்பிக்கைகளும் அதேதான். என் கனவுகளும் அதேதான்.

துப்பாக்கி இருந்திருந்தால் கூட....

அன்பார்ந்த சகோதர, சகோதரி களே, நான் யாருக்கு எதிராகவும் இல்லை. தலிபான் இயக்கத்தின ருக்கு எதிராகவோ அல்லது இதர பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரா கவோ தனிப்பட்ட முறையில் எவரி டமும் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்கிற உணர்வுடன் இங்கே நான் பேசவில்லை. ஒவ்வொரு குழந்தை யின் கல்வி உரிமைக்காக இங்கே நான் பேசுகிறேன். அனைத்துத் தீவிர வாதிகளின், குறிப்பாக தலிபான் இயக்கத்தினரின் பையன்களுக்கும், பெண்களுக்கும் கல்வி வேண்டும் என்றுதான் நான் குரல் கொடுக்கி றேன். என்னைத் துப்பாக்கியால் சுட் டவரைக்கூட நான் வெறுக்கவில்லை. அவர் என் முன் நின்று என்னிடம் துப்பாக்கி இருந்திருந்தால்கூட நான் அவரைச் சுட்டிருக்க மாட்டேன். இது நான் நபிகள் நாயகத்திடமிருந்தும், இயேசு கிறிஸ்துவிடமிருந்தும், புத்த பெருமானிடமிருந்தும் கற்றுக் கொண்ட அன்புடைமையாகும். மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மாண்டேலா, முகம்மது அலி ஜின்னா ஆகியோரிடமிருந்து நான் பெற்றி ருக்கிற பாரம்பரியச் சொத்து இதுவே யாகும். காந்திஜி, பாஷாகான் மற்றும் அன்னை தெரசா ஆகியோரிடமிருந்து கற்றுக்கொண்ட அஹிம்சைத் தத்து வம் இதுவேயாகும்.


புத்தகம், பேனாவின் முக்கியத்துவம்

இன்னா செய்தாருக்கும் இனிய வையே செய்ய வேண்டும் என்று என் தாயும் தந்தையும் எனக்குக் கற்றுக் கொடுத்தது இதுவேயாகும். எல்லோ ரையும் நேசி என்றும் எப்போதும் அமைதியுடன் இரு என்றும்தான் என் ஆத்மா எனக்குச் சொல்லிக் கொடுக் கிறது.இருட்டில் இருக்கும்போதுதான் வெளிச்சத்தின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். நாம் மவுனப்படுத்தப் படும்போதுதான் நம் குரலின் முக்கியத் துவத்தை உணர்கிறோம். அதே போன்று நாங்கள் பாகிஸ்தானின் வடக்குப் பகுதியான ஸ்வாட் பகுதி யில் வாழ்ந்தபோதுதான், துப்பாக்கி களை நாங்கள் பார்த்தபோதுதான் பேனாக்கள் மற்றும் புத்தகங்களின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந் தோம்.‘‘வாளின் முனையைவிட பேனா வின் முனை வலிமை வாய்ந்தது’’ என்கிற முதுமொழி உண்மையே யாகும். தீவிரவாதிகள், புத்தகங்களை யும் பேனாக்களையும் கண்டு பயப் படுகிறார்கள். கல்வியின் வீரியம் அவர்களுக்குக் கிலியை ஏற்படுத்தி யுள்ளது. பெண்களைப் பார்த்தாலே அவர்கள் அஞ்சுகிறார்கள். பெண் களின் குரலின் சக்தி அவர்களை நடு நடுங்க வைக்கிறது. அதன் காரண மாகத்தான் சமீபத்தில் அவர்கள் குவெட்டாவில் 14 அப்பாவி மருத்துவ மாணவர்களைக் கொன்றார்கள். அதன்காரணமாகத்தான் பல பெண் ஆசிரியர்களையும், போலியா மருந்து செலுத்தும் பெண் ஊழியர்களையும் அவர்கள் கொலை செய்தார்கள். அத னால்தான் அவர்கள் பள்ளிக்கூடங் களைத் தகர்த்துக்கொண்டிருக்கிறார் கள். ஏனெனில் அவர்கள் மாற்றத் தைக் கண்டு பயப்படுகிறார்கள், சமத் துவத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். எங்கள் சமூகத்தில் அதனை நாங்கள் கொண்டுவருவோம்.

அமைதி அவசியம்

பயங்கரவாதிகள் இஸ்லாமின் பெய ரைத் தங்கள் சொந்த ஆதாயத்திற் காகத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். பாகிஸ்தான் அமைதியை விரும்பும் ஜனநாயக நாடாகும். இஸ்லாம் மதமும் அமைதி, மனிதாபிமானம், சகோதரத் துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒன்றாகும். இஸ்லாம், கல்வி பெறுவது ஒவ்வொரு குழந்தையின் உரிமை மட்டுமல்ல, அவர்களின் கடமையும் பொறுப்புமாகும். கல்வி கற்க அமைதி அவசியம். உலகின் பல பகுதிகளில், குறிப்பாக பாகிஸ்தானிலும் ஆப்கா னிஸ்தானிலும் பயங்கரவாதம், யுத்தங் கள் மற்றும் மோதல்கள் குழந்தை களை தங்கள் பள்ளிகளுக்குச் செல் லாமல் தடுத்து நிறுத்தியுள்ளன. யுத் தங்களினால் உண்மையிலேயே நாங்கள் மிகவும் களைப்படைந்து விட்டோம். உலகின் பல பகுதிகளில் பல விதங்களில் பெண்களும் குழந் தைகளும் பாதிக்கப்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள்.இந்தியாவில், அப்பாவி மற்றும் ஏழைக் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக வாடிக் கொண் டிருக்கின்றனர். நைஜீரியாவில் பல பள்ளிக் கூடங்கள் அழிக்கப்பட்டு விட்டன. ஆப்கானிஸ்தான் மக்கள் பத்தாண்டுகளாக தீவிரவாதம் என்னும் தடைக்கற்களால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இளம் சிறுமிகள் வீடுகளில் குழந்தைத்தொழிலாளர் களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். மிகவும் குறைந்த வயதிலேயே திரு மணமும் செய்விக்கப்படுகிறார்கள். வறுமை, கல்லாமை, அநீதி, மதவெறி, இனவெறி மற்றும் அடிப்படை உரிமை கள் மறுக்கப்படுதல் ஆகியவை ஆண் கள் -பெண்கள் அனைவரின் பிரச்சனை களாகவும் மாறிப்போயுள்ளன.

பெண்கள் - குழந்தைகளின் உரிமை

அன்புடையீர், நான் இன்றைய தினம் பெண்களின் உரிமைகள் மற் றும் கல்வி குறித்து உங்களின் கவ னத்திற்குக் கொண்டு வர விரும்புகி றேன். ஏனெனில் அவர்கள்தான் மிக வும் பாதிக்கப்பட்டவர்கள். பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெற சுயேச் சையாகவே போராட முன்வர வேண் டும்.உலகத் தலைவர்கள் அனைவரும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கி றேன். உலகம் முழுவதும் உள்ள ஒவ் வொரு குழந்தைக்கும் கல்வி அளிக் கப்படுவதைக் கட்டாயமாக்கிட வேண் டும் என்று அனைத்து அரசாங்கங் களையும் கேட்டுக்கொள்கிறேன்.அதேபோன்று உலகில் உள்ள அனைத்து அரசாங்கங்களும் பயங்கர வாதத்திற்கு எதிராகப் போராட வேண் டும் என்றும் குழந்தைகளை கொடு மைப் படுத்துவதிலிருந்து பாதுகா த்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று எழுத்தறிவின்மை, வறுமை, பயங்கரவாதத்திற்கு எதிராக உலக அளவிலான போராட்டத்தை முன்னெ டுத்துச் செல்வோம். ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு பேனா, ஒரு புத்தகம் உலகையே மாற்ற முடியும். கல்வி ஒன்றே தீர்வாகும். கல் விக்கே முன்னுரிமை கொடுத்திடு வோம் என்றார்.

