முதல் பக்கம்

Jan 12, 2013

உலகம் அழிந்துவிடும்... குறித்த தகவல்கள்

2012 டிசமர் 21ல் உலகம் அழிந்துவிடும் என கட்டுக்கதைகள் பரப்ப்ப்பட்டு வருகிறது.இதற்கு எதிராக வலுவான பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.  

நாசாவின் வினா விடை விளக்க குறிப்புகள் :

இதற்கு உதவிய நண்பர் சி.வெங்கடேசன்,பார்த்தசாரதி மற்றும் இதை உடனடியாக மொழிபெயர்த்துக் கொடுத்த திருமிகு எல்.பிரபாகரன்,பாவலர் பொன்கருப்பையா ஆகியோருக்கு நன்றி. 

1)நிறைய ஊடகங்கள் 2012 டிச.21-ல் உலகம் அழியும் என்கின்றனவே.அப்படி ஏதேனும் அபாயம் உள்ளதா?
நமது பூமி 4பில்லியன் வருடங்களாக அருமையாக இயங்கி வருகிறது.உலகமுழுதும் உள்ள அறிவியல் அறிஞர்களுக்கு 2012-ல் எந்தவிதமான அபாயமுமில்லை என்று தெரியும்.

2)2012-ல் உலகம் அழியும் என்ற கருத்தின் மூலம் என்ன?
சுமேரியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட நிபிரு என்ற கிரகம் பூமியை நோக்கி நகருவதாக கிளப்பப்பட்ட கதையிலுருந்து துவங்கியதுதான் இது. முதலில் இது 2003 ல்  நிகழும் என்றார்கள்.பின்னர் அப்போது எதுவும் நடக்கவில்லை என்றதும் 2012க்கு அதை நகர்த்தி மாயன் நாட்காட்டியின் முடிவோடு தொடர்பு படுத்திவிட்டார்கள்.மாயன் நாட்காட்டி 21.12.2012ல் முடிவதால் அவர்கள் 21.12.2012 அன்று உலகின் இறுதி நாள் என்கிறார்கள்.

3) மாயன் நாட்காட்டி டிச.2012ல் முடிகிறதா?
நீங்கள் உங்கள் வீட்டு சமையலரையில் மாட்டியுள்ள நாட்காட்டி எப்படி டிச.31னுடன் முடிவடையாதோ அதே போல் மாயன் நாட்காட்டியும் 21.12.2012 டன்  முடிந்துவிடாது.இந்த நாள் மாயன் நாட்காட்டியின் ஒரு நீண்டகால அளவைக் குறிக்கிறது.ஆனால் நம்முடைய நாட்காட்டி எப்படி ஜனவரி 1ல் மீண்டும் துவங்குகிறதோ அதேபோல் அவர்களுடைய வருடமும்(நீண்ட கால அளவைக்கொண்டது) துவங்கிவிடும்.


4. நாசா டிசம்பர் 23 முதல் 25வரை ஒரு முழு இருள் சூழும் என்பதை அனுமானிக்கிறதா.? 
நிச்சயமாக இல்லை. நாசா மட்டுமல்ல வேறு எந்த அறிவியல் நிறுவனமும் அதை எதிர்நோக்கவில்லை.இதுபற்றிய தவறான கருத்துக்களை பரப்புவோர் நமது அண்டத்தில் ஒருவித ஒழுங்கமைப்பு ஏற்படுவதின் காரணமாக இந்த இருள் நேரப்போவதாக கூறுகிறார்கள். இந்த வதந்திகளை பரப்புவோர் நாசா நிர்வாகி சார்லஸ் போல்டன் தீவிர தயாரிப்போடு இருக்கச் சொன்னதாக கூறுகிறார்கள். இது தவறு.அவர் கூறியது பொதுவான தயார்நிலை பற்றியது. அதில் இந்த இருள் சூழல் பற்றி ஒருபோதும் தெரிவிக்கவில்லை.

5. கோள்களின் ஒழுங்கமைப்பு என்பது பூமியை தாக்க்கும் வகையில் அமையுமா?
அடுத்த சில பத்தாண்டுகளுக்கு கோள்களின் ஒழுங்கமைப்பு என்பது நிகழாது. அப்படி நிகழ்ந்தாலும் பூமியின்மேல் அதன் தாக்கம் என்பது அர்ப்பமாகத்தான் இருக்கும். இதுபோன்ற கோள்களின் ஒழுங்கமைப்பு 1962ல் ஒரு முறையும்,1982,2000 ஆகிய ஆண்டுகளில் இருமுறையும் ஏற்பட்டது.ஒவ்வொரு டிசம்பரின் போதும் பூமியும் சூரியனும் பால்வெளி மண்டலத்தின் மையத்துடன் நேர்கோட்டில் வருவதுண்டு. ஆனால் அது ஆண்டுதோறும் நடக்கும் ஒரு நிகழ்வாகும்.

