முதல் பக்கம்

Feb 28, 2015

கம்பத்தில் தேசிய அறிவியல் தினவிழா…

உலகப்புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானி சர்.சி.வி.இராமன் தன்னுடைய புகழ்பெற்ற இராமன் விளைவை 1928 ஆம் வருடம் பிப்ரவரி 28 ஆம் நாள் உலகிற்கு நிருபித்தார்.அவரது சாதனையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் நாள் தேசிய அறிவியல் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்டத்தின் சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு மற்றும் ஓவியப்போட்டிகள் பிப்ரவரி27,வெள்ளிக்கிழமை அன்று கம்பம் நகராட்சி மெயின் ஆரம்பப்பள்ளியில் நடைப்பெற்றது.கல்வி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 25 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 200 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் 30 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.துவக்கநிலை, நடுநிலை,உயர்நிலை என மூன்று பிரிவுகளில் மாணவ-மாணவியர் பல்வேறு அறிவியல் தலைப்புகளில் பேச்சு மற்றும் ஓவியப்போட்டிகளில் பங்கேற்றனர். 

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க கம்பம் கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹா.ஸ்ரீராமன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டசெயற்குழு உறுப்பினர் க.பாண்டி வரவேற்புரை ஆற்றினார்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட செயலாளர் வி.வெங்கட்ராமன் மற்றும் மாநிலச் செயலாளர் தே.சுந்தர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.குழந்தைகளுக்கான மந்திரமா? தந்திரமா? மேஜிக் நிகழ்ச்சியினை ஆசிரியர் ராஜ்குமார் செய்து காட்டினார்.கம்பம் கிளைப் பொருளாளர் மொ.தனசேகரன் நன்றியுரை வழங்கினார்.அறிவியல் தின விழாவை ஆசிரியர்கள் சுரேஸ்கண்ணன்,நந்தகுமார்,செல்லப்பாண்டி மற்றும் சோமநாதன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 
போட்டிகளில் வெற்றி பெற்றோர் விவரம் பின்வருமாறு:
பேச்சுப்போட்டி:  துவக்கநிலை(4,5 ஆம் வகுப்பு):

முதலிடம்: எஸ்.இன்சமாம் உல் ஹக் (என்.எஸ்.கே.பி.காமட்சியம்மாள் துவக்கப்பள்ளி,கூடலூர்)
இரண்டாமிடம்: அ.ஆப்ரினா பாத்திமா (ஸ்ரீ முக்தி விநாயகர் நடுநிலைப்பள்ளி,கம்பம்)
மூன்றாமிடம்:சி.ஜனனி (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.கீழக்கூடலூர்)


நடுநிலை(6,7,8 ஆம் வகுப்பு):
முதலிடம்:என்.பவித்ரா (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.சுருளிப்பட்டி)
இரண்டாமிடம்:தா.கோகிலா (ஸ்ரீ முக்தி விநாயகர் நடுநிலைப்பள்ளி,கம்பம்)
மூன்றாமிடம்:ரா.இலக்கியா (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. கீழக்கூடலூர்)

உயர்நிலை(9,10 ஆம் வகுப்பு):
முதலிடம்: இ.ஜனத்துல் பிர்தொளஸ்(நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி.கம்பம்)
இரண்டாமிடம்:கே.சுகைனா(நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி.கம்பம்)
மூன்றாமிடம்:எஸ்.அனவர் அப்சல்(இலாஹி உயர்நிலைப்பள்ளி,கம்பம்)

ஓவியப்போட்டி:  துவக்கநிலை(4,5 ஆம் வகுப்பு):
முதலிடம்: க.ரம்யா(அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளி,கே.எம் பட்டி)
இரண்டாமிடம்:டி.தனலட்சுமி((ஸ்ரீ முக்தி விநாயகர் நடுநிலைப்பள்ளி,கம்பம்)
மூன்றாமிடம்:அ. நித்தீஸ் குமார் (திருவள்ளூவர் துவக்கப்பள்ளி.கூடலூர்)

 நடுநிலை(6,7,8 ஆம் வகுப்பு):
முதலிடம்: ஜி.ஹரிகர சுதன்( ஸ்ரீ முத்தையா பிள்ளை உயர்நிலைப்பள்ளி,கம்பம்)
இரண்டாமிடம்: எம்.வினோஸ் ( நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி,கம்பம்)
மூன்றாமிடம்: எஸ். நாகராஜா (ஸ்ரீ முத்தையாபிள்ளை உயர்நிலைப்பள்ளி ,கம்பம்)


உயர்நிலை(9,10 ஆம் வகுப்பு):
முதலிடம்:எம்.அஜய் (நாலந்தா மெட்ரிக் பள்ளி.கம்பம்)
இரண்டாமிடம்:ஜெ.விஷ்னு(((ஸ்ரீ முத்தையாபிள்ளை உயர்நிலைப்பள்ளி, கம்பம்)
மூன்றாமிடம்:ஹ.அப்துல் மனாப் (இலாஹி உயர்நிலைப்பள்ளி,கம்பம்.



