தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 10வது தேனி மாவட்ட மாநாடு ஆக.9.2015 அன்று அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முற்பகல் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.ஸ்ரீதர் வரவேற்றார். மாநிலச் செயலாளர் மு.தியாகராஜன் மாநாட்டைத் துவக்கிவைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் வி.வெங்கட்ராமன் கடந்த இரண்டாண்டுகள் நடைபெற்ற பணிகள் குறித்து செயலறிக்கையை சமர்ப்பித்துப் பேசினார். பொருளறிக்கையை மாவட்டப் பொருளாளர் ஜெ.மஹபூப் பீவி சமர்ப்பித்தார்.
அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது. மாநிலக் கருத்தாளர் முனைவர்.எஸ்.தினகரன் சமூக மாற்றத்திற்கான அறிவியல் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். சுருளிப்பட்டி க.மா.சிவாஜி தனது அறிவொளி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டாண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத்தலைவராக பா.செந்தில்குமரன், மாவட்டச் செயலாளராக வி.வெங்கட்ராமன், மாவட்டப் பொருளாளராக எஸ்.ஞானசுந்தரி ஆகியோரும் மாவட்டத் துணைத்தலைவர்களாக மா.மகேஷ், மா.சிவக்குமார், எஸ்.சேசுராஜ் மற்றும் ஜெ.மஹபூப் பீவி ஆகியோரும் மாவட்ட இணைச் செயலாளர்களாக ஆர்.அம்மையப்பன், எம்.கே.மணிமேகலை, மு.தெய்வேந்திரன் மற்றும் எஸ்.ராம்சங்கர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர்கள் நாவலாசிரியர் காமுத்துரை மற்றும் ப.மோகன்குமாரமங்கலம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலச் செயலாளர் அன்பழகன் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர் முத்தரசப்பன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர்.
பிற்பகல் நடைபெற்ற பொதுத்தேர்வில் 100% தேர்ச்சிபெற்ற அரசுப்பள்ளிகளுக்கான பாராட்டு விழாவிற்கு மாவட்டத் துணைத் தலைவர் செ.சிவாஜி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.ராம்சங்கர் வரவேற்றுப் பேசினார்.
மாநிலச் செயலாளர் தே.சுந்தர் அரசுப் பள்ளிகளைக் கொண்டாட வேண்டியதன் அவசியம் குறித்து அறிமுக உரையாற்றினார். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அப்துல் ஜப்பார் தேனி மாவட்டத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சிபெற்ற 35 அரசுப்பள்ளிகளுக்கான நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
செயற்குழு உறுப்பினர்கள்: பேரா.ஜி.செல்வராஜ், பேரா.ஜி.கோபி, பேரா.கண்ணன், பேரா.முகமது செரீப், செ.சிவாஜி, ஹ.ஸ்ரீராமன், தே.சுந்தர், பெரோஸ், முத்துக்கண்ணன், ஜஸ்டின் ரவி, காளிதாஸ், சோமநாதன், ஸ்ரீதர், ஜெகநாதன், மனோகரன், ஜெயந்தி, அழகு கணேசன், சூரியபிரகாஷ், ரத்தினசாமி, மோகன், மொக்கராஜ்
பொதுக்குழு உறுப்பினர்கள்: இன்பசேகரன், ஜி.பாண்டி, தனசேகரன், சீனிவாசன், ராஜ்குமார், வளையாபதி, குமரேசன், வன்னியராஜன், போடி குமரேசன், ஜெகதீசன், ஏ.எஸ்.பாலசுப்ரமணியன், எஸ்.ஏ.செல்வராஜ், முருகேசன், சதீஸ், ஜான்சன், செந்தில்குமார், கருணாநிதி, பாலமுருகன், கரியன், நாகராஜ், பார்த்தசாரதி