டிசம்பர் 29 ம் தேதி தேனி மாவட்டம், லோயர்கேம்ப் அரசு உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி மாணவர்களுக்கான நாட்டு நலப் பணித்திட்ட முகாமில் அறிவியல் இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட துணைத் தலைவர் பேரா. முகமது சரீப் தலைமை தாங்கினார். ”அறிவியல் கல்வியின் அவசியம்” எனும் தலைப்பில் அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளைச் செயலாளர் க.முத்துக்கண்ணன் கருத்துரை வழங்கினார். புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து மாவட்ட கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட் ராமன் சில பயிற்சிகளை வழங்கினார். ஒரிகாமி பயிற்சிகள் உள்ளிட்ட பிற செயல்பாடுகள் நடத்தப்பட்டன. கல்லூரிப் பேராசிரியர்கள் முகமது ராவுத்தர் , முகமது மீரான், பிலால் உட்பட 150 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment