தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் புதன்கிழமை, ஒன்றிய அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா நடைபெற்றது.
முத்துத்தேவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய கிளைத் தலைவா் தாழைக்குமரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மகேஷ், செயலா் மு.தெய்வேந்திரன், இணைச் செயலா் ஜெகநாதன், ஒன்றிய கிளைச் செயலா் ராம்குமாா், வட்டார கல்வி அலுவலா்கள் வீராச்சாமி, இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமை ஆசிரியை சுதாமதி வரவேற்றாா்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலா் தே.சுந்தா் விழாவை தொடக்கி வைத்துப் பேசினாா். மந்திரமா, தந்திரமா என்ற அறிவியல் நிகழ்ச்சி, எளிய அறிவியல் பரிசோதனைகள், காகிதக் கலை மடிப்பு பயிற்சி, கல்வி, அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. தேனி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். ஒன்றிய கிளை பொருளாளா் செளந்தரபாண்டியன் நன்றி கூறினாா்.
நன்றி: தினமணி நாளிதழ்
No comments:
Post a Comment