தொடர்புக்கு:வி.வெங்கட்ராமன் மாவட்டச் செயலாளர் 9488683929

Feb 22, 2015

தேவாரம் நியூட்ரினோ கருத்தரங்கில் கேள்விகளுக்கு பதில் அளித்த விஞ்ஞானி ; வாக்குவாதம் செய்த மக்கள்



தேவாரம் : தேவாரத்தில் நடைபெற்ற "நியூட்ரினோ' நோக்கு கூடம் குறித்த கருத்தரங்கில் பொதுமக் களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காததால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்(டி.என்.எஸ்.எப்.,) சார்பில், "நியூட்ரினோ'-அறிவியலும், அவசியமும் குறித்து விழிப்புணர்வு கூட்டம் தேவாரத்தில் நடந்தது. டி.என்.எஸ்.எப்., மாவட்ட தலைவர் செந்தில்குமரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சுந்தர் துவக்கி வைத்தார். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை முதன்மை விஞ்ஞானி வெங்கடேஷ்வரன் பங்கேற்றார். நியூட்ரினோ நோக்கு கூடம் அமைவதன் அவசியம் குறித்து சுந்தர் விளக்கமளித்தார். மக்களின் சந்தேகத்தை தீர்க்காமல், நியூட்ரினோ ஆய்வகம் அமைவதன் பயன் குறித்து விளக்க மளித்ததால் பொதுமக்கள் கூச்சலிட்டனர். நியூட்ரினோ என்றால் என்னவென்று முதலில் விளக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் கூறுகையில், ""பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில்,"மியூவான் நியூட்ரினோ' ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இது, இயற்பியல் துறையில் மேற்கொள்ளப்படும் அடிப்படை ஆராய்ச்சி, வேதியல் பொருட்கள் பயன்படுத்த போவதில்லை. பால்வெளி வீதி தோன்றிய காலத்திலேயே நியூட்ரினோ உற்பத்தி துவங்கி விட்டது. இந்த அடிப்படை துகளை குறித்த ஆராய்ச்சி இங்கு மேற்கொள்ளப்படவுள்ளது என்றார்.

குணசேகரன், தேவாரம்: ஆய்வகம் அமைக்க துளையிடப்படும் பாறை எந்த வகையை சேர்ந்தது. இத்தகைய பாறை இங்கு மட்டும் உள்ளது என்பதற்கு என்ன உத்தரவாதம். இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்புகள், ஆய்வு மேற்கொள்ளும் போது ஆபத்து ஏற்பட்டால் எதிர்ப்போம் என தெரிவிக்கின்றனர்.

விஞ்ஞானி: "நியூட்ரினோ' ஆய்வகம் அமைக்க மேற்குவங்க மாநிலத்தில் உள்ள இமயமலை பகுதி, ஊட்டி சிங்காரா வனம், பொட்டிப்புரம் ஆகிய மூன்று இடங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டன. ஜியாலஜிக்கல் சர்வே படி அம்பரப்பர் மலை அடுக்குகளற்ற ஒரே பாறை என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டது. திட்டத்தினால் எந்த ஆபத்தும் இல்லை.

செல்வராஜ், டி.புதுக்கோட்டை: ஆய்வகம் அமைந்த பின் அப்பகுதியில் உள்ள மக்கள் குடி யிருப்பு காலி செய்யப் படுமா. வாழ்வாதாரமாக உள்ள ஆடு, மாடு மேய்த்தலுக்கு இடையூறு ஏற்படுமா.

விஞ்ஞானி: திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 66 ஏக்கரில் மட்டுமே பணிகள் நடக்கும். விவசாய நிலமோ, மக்கள் குடி யிருப்பு பகுதியோ கையகப்படுத்தப்படாது.

முருகன், கோம்பை:நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வாங்கும் போது, அணு கழிவு மேலாண்மை என்று கூறப்பட்டுள்ளது. அம்பரப்பர் மலை அணு கழிவுகளை கொட்டி பாதுகாக்கும் புதைகுழியா. உடைத் தெடுக்கப்படும் கிரானைட் பாறைகள் "டாமின்' மூலம் விற்பனை செய்யப்படும் என்றால், பாறைகளை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் தற்போதுள்ள பாதையை பயன் படுத்தூர்களா.

விஞ்ஞானி: இந்தியாவில் முதன் முறையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால் தவறுதலாக அணுகழிவு மேலாண்மை என்ற பட்டியலில் அனுமதி கோரப்பட்டது. பின்னர் திருத்தி வெளியிடப்பட்டது.
 

