முதல் பக்கம்

Jan 28, 2013

பளியன்குடியில் கல்வித்திருவிழா:

டிசம்பர் 26,27,28 ம் தேதிகளில் தேனி மாவட்டம் கூடலூர் -மலையடிவாரப் பகுதியான பளியன்குடி எனும் கிராமத்தில் உள்ள கம்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் சார்பாக ஓர் கல்வித்திருவிழா நடைபெற்றது. அங்கு வசிக்கும் பழங்குடியின மாணவர்களுக்கான புத்தாக்கப்பயிற்சிக்காக இந்நிகழ்வு திட்டமிடப்பட்டு அங்குள்ள பொதுமக்களும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட வெற்றிகரமான திருவிழாவாகவே அமைந்து விட்டது. 
 
இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக பாடல்கள், கதைகள் , ஒரிகாமி பயிற்சிகள் போன்ற செயல்பாடுகள் நடத்தப்பட்டன. அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளை செயலாளர் க.முத்துக்கண்ணன், ராஜ்குமார் ஆகியோர் கருத்தாளராக பங்கேற்று பயிற்சிகளை வழங்கினர். அரையாண்டு விடுமுறையில் ஆசிரியர்களெல்லாம் பள்ளிகூடத்தை மறந்து களிப்பில் இருக்கும் தமிழக கல்விச்சுழலில் அப்பள்ளி சார்ந்தவர்களையெல்லாம் விடுமுறை தினத்திலும் ஒன்றிணைத்து பழங்குடியின மாணவர் நலனுக்காக ஒர் கல்வித்திருவிழாவை நடத்தியிருந்தார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட பொதுக்குழு உறுப்பினருமான ஜெ.முருகன் . அவருக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..
க.முத்துக்கண்ணன் 

No comments:

Post a Comment