முதல் பக்கம்

Feb 26, 2013

தேசிய அறிவியல் தினம் போட்டிகள் -2013

அன்புடையீர்,
வணக்கம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடி வருவது தாங்கள் அறிந்ததே. நமது இயக்கம் மட்டுமே அறிவியல் தினத்தை பள்ளி, கல்லூரிகளிலும் மற்றும் கிராமங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஆண்டும் அனைத்து மட்டத்திலும் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
போட்டிகளின் விபரம்:

6,7,8 வகுப்புகள் : ஓவியப்போட்டி: 
தலைப்பு: புத்தம் புது பூமி வேண்டும்
 
(· A ‘3’ சார்ட்டில் வரையப்பட வேண்டும். ஒருவர் ஒரு ஓவியம் மட்டுமே வரைய வேண்டும். )


9 முதல் 12 வகுப்பு வரை: கட்டுரைப்போட்டி :  
21ம் நூற்றாண்டில் இந்தியா

(5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.·A ‘4’ வெள்ளைத்தாளில் ஒரு பக்கம் மட்டுமே எழுத வேண்டும். கையெழுத்தால் மட்டுமே எழுதி அனுப்பவேண்டும்)

( குழந்தைகளை ஊக்கப்படுத்துவதே இதன் நோக்கம்.எனவே குழந்தைகள் சொந்தமாக எழுதவேண்டும். )

கல்லூரி மாணவர்கள் : கவிதைப்போட்டி :  
விளைநிலமா..?விலைநிலமா..?

(கவிதைகள் புதுக்கவிதையாகவோ மரபுக்கவிதையாகவோ இருக்கலாம். கையெழுத்தாக இருக்கவேண்டும். டைப் செய்து அனுப்பக்கூடாது)

ஆசிரியர்கள் : கட்டுரைப்போட்டி : 
இன்றைய கல்விமுறை : பார்வை – பிரச்சனை - தீர்வுகள் 

(10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். A ‘4’ வெள்ளைத்தாளில் ஒரு பக்கம் மட்டுமே எழுத வேண்டும். கையெழுத்தால் மட்டுமே எழுதி அனுப்பவேண்டும்)

குறிப்பு :

· படைப்புக்களை மார்ச் 4ம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். : தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எண்:8, குட்டியாபிள்ளைத் தெரு, கம்பம்-625516. மேலும் விபரங்களுக்கு: வி.வெங்கட்ராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்: 9488683929

·அனுப்புகிற படைப்புக்களுடன் படைப்பாளர்களின் புகைப்படத்தையும் இணைத்து அனுப்பவேண்டுகிறோம்.

· சிறந்த படைப்புக்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் இதழ்களான துளிர், ஜந்தர் மந்தர், விழுது, விஞ்ஞானச்சிறகு, அறிவுத்தென்றல் ஆகியவற்றில் வெளியிடப்படும்.

Feb 9, 2013

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சாதித்த மாணவிகள்

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2013,04:42 IST

தேனி : பனாரஸ் இந்து பல்கலை.,யில் நடந்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பெரியகுளம் மாணவிகள் சாதித்து பதக்கமும், சான்றிதழும் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்,20வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு உத்திரபிரதேச மாநிலம், வாரனாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலை.,யில் நடந்தது. தமிழகத்தில் இருந்து 30 குழந்தை விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து, ஆசிரியர் ஜெ.மஹபூப்பீவி தலைமையில், மாணவிகள் கே.ஜெனிபர்பாத்திமா, என்.ரிஸ்வானாபேகம், எ.ஜைனப்சித்திகா, எஸ்.ஜாகிரா காஹிபா ஆகிய மாணவிகள் பங்கேற்றனர்.

இவர்கள், மின்சார தட்டுப்பாட்டை நீக்கும் வழிமுறைகள் என்ற தலைப்பில் ஆய்வறிக்கை சமர்பித்தனர். இந்த ஆய்வறிக்கை சிறந்த அறிக்கையாக தேர்வு செய்யப்பட்டு, மாணவிகளுக்கு பதக்கமும், பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டது.
 
நன்றி: தினமலர்

குழந்தை விஞ்ஞானிகளுக்கு ஆட்சியர் பாராட்டு

தேனி
First Published : 02 February 2013 04:30 AM IST

தேனி மாவட்டம் சார்பில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்து, பதக்கம் வென்ற மாணவிகளுக்கு, வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி பாராட்டுத் தெரிவித்தார்.

உத்தரபிரதேசம், வாரணசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 20 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 30 குழந்தைகள் பங்கேற்றனர். இதில், தேனி மாவட்டத்தில் இருந்து பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கே. ஜெனிபர் பாத்திமா, என். ரிஸ்வானாபேகம், ஏ. ஜைனப் சித்திகா, எஸ். ஜாகிரா காஹிபா ஆகியோர், மின்சாரத் தட்டுப்பாட்டை நீக்கும் வழிமுறைகள் என்ற தலைப்பில் ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர். இவர்கள், குழந்தை விஞ்ஞானிகளாகத் தேர்வு செய்யப்பட்டு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.

குழந்தை விஞ்ஞானிகளாகத் தேர்வு செய்யப்பட்டு, பதக்கம் வென்ற மாணவிகள், ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வழிகாட்டியாக இருந்த ஆசிரியர் மஹபூப் பீவி ஆகியோரை, மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. ராமசாமி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அப்துல் ஜப்பார் ஆகியோர் உடனிருந்தனர்.
நன்றி: தினமணி

அப்பாவின் உடல் பருமனும், குழந்தைக்கு உருவாகும் நோய்களும்

அன்பின் நண்பர்களே, வணக்கம். ஒரு புதுதகவல் கண்டுபிடிப்பாக வந்துள்ளது ஒரு மனிதனின் (அப்பாவின் )உடல் பருமன் தொடர்பான விஷயங்களும் கூட குழந்தை மூலம் அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்லப் படுகிறது . அத்துடன் அப்பாவின் மரபணுப் பொருட்கள் குழந்தை மூலமே வருகின்றன என்ற விஷயம் நமக்கு முன்பே தெரியும் . அது மட்டுமா அப்பாவின் வாழ்க்கை முறையுமே கூட குழந்தைக்கு DNA மூலம் மாற்றம் செய்யப்படுகிறதாம் எனவே உடல் பருமன் என்பது உங்களுக்கு மட்டுமல்ல, உங்களின் சந்ததிக்கும் கடத்தப் படுகிறது நண்பா.கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கள். இதனைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள். எதிர்காலத்தில் மேற்கத்திய கலாச்சாரம் எப்படி எதிர் கால பரம்பரையை மாற்றிப் போட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நாம் கட்டாயம் உணர வேண்டும. குழந்தையின் எதிர்கால உடல் நலம் மற்றும் புற்று நோய் போன்ற வியாதி வருவதற்கான கூறுகளை தந்தையின் உடல் பருமன் வாரி வழங்குகிறது என்ற புதிய தகவலை , புதிய ஆராய்ச்சியின் மூலம் BMC Medicine,என்ற மாத இதழில், 2013, பிபரவரி 6 ம் நாள் தகவலாக வந்துள்ளது.


அடுத்த் பரம்பரையின் குணநலன்களை மாற்றியமைக்கும் வல்லமை பெற்றது, ஓர் ஆணின் மரபணு. ஆனால் அதுவே அவர் உடல்பருமன் உள்ள்ளவராக இருந்தால் அவரின் உடல் பருமன், அடுத்த தலைமுறையின் வாழ்நிலையை மாற்றிப் புரட்டிப் போடும் அதிக பட்ச காரணியாக உள்ளது டியூக் (Duke Cancer Institute )புற்று நோயியல் துறையில் பணி புரியும் மூலக்கூறியல் விஞ்ஞானி அதெலஹைட் சௌப்ரி ( Adelheid Soubry) என்பவர் அடுத்த தலைமுறையினர் நன்கு வாழவேண்டும் என்றால் இப்போதுள்ள மேற்கத்திய பாணி வாழ்க்கை முறையில் உள்ள அபாயங்களை புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற்போல வாழவை அமைத்துக் கொள்ளவேண்டும் . இதிலுள்ள தகவல், என்னவேன்றால , ஒரு குறிப்பிட்ட மரபணுதான் இந்த பணியை செவ்வனே, செய் கின்றது தந்தையின் பருமன் என்பது அவரது விந்தணு மூலம் குழந்தைக்கு எடுத்துச் செல்லும்போது அது குழந்தையின் இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணிகள் டி.என்.ஏ யின் மெதிலேஷன் (DNA methylation )மாற்றி விடுகின்றன.அதனால் எதிர்காலத்தில் சில குறிப்பிட்ட வகை , மலக்குடல் மற்றும் கருப்பை புற்று நோய்கள் வர ஏதுவாகிறது .புற்று நோயியல் மருத்துவரான காத்தரின் ஹோயோ(Cathrine Hoyo,) வும் இதே கருத்தைத்தான் தெரிவிக்கிறார். நமது மரபணுக்கள், சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் அனுசரிக்கும் தன்மையுள்ளவை இருப்பினும் கூட உடல் பருமன் தொடர்பான வேதியல் தகவல்கள் குழந்தையின் மரபணுவை மாற்றக் கூடியதாகவும் எதிர்காலத்தில் பிரச்சினைக்குரிய நோய்களை உருவாக்குவதாகவும் உள்ளது. கருவுற்றிருக்கும் பெண்களிடம் நடத்திய ஆய்வுகள் மூலம் இந்த செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