'நியூட்ரினோ' தொழில்நுட்ப கருவிகள் உற்பத்தியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்; கருத்தரங்கில் தகவல்



தேவாரம் : “ஐ.என்.ஓ., திட்டத்தில், இந்தியாவில் தயாரிக்கப்படும் உபகரணங்களைமட்டும் பயன்படுத்துவதால், 'நியூட்ரினோ' தொழில்நுட்ப கருவிகள் உற்பத்தியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்,” என மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை முதன்மை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் மலையில், 'நியூட்ரினோ' ஆய்வகம் அமைக்க ரூ.ஆயிரத்து 580 கோடி மத்திய அரசு அனுமதித்துள்ளது.ஆய்வகம் அமையவுள்ள தேவாரம் பகுதி மக்களுக்கு 'நியூட்ரினோ' குறித்த சந்தேகங்களை போக்கி, தெளிவான விளக்கமளிக்க வேண்டும் என கோரிக்கை தொடர்ந்து எழுந்தது.இதையடுத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேவாரத்தில், நியூட்ரினோ ஆய்வகம் குறித்த விஞ்ஞான விளக்க கருத்தரங்கம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை முதன்மை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் தலைமையில் நடந்தது. அரசியல் பிரமுகர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கூட்டத்தில் கலந்துகொண்டு கேள்விகளை எழுப்பினர்.

அவற்றிற்கு விஞ்ஞானி வெங்கடேஷ்வரன் பதில் அளித்து பேசியதாவது: அம்பரப்பர் மலையில் அமைக்கப்படும் பாதாள சுரங்கத்தில், 'மியூவான் நியூட்ரினோ' குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளது. பாறையை உடைக்க உயரிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதன் அதிர்வை 500 மீ., க்கு அப்பால் உணர முடியாது. கிரானைட் பாறைகளை அறுத்தெடுக்க ஏராளமான தண்ணீர் பயன்படுத்தபடும், இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறுகின்றனர். முன்னுாறு குடும்பங்கள் அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீர் மட்டும் பயன்படுத்தப்படும். இதனால் நீர் வளம் பாதிக்கபடும் என்ற அச்சம் தேவையில்லை. ஐ.என்.ஓ., மேற்கொள்ளும் ஆராய்ச்சியில் முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள உபகரணங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. திட்டம் முழுமையடையும் போது 'நியூட்ரினோ' தொழில்நுட்ப கருவிகள் உற்பத்தியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும், என்றார்.

Feb 21, 2015

கம்பம் கிளைச்செயற்குழு


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளைச் செயற்குழு கூட்டம் பிப்ரவரி 20 மாலை ஆறு மணி அளவில் கம்பம் கோட்டை மைதானத்தில் நடைப்பெற்றது.கம்பம் கிளைத்தலைவர் திருமிகு.மா.சிவக்குமார் தலைமை தாங்கினார்.பெருளாளர் மொ.தனசேகரன் வரவேற்றார்.பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினத்தை சிறப்பாக கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது.மாவட்ட செயலாளர் வெங்கட் மாநிலச் செயலாளர் தே.சுந்தர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார்,ஓவியர் பாண்டி உட்பட செயற்குழுஉறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Feb 20, 2015

கிளைச்செயலர்கள் ச ந்திப்பு: 1

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் பிப்ரவரி 19 வியாழன் தேனி புதிய பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது. கிளைச் செயலாளர்கள் தெய்வேந்திரன்,ஸ்ரீதர் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஜேசுராஜ் மாவட்ட செயலர் வெங்கட் மற்றும் மாநிலச் செயலர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28 ஐ மாவட்டம் முழுவதும் கிளைகள் சார்பில் சிறப்பாக கொண்டாட கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

மாவட்ட நிர்வாகக் குழு,கிளைச்செயலர்கள் ச ந்திப்பு


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் பிப்ரவரி 19 வியாழன் தேனி புதிய பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது.கிளைச் செயலாளர்கள் தெய்வே ந்திரன்,ஸ்ரீதர் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஜேசுராஜ் மாவட்ட செயலர் வெங்கட் மற்றும் மாநிலச் செயலர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28 ஐ மாவட்டம் முழுவதும் கிளைகள் சார்பில் சிறப்பாக கொண்டாட கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Feb 13, 2015

டார்வின் தினம்


கூடலூர் நகரக் கிளை சார்பில் பிப்ரவரி 12 டார்வின் தினம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.கூடலூர் நகரக்கிளை பொருளாளர் திருமிகு ராஜ்குமார் பங்கேற்று குழ ந்தைகளூக்கான மந்திரமா? த ந்திரமா நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு.ஜெகநாதன் மற்றும் ஆசிரியர் சுருளிராஜ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.