தேனி, குஜராத்தில் தேசிய அளவில் நடக்க உள்ள குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் புதிய கண்டுப்பிடிப்புகளுக்கான போட்டிக்கு தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் பள்ளி மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர்.
தமிழக அறிவியல் இயக்கத்தின் சார்பில் குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட அளவிலான புதிய கண்டுப்பிடிப்புகளுக்கான போட்டிகள் அல்லிநகரம் அரசு பள்ளியில் நடத்தப்பட்டன. இதில் பெரியகுளம் விக்டோரியா மெமோரியல் அரசு பள்ளி, கெங்குவார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, குப்பிநாயக்கன்பட்டி கலைமகள் நடுநிலைப்பள்ளி, தேனி கம்மவார் சங்க மெட்ரிக் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இப்பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் சென்னை சத்தியபாமா பல்கலையில் நடந்த மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றனர். இளநிலை, முதுநிலை பிரிவுகளில் 282 ஆய்வு குழுவினர் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர். இளம் விஞ்ஞானியர் விருதிற்கு 30 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன.
இதில் தேனி கம்மவார் சங்க மெட்ரிக் பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவிகள் யு.சிரின், கே.பாண்டிமீனா, எம்.பிரதீபா, பி.நித்யஸ்ரீ, வி.ஸ்ரீபுவியா ஆகியோரின் ஆய்வு கட்டுரையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் குஜராத்தில் டிச. 27 முதல் 30 வரை நடக்கும் தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் புதிய கண்டுப்பிடிப்புகளுக்கான போட்டியில் பங்கேற்க உள்ளனர். கம்மவார் சங்கத் தலைவர் நம்பெருமாள், பள்ளி செயலர் ஸ்ரீதர், இணைச்செயலர் கண்ணன், பொருளாளர் ஜெயராமன், முதல்வர் ஜாய்ஸ், ஆசிரியர் ராம்குமார், தமிழக அறிவியல் இயக்க மாநில செயலர் சுந்தர், மாவட்ட செயலர் ஜெகநாதன், வெங்கட் ஆகியோர் இம்மாணவிகளை பாராட்டினர்.
நன்றி: தினமலர் நாளிதழ்
No comments:
Post a Comment