முதல் பக்கம்

Dec 23, 2013

துளிர் திறனறிதல் தேர்வு-2013

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் டிசம்பர் 7 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை துளிர் திறனறிதல் தேர்வு-2013 மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10 தேர்வு மையங்களில் 410 மாணவர்கள் இத்தேர்வினை எழுதினர்.வினாத்தாள் பிரித்தல் ,அறை கண்காணிப்பளர்கள் நியமித்தல், பள்ளிகளுடன் நல்ல தொடர்பு இருந்தமையால் தேர்வு எவ்வித குழப்பமுமின்றி மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.பெரியகுளம்,கம்பம்,உத்தமபாளையம்,கடமலை-மயிலை ஆகிய ஒன்றியங்களில் தேர்வு நடைப்பெற்றது. மற்ற ஒன்றியங்களில் இத்தேர்வினை அடுத்த ஆண்டு மிகச் சிறப்பாக நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.பெரியகுளம் கிளை தலைவர் திருமிகு.ஏ.எஸ்.பாலசுப்ரமணியன்,கம்பம் கிளை செயலர் க.முத்துக்கண்ணன்,மாநிலச் செயலாளர் தே.சுந்தர்,உத்தமபாளையம் கிளை செயலாளர் திருமிகு.ஜஸ்டின் ரவி,மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன்,கம்பம் கிளை பொருளாளர் மொ.தனசேகரன்,கம்பம் கிளை நந்தகுமார்,ராஜ்குமார்,அறிவியல் இயக்க ஆர்வலர் சூரியபிரகாஸ்,உத்தமபாளையம் கிளைத்தலைவர் வளையாபதி,பூசணியூத்து பள்ளி ஆங்கில ஆசிரியர் மொக்கராஜ்,கடமலை-மயிலை கிளைச் செயலாளர் திருமிகு.இரத்தினசாமி,கே.எம் பட்டி ஈஸ்வரன் ஆகியோரின் பங்கும் பணியும் போற்றுதலுக்குரியது.

DIET ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு ஐசான் குறித்த கருத்தரங்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 21 அன்று வியாழனன்று உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு ஐசான் வால் நட்சத்திரம் குறித்து கருத்தரங்கம் நடைப்பெற்றது.கருத்தரங்கத்திற்கு உத்தமபாளையம் கிளைத்தலைவர் திருமிகு.வளையாபதி அவர்கள் தலைமை தாங்கினார். நிறுவன முதல்வர்(பொறுப்பு) திருமிகு.சேவியர் அவர்கள் முன்னிலை வகித்தார்.கம்பம் கிளைச் செயலாளர் திருமிகு.க.முத்துக்கண்ணன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முனைவர் முகமது ஷெரீஃப் ஆகியோர் மாணவ்-மாணவியர்களுக்கு ஐசான் வால் நட்சத்திரம் குறித்து விளக்கம் அளித்தனர்.ஐசான் வால் நட்சத்திரம் குறித்த படக்காட்சியும் காண்பிக்கப்பட்டது.80 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர். அதே தினத்தன்று மாநிலச்செயலாளர் தே.சுந்தர் அவர்கள் கே.கே.பட்டி கஸ்தூரிபாய் நடுநிலைப்பள்ளி, நாராயனதேவன்பட்டி நேசன்கலாசாலை,அரசு கள்ளர் நடு நிலைப்பள்ளி,சி.எஸ்.ஐ.துவக்கப்பள்ளி,இராமகிருஸ்னா வித்யாலயா ஆகிய பள்ளிகளுக்கு சென்று ஐசான் வால் நட்சத்திரம் குறித்து மாணவ-மாணவியர்களுக்கு வகுப்பறையில் சிறிது நேரம் விளக்கியதோடு துண்டு பிரச்சுரத்தையும் விநியோகம் செய்தார்..

மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி

மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி -1
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு(நவம்பர் 14-2013)வியாழனன்று கடமலை-மயிலை ஒன்றியத்திறகு உட்பட்ட பூசணியூத்து கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி காலை 11 மணி அளவில் நடைபெற்றது.துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு.முருகன் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க கன்னியாகுமரி மாவட்ட கருத்தாளர் திருமிகு.எஸ்.தாமோதரன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் வி.வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் செயல்பாடுகளை செய்து காட்டினர். உயர் நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளியைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மானவ மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். உயர்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் திருமிகு.இரா.ஸ்டாலின் இறுதியில் நன்றி கூறினார்.

மந்திரமா? த ந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி -2
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு(நவம்பர் 14-2013) வியாழனன்று கடமலை-மயிலை ஒன்றியத்திறகு உட்பட்ட உப்புத்துறை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.இராணி தலைமை தாங்கினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க கன்னியாகுமரி மாவட்ட கருத்தாளர் திருமிகு.எஸ்.தாமோதரன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் வி.வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் செயல்பாடுகள் பலவற்றை செய்து காட்டினர். மாணவ மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அறிவியல் பட்டதாரி ஆசிரியை இறுதியில் நன்றி கூறினார்.

மந்திரமா? த ந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி

மந்திரமா? த ந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி -1
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் (நவம்பர் 13-2013)புதன் கிழமை அன்று போடி ஒன்றியத்திறகு உட்பட்ட செளண்டீஸ்வரி நடு நிலைப்பள்ளியில் மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி காலை 11 மணி அளவில் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு. சதீஸ் குமார் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க கன்னியாகுமரி மாவட்ட கருத்தாளர் திருமிகு.எஸ்.தாமோதரன் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் செயல்பாடுகளை செய்து காட்டினர். 350 க்கும் மேற்பட்ட மானவ மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.பள்ளி மாணவர் ஜெயராமன் இறுதியில் நன்றி கூறினார்.போடி கிளை செயலாளர் திருமிகு ஸ்ரீதர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி -2
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் (நவம்பர் 13-2013)புதன் கிழமை அன்று போடி ஒன்றியத்திறகு உட்பட்ட போடி அம்மாபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி மாலை 3 மணி அளவில் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு.ஆண்டவன் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க கன்னியாகுமரி மாவட்ட கருத்தாளர் திருமிகு.எஸ்.தாமோதரன் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் செயல்பாடுகளை செய்து காட்டினர். 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.அறிவியல் பட்டதாரி ஆசிரியர் மற்றும் போடி கிளைப் பொருளாளர் திருமிகு.ஜெகதீசன் இறுதியில் நன்றி கூறினார்.போடி கிளை செயலாளர் திருமிகு ஸ்ரீதர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2013

நிகழ்ச்சி துவக்கம்: மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய 21வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நவம்பர்,10 சர்வதேச அறிவியல் தினத்தன்று தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். மாவட்டத்துணைச்செயலாளர் எஸ்.ஞானசுந்தரி, தேனி கிளைத்தலைவர் மா.மகேஷ், பெரியகுளம் கிளைத்தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தேனி கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் வரவேற்றார். மாவட்டச்செயலாளர் வி.வெங்கட்ராமன் அறிமுக உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் தே.சுந்தர் மாநாட்டைத் துவக்கிவைத்துப்பேசினார்.


இளம் விஞ்ஞானிகள் ஆய்வறிக்கை சமர்ப்பித்தல்: அதனையடுத்து கம்பம், தேனி, ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம் ஆகிய ஒன்றியங்களைச்சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பள்ளி,, துளிர் இல்லங்களில் இருந்து மாணவர்கள் ஆற்றல்: தேடல், கையகப்படுத்துதல் மற்றும் சேமித்தல் என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு 56 ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். முனைவர் ஜி.செல்வராஜ், முனைவர் சி.கோபி, முத்துமணிகண்டன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டு சிறந்த 7 ஆய்வுகளை மாநில அளவிலான மாநாட்டிற்கு தேர்வு செய்தனர்.