Jul 13, 2013

அனைத்து பள்ளிகளிலும் தமிழ் வழிக்கல்வி அவசியம் அறிவியல் இயக்கம் அரசுக்கு கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-28 11:49:55

கூடலூர், : அனைத்து பள்ளிகளிலும் தமிழ்வழி கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு, தேனி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். 

இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: இன்றைய அறிவியல் தொழில் நுட்ப உலகில் உலகளாவிய தொடர்புக்கும், தகவல் பரிமாற்றத்திற்கும், ஆங்கில மொழியின் தேவை உள்ளது. அதற்காக தாய்மொழிக்கலவியை புறக்கணித்து, ஆங்கில மொழி வழியாகவே அனைவரும் கற்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. மனிதனின் சிந்தனையும், படைப்பாற்றல் திறனும் தாய்மொழி கல்வி வழிதான் மேம்பாடு அடையும். உலக நாடுகள் பலவற்றிலும் தாய்மொழி வழியாகத்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. 

தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் பள்ளிக்கல்வி முழவதும் தாய்மொழியில்தான் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழ்மொழியில் பயிற்றுவிக்க வேண்டும், தமிழ்வழி படிப்பவர்களுக்கு அனைத்து துறைகளிலும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இச்சூழலில் வரும் கல்வி ஆண்டில் 1.5 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 3 ஆயிரத்து 200 பள்ளிகளில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் இரண்டு ஆங்கிலவழி பிரிவுகள் தொடங்கப்படும் என்பது ஏற்புடையதல்ல.

தொடர்ந்து ஆங்கில வழி பிரிவு தொடங்கினால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பள்ளிகளில் தமிழகத்தில் தமிழ்வழி கல்வியே இருக்காது என்ற அபாய நிலையும் உள்ளது. ஆங்கிலத்தில் அரசு பள்ளி மாணவர்கள் புலமை பெற வேண்டுமென அரசு கருதினால், ஆங்கிலமொழிப்பாடத்தை திறம்பட கற்பிக்கின்ற வகையில் ஆசிரியர்களை நியமிக்கலாம். மேலும் ஆங்கிலத்தில் பேச எழுத புதிய வழிமுறைகளை கண்டறியலாம். எனவே அனைத்து பள்ளிகளிலும் தமிழ்வழி கல்வி கற்பிக்க வைக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்’ இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினகரன்

7வது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு-2013 அறிவிப்பு





மேலும் விபரங்களுக்கு: 
எஸ்.ஞானசுந்தரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் இணையம்,
தேனி மாவட்டம்
அலைபேசி: 9486258489

வி.வெங்கட்ராமன், மாவட்டச்செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தேனி மாவட்டம்
அலைபேசி:9488683929

தே.சுந்தர், மண்டல ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் இணையம்(தெற்கு)
அலைபேசி: 9488011128


Jul 6, 2013

மாவட்ட செயற்குழு -1 ஜூலை,5.2013

அறிவியல் வணக்கம். ஜூலை 5,2013 அன்று மாலை நமது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் தேனி நகரில் நடைபெற்றது. செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நமது வளர்ச்சி உப குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.முத்துமணிகண்டன் அவர்களது தந்தை திரு.முத்து அவர்களது மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  
 
நடந்து முடிந்த 9 வது மாவட்ட மாநாடு வெற்றி பெற சிறப்பாய் செயல்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள்,கிளை பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் அறிமுகம் நடைபெற்றது.

லால்குடியில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை மாநில செயலர் திரு.தியாகராஜன் எடுத்துக்கூறினார்.

