முதல் பக்கம்

Mar 11, 2020

தேனி ஒன்றிய குழந்தைகள் அறிவியல் திருவிழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேனி ஒன்றிய அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா முத்துத்தேவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மார்ச்,11 அன்று நடைபெற்றது..

விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி ஒன்றிய கிளைத் தலைவர் தாழைக்குமரன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதாமதி வரவேற்றுப் பேசினார்.. மாவட்ட செயலாளர் மு தெய்வேந்திரன் நிகழ்ச்சி குறித்த அறிமுக உரையாற்றினார்.. மாநில செயலாளர் தே.சுந்தர் தொடக்கி வைத்து பேசினார்..

தேனி வட்டார கல்வி அலுவலர்கள் வீராசாமி மற்றும் இளங்கோவன், அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் மகேஷ், இணைச் செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.. தொடர்ந்து மாநில கருத்தாளர் வீரையாவின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடந்தது.. மாநில செயலாளர் தியாகராஜன், மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் எளிய அறிவியல் பரிசோதனைகள், காகிதக் கலை மடிப்பு பயிற்சியளித்தனர்.

அதனையடுத்து நெல்லை தாமிரபரணி கலைக்குழுவின் சார்பில் திரைக் கலைஞர் மதியழகன், கரிசல் குயில் பாடகர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரின் கல்வி, அறிவியல் மற்றும் சூழலியல் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அறிவியல் விழிப்புணர்வு பாடல்கள் பாடப்பட்டன..

நிகழ்ச்சியில் தேனி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.. நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி ஒன்றிய கிளைச் செயலாளர் ராம்குமார் ஒருங்கிணைத்தார்.. கிளையின் பொருளாளர் சௌந்திர பாண்டியன் நன்றி கூறினார்..

No comments:

Post a Comment