குழந்தை பிறக்கும் போது அதன் தொப்புள் எடுத்த DNA வேதிப் பொருள்கள் மூலம் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. டி.என்.ஏ யின் மெதிலேஷன் (DNA methylation )என்பது, உடல் பருமன் மூலம் உருவாகிறது என்றும் கண்டறியப்பட்டது


Journal Reference:
Adelheid Soubry, Joellen M Schildkraut, Amy Murtha, Frances Wang, Zhiqing Huang, Autumn Bernal, Joanne Kurtzberg, Randy L Jirtle, Susan K Murphy and Cathrine Hoyo. Paternal obesity is associated with IGF2 hypomethylation in newborns: results from a Newborn Epigenetics Study (NEST) cohort. BMC Medicine, 2013 (in press)
-பேரா.மோகனா.


பெண் விஞ்ஞானி ..அலேட்டா ஹென்றியட்டே ஜகோபஸ்

வணக்கம் நண்பர்களே. இன்று பிப்ரவரி 9.. அலேட்டா ஹென்றியட்டே ஜகோபஸ் என்ற பெண் விஞ்ஞானியைத் தெரியுமா? ஆன் விஞ்ஞானிகளையே நமக்குத் தெரிவதில்லை. இதில் பெண் விஞ்ஞானி அதுவும் காலங்கார்த்தாலே என்கிறீர்களா? அதுவும் சரிதான். நம்ம கதைக்கு வருவோமா? இவர் டச்சு நாட்டில் பிறந்த ஓர் மருத்துவர். அது மட்டுமல்ல உலகத்தின் முதல் குடும்ப கட்டுப்பாட்டு முறையை கொண்டு வந்தவர் இவர்தான். நெதர்லாந்தில் பல்கலைக் கழகத்தில் படித்த முதல் பெண் இவரே.. அதுமட்டுமே முதலில் மருத்துவம் படித்தது மட்டுமா? வில்ஹெல்ம் மேபாக் தான் நெதர்லாந்து நாட்டின் முதல் பெண் மருத்துவர்.அலேட்டா ஹென்றியட்டே ஜகோபஸ் .(Aletta Henriëtte Jacobs, better known as Aletta Jacobs (9 February 1854 – 10 August 1929)யூத மருத்துவ குடும்பத்தில் சப்பெமீர் (Sappemeer.) என்ற இடத்தில், 1854 , பிப்ரவரி 9 ம் நாள் பிறந்தவர். தனது 13 வது வயதிலே பெண்களுக்கான தனிப் பள்ளியில் படித்தார்.மாலை நேரங்களில் தன அன்னை அண்ணா டெ ஜோங்(Anna de Jong,) மூலம் வீட்டுப் பணிகளுக்கு பயிற்று விக்கப்பட்டார் . தாய் டச்சு நாட்டைச் சேர்ந்தவர். அலேட்டா வீட்டு வேலை , பள்ளிப் படிப்புடன் மாலை நேரத்தில் ஜெர்மன், மற்றும் பிரெஞ்சு மொழி பயின்றார் தன தந்தையிடமிருந்து லத்தீனும் கிரீக் மொழியின் வளமையை கைக்கொண்டார்.
 
1871 ல் அலேட்டா ஊர் ஆண்டு குரோநிக்னேபலகலையில் (University of Groninge, ) படித்தார் பின்னர் ஆம்டர்டாம் பல்கலையில் பயின்றார். 1878 ல் மருத்துவப் பட்டம் பெற்றார் பெண்கள் மருத்துவம் படிக்க அனுமதிக்காமைக்காக பெண்களை மோசமாக நடத்துவதற்காகப் போராடினார் மேலும் சில காலம் மருத்துவராகப் பணியாற்றி பின் மனவியல் மருத்துவரானார். டச்சு பொது தொழிற்சங்கத்தின் உறுப்பினரானார் பின்னர் 1880 ல் Bernardus Hermanus Heldt சங்கத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்றார். 1903, டச்சு பெண்கள் அமைப்பில் தலைவரானா. 1915 ல் சர்வதேச பெண்கள் சமாதனம் & சுதந்திரம் அமைபப்பு (Women's International League for Peace and Freedom )உருவாக பெரிதும் உதவியவர் அவரது தனியறையை சங்கப் பணிகளுக்கு ஒதுக்கீ டு கொடுத்தார் பெண்களின் சுகாதாரம், குழந்தை பேணுதல் தொடர்பாய் அவர்களுக்கு தொடர் பயிற்சிகள் தந்தார். ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளுக்கு கட்டணம் ஏதும் வாங்காமல் மருத்துவ சேவை செய்தார். அலேட்டா தன இறுதி நாட்கள் வரை பெண்களுக்காகவும் ஆதரவர்ரவர்களுக்காகவும் உழைத்தார். பெண்கள் தங்கல் குடும்ப சுமையைக் குரர்க்க வேண்டும் என்பதற்காகவும் அவர்களின் உடல் நலனைப் பேணவேண்டும் என்றே, குடும்ப் கட்டுப்பாடு சிகிச்சி முறையை முதன் முதலில் அறிமுகப் படுத்தினர் அவர்க்தான் உலகத்திலேயே முதல் குடும்ப கட்டுப்பாடு மருத்துவ மனை துவங்கியவர். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களின் உடல் நலம் கருதி செயல் பட்ட முதல் பெண் மருத்துவர்.
-பேரா.மோகனா

மயக்கம்.. .தரும் விஞ்ஞானி....


ஒரு அறுவை சிகிச்சை என்றால் அதற்கு முக்கியமாக வலி தெரியாமல் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை மருத்துவரை விட, மயக்கவியல் நிபுணர்தான் இதில் முதன்மைப் பங்கு வகிப்பவர் இல்லையேல் நோயாளியின் பாடு அம்பேல்தான்.அறுவை சிகிச்சைக்கு உதவிடும் மயக்க மருந்து எப்போது கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா? இதனை புழக்கத்துக்குக் கொண்டுவந்தவர், கார்ட்னர் குவின்சி கால்டன் என்ற அமெரிக்க பேராசிரியர்தான். அவரின் பிறந்த தினம் (Gardner Quincy Colton (February 17, 1814, Georgia, Vermont – August 9, 1898, Rotterdam) ) கார்ட்னர் குவின்சி கால்டன் 1814, பிப்ரவரி 7 ம் நாள்பிறந்தார். மருத்துவத் த துறையில் முதன் முதல் நைட்ரஸ் ஆக்சைடு என்ற மயக்க மருந்தைப் பயன்படுத்தியதும் இவரே.கால்டன் நியூயார்க்கில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தபோது, மருத்துவப் பட்டம் பெறுமுன்னே, நைராஸ் ஆக்சைடை சுவாசித்தால், அது சிரிப்பூட்டும் என்றும் மேலும், அதுவே, உணர்விழக்கச் செய்யும் என்பதையும் கண்டறிந்தார் இதனை நியூயார்க் நகரில், ஒரு பொது இடத்தில், இதன் விளைவுகளை , சாதனைகளை செய்து காண்பித்தார் அதுவே அவரது இறுதி வெற்றியானது. பின்னர் கால்டன் இது தொடர்பான விரிவுரைகளுக்கு, ஊர் ஊராக பயணிக்கத் தொடங்கினார்

கால்டனின் பயணத்தின் போது ,1844 ல், டிசம்பர் 10 ம் நாள், கனெக்டிகட்டில் நிகழ்ந்த பொது, அந்த நிகழ்வை, ஒரு பல் மருத்துவர் பார்வையிடுகிறார் அவரின் பெயர் ஹோரஸ் வேல்ஸ் (Horace Wells) . கால்டனின் இந்த நிகழ்வின் போது , ஒரு பல்லைப் பிடுங்கலாமா என்கிறார் அது வெற்றிகரமாக நிகழ்ந்தது. அதன் பின் வேல்ஸ் அவரது பல் நோயாளிகளுக்கு, இந்த வாய்வைப் பயன் படுத்தத் தொடங்கினார். அதன் பின் 1863 ல் கால்டன் மற்றும் ஸ்மித் என்ற பல் மருத்துவர் இருவரும் இணைந்து,ஒரு மாதத்திற்குள் ஓர் ஆயிரம் பற்களைப் பிடுங்கினர் .. இது மிகப் பெரிய வெற்றியாய் இருந்தது . பின்னர் கால்டன் ஜான் ஆலன் என்பவருடன் இணைந்து கால்டன் பல் சங்கம் என்ற ஒன்றைத் துவங்கினார் இது பல் பிடுங்குவதில், சாதனையையும் சேவையை யும் செய்தது.1844-1867 க்குள் அவர் 10,000 பேருக்கு பல் பிடுங்க உதவினார் .கால்டன் மயக்கவியல் மருந்து தவிர மின் மோட்டாரை 1847 ல் கண்டுபிடித்தார்.