முதல் பக்கம்

Nov 13, 2013

முதன்மைக் கல்வி அலுவலர் சந்திப்பு

:தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து நமது வாழ்நாளின் அதிசியமான ஐசான் எனும் வால் நட்சத்திரம் குறித்து மாபெரும் பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல திட்டமிடப்பட்ட்து. நவம்பர் 12 அன்று மாலை 5 மணி அளவில் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமிகு.எம் வாசு அவர்களை முதன்மை கல்வி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் மாவட்ட செயலாளர் திருமிகு.வி.வெங்கட் ராமன் மாநிலச் செயலாளர் திருமிகு.தே.சுந்தர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமிகு.ஆர்.அம்மையப்பன், கம்பம் கிளை செயலாளர் திருமிகு.கே.முத்துக்கண்ணன் ஆகியோர் ச ந்தித்து ஐசான் வால்நட்சத்திர பிரச்சாரத்தின் அவசியம் குறித்து விளக்கிக் கூறினர்.முதன்மை கல்வி அலுவலுருடனான சந்திப்பு மகிழ்ச்சிக்குரியதாய் இருந்தது…. பிரச்சார வழிமுறைகளுடன் மீண்டும் முதன்மை கல்வி அலுவலர் அவர்களை சந்திக்க முடிவு எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment