முதல் பக்கம்

Feb 28, 2014

தேசிய அறிவியல் தின விழா -2014

பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் ஒன்றியக்கிளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சு, ஓவியப்போட்டிகள் கம்பம் நகராட்சி மெயின் ஆரம்பப்பள்ளியில் நடைப்பெற்றது. ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 9,10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளில் பேச்சு,ஓவிப்போட்டிகள் நடைபெற்றன. மாணவர்கள் மிக ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு கம்பம் கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமை தாங்கினார். அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளைச் செயலாளர் க.முத்துக்கண்ணன் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் மு.தியாகராஜன் துவக்க உரை வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கம்பம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமிகு.அங்கயர்க்கண்ணி பதக்கம் அணிவித்து பாராட்டினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை திருமிகு.எம்.சிந்தாமணி அவர்கள் சான்றிதழ் வழங்கினார்.அறிவியல் இயக்க ஆர்வலர். திருமிகு. செ.செல்லப்பாண்டியன் பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் திருமிகு தே.சுந்தர் அவர்கள் தேசிய அறிவியல் தின கொண்டாட்டத்தின் அவசியம் குறித்து மாணவர்களிடம் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் திருமிகு.வி,வெங்கட்ராமன் அவர்கள் சர்வதேச படிகவியல் ஆண்டு -2014 குறித்து கருத்துரை வழங்கினார்.கம்பம் கிளை பொருளாளர் திருமிகு மொ.தனசேகரன் அவர்கள் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓவியர் பாண்டி, நந்தகுமார், தி. சூரிய பிரகாஷ், ரா.ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இருந்து 180 க்கும் மேற்பட்ட மாணவர்களும், 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.அதே தினத்தன்று தேசியஅறிவியல்தினவிழா தேனி அன்னஞ்சி அரசு கள்ளர் உயர் நிலைப்பள்ளியில் மாவட்ட தலைவர் திருமிகு.பா.செந்தில் குமரன் அவர்களது ஏற்பாட்டில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.பல்வேறு அறிவியல் தலைப்புகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் கல ந்துரையாடினர்.

No comments:

Post a Comment