ஐசான் வேன் பிரச்சார இயக்கம்…..
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர், 18 முதல் ஐசான் வேன் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை, நாகை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து வேன் பிரச்சாரம் துவங்கியது. தென் மண்டலத்தில் குமரியில் கிளம்பிய பிரச்சார வேன் நவ.23 அன்று தேனி மாவட்டத்திற்கு வந்தது.
தேனி மாவட்ட அளவிலான பிரச்சாரத் துவக்கவிழா ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அறிவியல் இயக்கத்தின் மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சேகர் முன்னிலை வகித்தார். மாவட்டச்செயலாளர் வி.வெங்கட்ராமன் வரவேற்றார். வேன் பிரச்சாரத்தினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.வாசு அவர்கள் துவங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.
பெரியகுளம் மாவட்டக் கல்வி அலுவலர் நாகராஜ், உத்தமபாளையம் மாவட்டக்கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பெருமாள்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் தே.சுந்தர், கல்வியாளர் அமல்ராஜன், மாநில பிரச்சார ஒருங்கிணைப்பாளர் மு.தியாகராஜன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஆண்டிபட்டி கிளைச்செயலாளர் அழகு கணேசன் நன்றி கூறினார். அறிவியல் இயக்கத்தின் பெரியகுளம் செயலாளர் ராம்சங்கர், கம்பம் செயலாளர் முத்துக்கண்ணன், போடி செயலாளர் ஸ்ரீதர், உத்தமபாளையம் செயலாளர் ஜஸ்டின் ரவி, மாவட்டத்துணைச்செயலாளர் ஞானசுந்தரி, மாவட்ட கருத்தாளர்கள் அம்மையப்பன், சேசுராஜ், பாண்டி, சிவக்குமார், நந்தகுமார் உள்ளிட்ட குழுவினர் மாவட்டம் முழுவதும் ஐசான் வால்நட்சத்திரம் குறித்த வேன் பிரச்சாரம் மேற்கொண்டனர்.பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஐசான் குறித்து கருத்துரை, போஸ்டர் கண்காட்சி, பவர்பாயிண்ட் காண்பிக்கப்பட்டது. இரவு பொது நிகழ்வில் தொலைநோக்கி மூலம் விளக்கமும் அளிக்கப்பட்டது.
ஐசான் வால் நட்சத்திரம் குறித்து பிரச்சாரம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 26 அன்று செவ்வாய் கிழமை அன்று காலை 10 மணி அளவில் போடி பங்கஜம் நடுநிலைப்பள்ளியில் ஐசான் வால் நட்சத்திரம் குறித்து கருத்தரங்கம் நடைப்பெற்றது.கருத்தரங்கத்திற்கு போடி கிளைச் செயலாளர் திருமிகு.ஸ்ரீதர் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் முன்னிலை வகித்தார்.கம்பம் கிளைச் செயலாளர் திருமிகு.க.முத்துக்கண்ணன் கருத்தாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவியர்களுக்கு ஐசான் வால் நட்சத்திரம் குறித்து விளக்கம் அளித்தனர்.ஐசான் வால் நட்சத்திரம் குறித்த படக்காட்சியும் காண்பிக்கப்பட்டது.25 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 250 க்கும் மேற்பட்ட மாணவ்-மாணவியர் பங்கேற்றனர்.500 ரூபாய் அளவிற்கு புத்தக விற்பனையும் நடைப்பெற்றது…
ஐசான் வீதிப்பிரச்சாரம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 28 அன்று வியாழக்கிழமை மாலை 6 மணி அள்வில் கம்பம் நகரில் ஐசான்வால் நட்சத்திரம் குறித்த துண்டு பிரச்சுரமானது வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு வி நியோகம் செய்யப்பட்டது.இந்த மாபெரும்அறிவியல் பிரச்சார பணியில் மாநிலச் செயலாளர் தே.சு ந்தர்,மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பாண்டி,கம்பம் கிளை கே.நந்தகுமார், மற்றும் கணித மேதை இராமாணுஜம் துளிர் இல்ல மாணவர்கள் பங்கேற்றனர்.பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
ஐசான் வால் நட்சத்திரம் குறித்து பிரச்சாரம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 29 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் கூடலூர் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் ஐசான் வால் நட்சத்திரம் குறித்து கருத்தரங்கம் நடைப்பெற்றது.கருத்தரங்கத்திற்கு கம்பம் கிளை செயற்குழு உறுப்பினர் திருமிகு ராஜ்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை முன்னிலை வகித்தார்.கம்பம் கிளைச் செயலாளர் திருமிகு.க.முத்துக்கண்ணன் கருத்தாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவியர்களுக்கு ஐசான் வால் நட்சத்திரம் குறித்து விளக்கம் அளித்தனர்.ஐசான் வால் நட்சத்திரம் குறித்த படக்காட்சியும் காண்பிக்கப்பட்டது. 350 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.100 ரூபாய் அளவிற்கு புத்தக விற்பனையும் நடைப்பெற்றது…
ஐசான் புத்தகம்-போஸ்டர் விற்பனை
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவியல் வெளியீடு சார்பில் வெளியிடப்பட்ட ஐசான் பிரச்சார போஸ்டர்கள்.புத்தகங்கள்,போஸ்ட் கார்ட்,செய்திப்பை ஆகியவற்றின் விற்பனையில் கம்பத்தை சேர்ந்த திருமிகு.கே.நந்தகுமார் அவர்களது பணி போற்றுதலுக்குரியது, அளப்பரியது.. கம்பம் பகுதியை சுற்றி அமைந்துள்ள அனைத்து பள்ளி.கல்லூரிகளிக்கும் சென்று ஐசான் பிரச்சாரத்தை மேற்கொண்டு புத்தக விற்பனையையும் மிகச்சிறப்பாக மேற்கொண்டார். கடமலை-மயிலை,கம்பம்ஆகிய ஒன்றியங்களில் மட்டுமே புத்த்க விற்பனை மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.மற்ற ஒன்றியங்களில் மேலும் கவனம் செலுத்தப்ப்ட வேண்டும்…