முதல் பக்கம்

Nov 24, 2013

தேனி மாவட்டத்தில் ஐசான் வால்நட்சத்திரம் குறித்த பிரச்சாரம்

 ஐசான் வால் நட்சத்திரம் குறித்து பிரச்சார இயக்கம் : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 16 அன்று சனிக்கிழமை கம்பம் பெரியகுளம் ஒன்றிய வட்டார வள மையங்களில் ஐசான் வால் நட்சத்திரம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டட்து.ஐசான் போஸ்டர் விற்பனையும் நடைப்பெற்றது. கம்பம் ஒன்றிய வட்டார வள மையத்தில் மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன் மாநிலச் செயலாளர் தே.சு ந்தர், கம்பம் கிளைசெயலர் க.முத்துக்கண்ணன் ,கே.நந்தகுமார்,ஜி.பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.பெரியகுளம் ஒன்றிய வட்டார வள மையத்தில் மாவட்ட தலைவர் திருமிகு.பா.செந்தில்குமரன் மற்றும் பெரியகுளம் கிளைச் செயலர்.ஆர் ராம்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதன்மைக் கல்வி அலுவலர் சந்திப்பு 2 : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 19 செவ்வாய்க்கிழமை அன்று மாலை தேனி பி.சி. கான்வெண்ட் பெண்கள் பள்ளியில் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமிகு.எம் வாசு அவர்களை மாவட்ட செயலாளர் திருமிகு.வி.வெங்கட் ராமன், மாநிலச் செயலாளர் திருமிகு.தே.சுந்தர் மாவட்ட தலைவர் திருமிகு பா.செந்தில் குமரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமிகு.ஆர்.அம்மையப்பன்,ஆகியோர் சந்தித்து ஐசான் வால்நட்சத்திர பிரச்சார வழிமுறைகள் குறித்தும் நவம்பர் 23 சனிக்கிழமை அன்று ஐசான வேன் பிரச்சார செல்லும் பாதை குறித்து விளக்கிக் கூறினர்.

ஐசான் துண்டு பிரசுரம் வெளியீடு :அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின்(RMSA) சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நவம்பர் 20 திங்கள்கிழமை தேனி பி.சி. கான்வெண்ட் பெண்கள் பள்ளியில் நடைப்பெற்றது.அக்கண்காட்சியின் பரிசளிப்பு விழாவில் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமிகு.எம் வாசு அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஐசான் வால் நட்சத்திரம் குறித்த துண்டு பிரச்சாரத்தை வெளியிட பெரியகுளம் கல்வி மாவட்ட அலுவலர் திருமிகு. நாகராஜீ அவர்கள் பெற்றுக் கொண்டார். துண்டு பிரச்சுரத்தை மாவட்டசெயலாளர் வி.வெங்கட் ராமன், மாவட்ட தலைவர் பா.செந்தில் குமரன்,மாவட்ட பொருளாளர் ஜெ.மஹபூப் பீவி ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.அம்மையப்பன் ஆண்டிப்பட்டி கிளைச் செயலாளர் திருமிகு.அழகு கணேசன் ஆகியோர் அங்கு வந்திருந்த 300 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு விநியோகம் செய்தனர்.அதே தினத்தன்று மாநிலச்செயலாளர் தே.சுந்தர் மற்றும் கம்பம் கிளைச் செயலாளர் க.முத்துக்கண்ணன் ஆகியோர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுருளிப்பட்டி மற்றும் அரசு மேல் நிலைப்பள்ளி,சுருளிப்பட்டி ஆகிய பள்ளிகளுக்கு சென்று ஐசான் வால் நட்சத்திரம் குறித்து மாணவ-மாணவியர்களுக்கு வகுப்பறையில் சிறிது நேரம் விளக்கியதோடு துண்டு பிரச்சுரத்தை விநியோகம் செய்தனர்.

 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர், 18 முதல் ஐசான் வேன் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை, நாகை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து வேன் பிரச்சாரம் துவங்கியது. தென் மண்டலத்தில் குமரியில் கிளம்பிய பிரச்சார வேன் நவ.23 அன்று தேனி மாவட்டத்திற்கு வந்தது.

 தேனி மாவட்ட அளவிலான பிரச்சாரத் துவக்கவிழா ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அறிவியல் இயக்கத்தின் மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சேகர் முன்னிலை வகித்தார். மாவட்டச்செயலாளர் வி.வெங்கட்ராமன் வரவேற்றார். வேன் பிரச்சாரத்தினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.வாசு அவர்கள் துவங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

   பெரியகுளம் மாவட்டக் கல்வி அலுவலர் நாகராஜ், உத்தமபாளையம் மாவட்டக்கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பெருமாள்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் பேரா.மோகனா, மாநிலச்செயலாளர் தே.சுந்தர், கல்வியாளர் அமல்ராஜன், மாநில பிரச்சார ஒருங்கிணைப்பாளர் மு.தியாகராஜன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஆண்டிபட்டி கிளைச்செயலாளர் அழகு கணேசன் நன்றி கூறினார். அறிவியல் இயக்கத்தின் பெரியகுளம் செயலாளர் ராம்சங்கர், கம்பம் செயலாளர் முத்துக்கண்ணன், போடி செயலாளர் ஸ்ரீதர், உத்தமபாளையம் செயலாளர் ஜஸ்டின் ரவி, மாவட்டத்துணைச்செயலாளர் ஞானசுந்தரி, மாவட்ட கருத்தாளர்கள் அம்மையப்பன், சேசுராஜ், பாண்டி, சிவக்குமார், நந்தகுமார் உள்ளிட்ட குழுவினர் மாவட்டம் முழுவதும் ஐசான் வால்நட்சத்திரம் குறித்த வேன் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

       பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஐசான் குறித்து கருத்துரை, போஸ்டர் கண்காட்சி, பவர்பாயிண்ட் காண்பிக்கப்பட்டது. தொலைநோக்கி மூலம் விளக்கமும் அளிக்கப்பட்டது. 
     
       ஆண்டிபட்டி,தேனி, போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஒன்றியங்களில் வேன் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் சுமார் 10000 மாணவர்கள் வரை ஐசான் குறித்தும் வானவியல் குறித்தும் செய்திகள் சென்றடைந்துள்ளது.



No comments:

Post a Comment