தேர்வான ஆய்வுகள்: தமிழ் முதுநிலை பிரிவில் ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியரின் சமையலறையின் எதிர்கால எரிபொருள் (குழுத்தலைவர்: என்.லிசா) என்ற ஆய்வும் கம்பம் ஸ்ரீமுத்தையாபிள்ளை உயர்நிலைப்பள்ளி, கணிதமேதை இராமானுஜம் துளிர் இல்ல மாணவர்களின் அன்றாட வாழ்வில் சூரிய ஆற்றல் (செ.பிரவீன் குமார்) என்ற ஆய்வும் பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியரின் கிராமங்களில் காணப்படும் உயிர்நிறை ஆற்றல் (ராஜேஸ்வரி) என்ற ஆய்வும் தேர்வுசெய்யப்பட்டன.

தமிழ் இளநிலை பிரிவில் கம்பம் சுங்கம் நகராட்சி பள்ளியின் டார்வின் துளிர் இல்ல மாணவர்களின் பழக்கழிவு மற்றும் குப்பைகளிலிருந்து இயற்கை எரிவாயு தயாரித்தல்(ஹேவந்த்குமார்) என்ற ஆய்வும் குண்டல்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் உப்பு நீரிலிருந்து மின்சாரம் தயாரித்தல் (திவ்யாணி) என்ற ஆய்வும் பெரியகுளம் டிரையம்ப் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் போக்குவரத்துப் பயன்பாட்டில் ஆற்றல் திட்டமிடல் (நிதிஷ்குமார்) என்ற ஆய்வும் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் உள்ளூர் நீர்வள ஆற்றலைக் கண்டறிதலும் பாதுகாத்தலும் (எ.ஜனனி) என்ற ஆய்வும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 


ஐசான் வால்நட்சத்திரம் கருத்துரை: கடந்த 2000 ஆண்டுகளில் நாம் காணக்கூடிய மிகப்பிரகாசமான வால்நட்சத்திரமான ஐசான் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தெரியும். அதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலக்கருத்தாளர் மொ.பாண்டியராஜன் கருத்துரையாற்றினார்.


நிறைவுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் எஸ்.கண்ணன் தேர்வான இளம்விஞ்ஞானிகளுக்கு பதக்கம் அணிவித்து பாராட்டிப் பேசினார். மாநிலச்செயலாளர் மு.தியாகராஜன் நிறைவுரையாற்றினார். மாவட்டப்பொருளாளர் ஜெ.மஹபூப் பீவி நன்றி கூறினார். ஆசிரியர்கள், மாணவர்கள், இயக்கப்பொறுப்பாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மாவட்டசெயற்குழு கூட்டம்-3

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நவம்பர் 7 ம் தேதி(வியாழன்கிழமை) மாலை 5 மணி அளவில் தேனி அல்லி நகரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது.மாவட்டத்தலைவர் திருமிகு பா.செந்தில்குமரன் தலைமை தாங்கினார்.மாவட்ட பொருளாளர் ஜெ.மெஹபூப் பீவி முன்னலை வகித்தார்.மாநிலச் செயலாளர் திருமிகு.தியாகராஜன் மற்றும் தே.சுந்தர் கலந்து கொண்டனர். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பதிவு செய்யப்பட்ட பதிவு விவரங்கள் வேலை பகிர்மானம், நிதி பகிர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது.தேனி கிளை தலைவர் ஆர்.மகேஸ்,துணைச் செயலாளர் ஞானசுந்தரி பெரியகுளம் கிளை செயலர் ராம்சங்கர் உட்பட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழ் நாடு அறிவியல் இயக்க ஆதரவாளர் திருமிகு வனராசா இதய கீதன் அவர்கள் சாலை விபத்தில் அன்று மாலை உயிர் இழந்தார். செயற்குழுவில் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

புத்தகக் கண்காட்சி -2

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கம்பம் கிளை செயலாளர் திருமிகு.ஜெ.முருகன் அவர்களது இல்ல விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புத்தகக் கண்காட்சி 27-10-13(புதன்கிழமை) அன்று கூடலூர் நகரில் நடைபெற்றது.கம்பம் கிளை செயலாளர் திருமிகு க.முத்துக்கண்ணன் ஏற்பாடு செய்திருந்தார். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன் , அறிவியல் இயக்க ஆர்வலர் நந்த குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் புத்தக விற்பனை செய்தனர்.ஆசிரியர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், விழாக்களில் தொடர்ந்து இலக்கினை கணக்கில் கொள்ளாமல் புத்தக விற்பனை செய்வது ஆரோக்கியமான விசயம் ஆகும்…

புத்தாக்கப் பயிற்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டக் கிளையின் சார்பில் அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் கூடலூர் குரு பயிற்சி மையத்தில் அக்டோபர் 1 (செவ்வாய்க்கிழமை)நடைபெற்றது. முகாமிற்கு தேனி மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் வி.வெங்கட்ராமன் பயிற்சியின் நோக்கம் பற்றி அறிமுக உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார். 

மக்கள் மத்தியில் அறிவியல் பரப்புதலின் அவசியம் மற்றும் தேவைகள் குறித்து கல்வியாளரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளருமான அ.அமலராஜன் எடுத்துக்கூறினார். அறிவியல் பிரச்சார வழிமுறைகள் மற்றும் வடிவங்கள் குறித்து மாநிலச்செயலாளர் மு.தியாகராஜன் பேசினார். அறிவியல் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டிய எதிர்கால பணிகள் குறித்தும் மாநிலச்செயலாளர் தே.சுந்தர் விளக்கம் அளித்தார். 

முகாமில் மாவட்டப்பொருளாளர் ஜெ.மஹபூப் பீவி, ஆசிரியர் இணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரி மற்றும் கம்பம், ஆண்டிபட்டி, சின்னமனூர், போடி, தேனி, பெரியகுளம், கடமலை-மயிலை ஒன்றியங்களைச் சேர்ந்த அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூடலூர் கலிலியோ துளிர் இல்ல பொறுப்பாளர் திருமிகு ராஜ்குமார் இறுதியில் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளைக் கம்பம் கிளை செயலாளர் திருமிகு க.முத்துக்கண்ணன் செய்திருந்தார்.

NCSC வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்

21 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் செப்டம்பர்16 மதியம் 2 மணி அளவில் பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. கருத்தாளராக மாநிலச் செயலாளர் திருமிகு தியாகராஜன்,மாவட்ட பொருளாளர் திருமிகு மஹபூப் பீவி ஆகியோர் பங்கு பெற்றனர். தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாட்டில் பங்கு பெறுவது குறித்தும் மாநாட்டுக்கான கருப்பொருள் குறித்தும் இணைச் செயலர் திருமிகு ஞானசுந்தரி ஆசிரியர்களிடையே எடுத்துக்கூறினார்.பெரியகுளம் ஒன்றியத்தைச் சேர்ந்த 20 ஆசிரியர்கள் பங்கு பெற்றனர்.முகாமிற்கான ஏற்பாடுகளை பெரியகுளம் கிளை செயலாளர் திருமிகு.ராம்சங்கர் செய்திருந்தார்.

நிர்வாகக்குழு கூட்டம்

செப்டம்பர் 11 புதன் கிழமை மாலை 6 மணி அளவில் தேனி பிரித்வி கம்ப்யூட்டர் மையத்தில் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.மாநிலச் செயலாளர் திருமிகு தியாகராஜன் மற்றும் தே.சுந்தர் கலந்து கொண்டனர். நிர்வாகக்குழு கூட்டத்தில் 9 பேர் கலந்து கொண்டனர்.,.,