6. நிபுரு அல்லது கோள் எக்ஸ் அல்லது ஏரிஸ் என்னும் கோள்கள் இருக்கிறதா ? அவை பூமியை நோக்கிவந்து அழிவை ஏற்படுத்த வாய்ப்புக்கள் உள்ளதா?
நிபுரு மற்றும் பிற கோள்களைப்பற்றிய கதைகள் அனைத்தும் ஒரு இணையதள ஏமாற்று. இந்த கூற்றுகளுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. இந்த நிபுரு மற்றும் கோள் எக்ஸ் ஆகியவை உண்மையாக இருந்து அவை புவியை 2012ல் தாக்கவரும் என்கிற பட்சத்தில், நமது வானவியலாளர்கள் குறைந்தது கடந்த 10 ஆண்டுகளில் அவற்றை அறிந்திருப்பார்கள்.மேலும் அது சாதாரண கண்களுக்கு தெரியும் நிலையில் வந்திருக்கும் . ஆகையால் அது உண்மையானதாக இருக்க முடியாது. ஏரிஸ் என்பது  புளுட்டோவைப் போன்ற ஒரு குள்ளக்கிரகம். இது சூரிய குடும்பத்திற்கு வெளியில்தான் இருக்கும். அது பூமியை அதிகபட்சமாக 4 பில்லியன் கி.மீ தூரம் வரைதான் நெருங்கமுடியும்.

7. துருவ மாற்றக்கருத்துக்கொள்கை என்பது என்ன? பூமி இன்னும் சில நாட்களில் அல்லது மணிகளில் 180டிகிரி சுழற்சிக்கு உட்படும் என்பது உண்மையா?
பூமியின் சுழற்சியில் மாற்றம் என்பது நடக்க இயலாது.சில கண்டங்களில் சிறு நகர்வு ஏற்படலாம்.( உதாரணத்திற்கு அண்டார்டிகா நூற்றுக்கனக்கான பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்தது )ஆனால் அது துருவ சுழற்சி மாற்ற விசைகளுக்கு தொடர்புடையது எனும் கருத்து ஏற்புடையது அல்ல.
பெரும்பாலான அழிவுகுறித்த இணையதளங்கள் எப்படியோ வலைவிரித்து மக்களை முட்டாள் ஆக்குகின்றன. அவர்கள் பூமியின் காந்த துருவ சக்தியையும், சுழற்சியையும்(சீரற்ற முறையில்) சராசரியாக 4லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காந்த ஈர்ப்பு மாறுதல்களை ஒப்பிட்டு பேசுகிறார்கள். நமக்கு தெரிந்த வகையில் காந்த ஈர்ப்பு மாறுதல்கள் புவிக்கு எவ்வித கெடுதல்களையும் செய்யவில்லை. விஞ்ஞானிகள் அடுத்த சில மில்லியன் ஆண்டுகளில் இந்த காந்த ஈர்ப்பு மாற்றம் நிகழ வாய்ப்பில்லை என்கிறார்கள்.

8. 2012ல் புவி விண்கற்களால் தாக்கப்படும் ஆபத்து உள்ளதா?
பூமி எப்போதும் சிற்சில எரிவிண்மீன்களாலும்,விண்கற்களாலும் தாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.ஆனால் பெரிய அளவில் தாக்குவது என்பது மிகமிக அரிதானது.இதற்கு முன்னர் நடந்த பெரிய தாக்குதல் என்பது 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக நடந்துள்ளது.அதில்தான் டைனோசர் போன்ற அரிய விலங்குகள் அழிவைச் சந்தித்தன.
இன்று நாசா விண்வெளி ஆய்வாளர்கள் பூவியைத்தாக்கக்கூடிய பெரிய விண்கற்களை முன்கூட்டியே அரிய அண்டவெளி பாதுகாப்பு ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள். நாம் ஏற்கனவே டைனோசர்களை அழித்தது போன்ற பெரிய விண்கற்களின் தாக்குதல்கள் ஏதுமில்லை என தீர்மானித்துவிட்டோம்.
இதுபற்றி புவி அருகு பொருள்கள் பற்றிய உண்மைகள் ஒவ்வொருநாளும் நாசாவின் இணையதளம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது.எனவே 2012ல் புவியை எந்தப்பொருளும் தாக்கப்போவதில்லை என்பதை நாமே அறிந்துகொள்ளலாம்.

9. உலகம் 2012ல் முடிவுக்கு வருகிறது என்ற கூற்றினை நாசா எவ்வாறு பார்க்கிறது?
2012 ல் நடைபெறப்போவதாய் கூறப்படும் அழிவு மற்றும் கற்பனையான மாற்றங்களில் அறிவியல் எங்கே இருக்கிறது? ஆதாரங்கள் எங்கே இருக்கிறது? ஒன்றுமில்லை. இந்த கற்பனையான கூற்றுகள் புத்தகங்கள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் இணையதளங்களின் மூலம் சொல்லப்பட்டாலும் அவற்றை நாம் ஏற்கமுடியாது. டிசம்பர் 2012ல் நடைபெறப்போவதாக கூறப்படும் அசாதாரண நிகழ்வுகளுக்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஏதுமில்லை.

10. 2012ல் பெரும் சூரிய புயல் ஏற்படும் அபாயம் எதிர்பார்க்கப்படுகிறதா?
சூரியப்புயல் என்பது சுமார் 11ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வழக்கமான ஒன்றுதான். இந்த நடவடிக்கையின் உச்சத்தில் ஏற்படும் வெப்பம் செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளில் சிறு சிறு இடையூறுகளை விளைவிக்கலாம். ஆனால் நமது தொழில்நுட்ப வல்லுநர்கள் அதற்குமான காப்பு நடவடிக்கைகளை அரிய முனைந்துள்ளனர். எனவே 2012 டிசம்பரில் புவிக்கு எந்த குறிப்பிடத்தக்க பாதிப்பும் இல்லை.

No comments:

Post a Comment