ஜூன் 29,30 விழுப்புரத்தில் நடைபெற்ற கல்வி மாநில மாநாட்டில் நமது மாவட்டம் சார்பாக பங்கேற்ற திருமிகு.ஞானசுந்தரி மாநாட்டு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

உப குழு பொறுப்பளர்கள் தேர்வு நடைபெற்றது.அதன்படி பிரச்சார உப குழுவின் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட செயலர் வி.வெங்கட் ராமன் மற்றும் பொறுப்பாளர்களாக ராம்சங்கர், மணிமேகலை ,அம்மையப்பன், ஜஸ்டின் ரவி,முனைவர் செரீஃப், மனோகரன், தெய்வேந்திரன் ஆகியோர் செயல்படுவதென முடிவு எடுக்கப்பட்டது.

கல்வி உபகுழுவின் பொறுப்பாளர்களாக முத்துக்கண்ணன், ஞானசுந்தரி, சிவாஜி,செந்தில் குமரன் ஆகியோர் செயல்படுவதென முடிவு எடுக்கப்பட்டது.ஆசிரியர் இணையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ஆசிரியை ஞானசுந்தரி செயல்படுவார்.

வளர்ச்சி உபகுழுவின் பொறுப்பாளர்களாக முத்துமணிகண்டன், ஓவியர் பாண்டி, ஸ்ரீதர், இரத்தினசாமி, மகேந்திரன் ஆகியோர் செயல்படுவதென முடிவு எடுக்கப்பட்டது.

வெளியீடு உபகுழுவின் பொறுப்பாளர்களாக ஹ.ஸ்ரீராமன், வெங்கட் ராமன், முத்துக்கண்ணன், பா.செந்தில் குமரன் ஆகியோர் செயல்படுவதென முடிவு எடுக்கப்பட்டது.

ஆரோக்ய உபகுழுவின் பொறுப்பாளர்களாக ஜ.மஹபூப் பீவி, மருத்துவர் இன்பசேகரன், மருத்துவர் வேல்மணி, மருத்துவர் நளினி, மருத்துவர் சுரெஷ், மருத்துவர் தேவ் ஆனந்த், ஆகியோர் செயல்படுவதென முடிவு எடுக்கப்பட்டது.

சமம் உபகுழுவின் பொறுப்பாளர்களாக திரு.ஜேசுராஜ், ஜெயந்தி, வன்னியராசன், தே.சுந்தர் ஆகியோர் செயல்படுவதென முடிவு எடுக்கப்பட்டது

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக திரு.தெய்வேந்திரன் மற்றும் துளிர் வினாடி வினா போட்டியின் ஒருங்கிணைப்பாளராக திரு. மனோகரன் மற்றும் துளிர் திறனறிதல் போட்டியின் ஒருங்கிணைப்பாளராக திரு. ஜஸ்டின் ரவி செயல்படுவதென முடிவு எடுக்கப்பட்டது

அமைப்பு சார்ந்த ஒருங்கிணைப்பாளர்களாக திரு.தே.சுந்தர் மற்றும் ஹ.ஸ்ரீராமன் ஆகியோரும் கல்வி சார்ந்த ஆய்வுகளின் பொறுப்பாளர்களாக திரு.அழகு கணேசன் மற்றும் இளங்கோவன் ஆகியோர் செயல்படுவதென முடிவு எடுக்கப்பட்டது.

தேசிய அறிவியல் தின கொண்டாட்டத்தின் பொறுப்பாளராக திரு.அம்மையப்பன், ஹிரோசிமா-நாகசாகி நினைவு தின நிகழ்ச்சியின் பொறுப்பாளராக திரு.ராம்சங்கர்,கணித செயல்பாடுகளுக்கான பொறுப்பாளர்களாக திரு.முனைவர் செரீஃப் மற்றும் மணிமேகலை ஆசிரியை ஆகியோர் செயல்படுவதென முடிவு எடுக்கப்பட்டது,

வருகின்ற ஆகஸ்ட் 2,3,4 செங்கல்பட்டில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரிதிநிதிகள் தேர்வும் நடைபெற்றது.
 
செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பங்கும் செயல்பாடும் அதிகரிக்கப்பட வேண்டும்.                                 ------ மாவட்ட செயலர்