முதல் பக்கம்

Dec 23, 2013

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2013

நிகழ்ச்சி துவக்கம்: மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய 21வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நவம்பர்,10 சர்வதேச அறிவியல் தினத்தன்று தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். மாவட்டத்துணைச்செயலாளர் எஸ்.ஞானசுந்தரி, தேனி கிளைத்தலைவர் மா.மகேஷ், பெரியகுளம் கிளைத்தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தேனி கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் வரவேற்றார். மாவட்டச்செயலாளர் வி.வெங்கட்ராமன் அறிமுக உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் தே.சுந்தர் மாநாட்டைத் துவக்கிவைத்துப்பேசினார்.


இளம் விஞ்ஞானிகள் ஆய்வறிக்கை சமர்ப்பித்தல்: அதனையடுத்து கம்பம், தேனி, ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம் ஆகிய ஒன்றியங்களைச்சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பள்ளி,, துளிர் இல்லங்களில் இருந்து மாணவர்கள் ஆற்றல்: தேடல், கையகப்படுத்துதல் மற்றும் சேமித்தல் என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு 56 ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். முனைவர் ஜி.செல்வராஜ், முனைவர் சி.கோபி, முத்துமணிகண்டன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டு சிறந்த 7 ஆய்வுகளை மாநில அளவிலான மாநாட்டிற்கு தேர்வு செய்தனர்.


தேர்வான ஆய்வுகள்: தமிழ் முதுநிலை பிரிவில் ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியரின் சமையலறையின் எதிர்கால எரிபொருள் (குழுத்தலைவர்: என்.லிசா) என்ற ஆய்வும் கம்பம் ஸ்ரீமுத்தையாபிள்ளை உயர்நிலைப்பள்ளி, கணிதமேதை இராமானுஜம் துளிர் இல்ல மாணவர்களின் அன்றாட வாழ்வில் சூரிய ஆற்றல் (செ.பிரவீன் குமார்) என்ற ஆய்வும் பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியரின் கிராமங்களில் காணப்படும் உயிர்நிறை ஆற்றல் (ராஜேஸ்வரி) என்ற ஆய்வும் தேர்வுசெய்யப்பட்டன.

தமிழ் இளநிலை பிரிவில் கம்பம் சுங்கம் நகராட்சி பள்ளியின் டார்வின் துளிர் இல்ல மாணவர்களின் பழக்கழிவு மற்றும் குப்பைகளிலிருந்து இயற்கை எரிவாயு தயாரித்தல்(ஹேவந்த்குமார்) என்ற ஆய்வும் குண்டல்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் உப்பு நீரிலிருந்து மின்சாரம் தயாரித்தல் (திவ்யாணி) என்ற ஆய்வும் பெரியகுளம் டிரையம்ப் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் போக்குவரத்துப் பயன்பாட்டில் ஆற்றல் திட்டமிடல் (நிதிஷ்குமார்) என்ற ஆய்வும் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் உள்ளூர் நீர்வள ஆற்றலைக் கண்டறிதலும் பாதுகாத்தலும் (எ.ஜனனி) என்ற ஆய்வும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 


ஐசான் வால்நட்சத்திரம் கருத்துரை: கடந்த 2000 ஆண்டுகளில் நாம் காணக்கூடிய மிகப்பிரகாசமான வால்நட்சத்திரமான ஐசான் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தெரியும். அதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலக்கருத்தாளர் மொ.பாண்டியராஜன் கருத்துரையாற்றினார்.


நிறைவுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் எஸ்.கண்ணன் தேர்வான இளம்விஞ்ஞானிகளுக்கு பதக்கம் அணிவித்து பாராட்டிப் பேசினார். மாநிலச்செயலாளர் மு.தியாகராஜன் நிறைவுரையாற்றினார். மாவட்டப்பொருளாளர் ஜெ.மஹபூப் பீவி நன்றி கூறினார். ஆசிரியர்கள், மாணவர்கள், இயக்கப்பொறுப்பாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment