தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டக் கிளையின் சார்பில் அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் கூடலூர் குரு பயிற்சி மையத்தில் அக்டோபர் 1 (செவ்வாய்க்கிழமை)நடைபெற்றது. முகாமிற்கு தேனி மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் வி.வெங்கட்ராமன் பயிற்சியின் நோக்கம் பற்றி அறிமுக உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார்.
மக்கள் மத்தியில் அறிவியல் பரப்புதலின் அவசியம் மற்றும் தேவைகள் குறித்து கல்வியாளரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளருமான அ.அமலராஜன் எடுத்துக்கூறினார். அறிவியல் பிரச்சார வழிமுறைகள் மற்றும் வடிவங்கள் குறித்து மாநிலச்செயலாளர் மு.தியாகராஜன் பேசினார். அறிவியல் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டிய எதிர்கால பணிகள் குறித்தும் மாநிலச்செயலாளர் தே.சுந்தர் விளக்கம் அளித்தார்.
முகாமில் மாவட்டப்பொருளாளர் ஜெ.மஹபூப் பீவி, ஆசிரியர் இணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரி மற்றும் கம்பம், ஆண்டிபட்டி, சின்னமனூர், போடி, தேனி, பெரியகுளம், கடமலை-மயிலை ஒன்றியங்களைச் சேர்ந்த அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூடலூர் கலிலியோ துளிர் இல்ல பொறுப்பாளர் திருமிகு ராஜ்குமார் இறுதியில் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளைக் கம்பம் கிளை செயலாளர் திருமிகு க.முத்துக்கண்ணன் செய்திருந்தார்.
No comments:
Post a Comment