தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை செயற்குழு கூட்டம் பிப்ரவரி 19 புதனன்று மாலை 7 மணி அளவில் கம்பம் மாவட்ட அலுவலகத்தில் நடைப்பெற்றது.கம்பம் கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமை தாங்கினார்.கிளையில் நடைப்பெற்ற வேலைகளை கிளைச் செயலர் க.முத்துக்கண்ணன் எடுத்துக்கூறினார்.கம்பம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக புத்தக விற்பனை மேற்கொண்டு வரும் கிளை செயற்குழு உறுப்பினர் திருமிகு நந்தகுமாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நமது அறிவியல் வெளியீடுகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருவது உணரப்பட்டது.பாரதி புத்தகாலாயம் மற்றும் மாநில மையத்தில் இருந்து புத்தகங்களை மேலும் கொள்முதல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.வருகின்ற பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கம்பம் கிளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு,ஓவிய போட்டிகள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.மாநிலச்செயலாளர் தே.சுந்தர், மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன்,கிளைப்பொருளர் திருமிகு மொ.தனசேகரன்,கிளை இணைச்செயலாளர் ஓவியர் பாண்டி,கூடலூர் நகரக்கிளை செயலர் திருமிகு சூரியபிரகாஷ்,கிளை செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment