முதல் பக்கம்

Feb 9, 2013

அப்பாவின் உடல் பருமனும், குழந்தைக்கு உருவாகும் நோய்களும்

அன்பின் நண்பர்களே, வணக்கம். ஒரு புதுதகவல் கண்டுபிடிப்பாக வந்துள்ளது ஒரு மனிதனின் (அப்பாவின் )உடல் பருமன் தொடர்பான விஷயங்களும் கூட குழந்தை மூலம் அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்லப் படுகிறது . அத்துடன் அப்பாவின் மரபணுப் பொருட்கள் குழந்தை மூலமே வருகின்றன என்ற விஷயம் நமக்கு முன்பே தெரியும் . அது மட்டுமா அப்பாவின் வாழ்க்கை முறையுமே கூட குழந்தைக்கு DNA மூலம் மாற்றம் செய்யப்படுகிறதாம் எனவே உடல் பருமன் என்பது உங்களுக்கு மட்டுமல்ல, உங்களின் சந்ததிக்கும் கடத்தப் படுகிறது நண்பா.கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கள். இதனைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள். எதிர்காலத்தில் மேற்கத்திய கலாச்சாரம் எப்படி எதிர் கால பரம்பரையை மாற்றிப் போட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நாம் கட்டாயம் உணர வேண்டும. குழந்தையின் எதிர்கால உடல் நலம் மற்றும் புற்று நோய் போன்ற வியாதி வருவதற்கான கூறுகளை தந்தையின் உடல் பருமன் வாரி வழங்குகிறது என்ற புதிய தகவலை , புதிய ஆராய்ச்சியின் மூலம் BMC Medicine,என்ற மாத இதழில், 2013, பிபரவரி 6 ம் நாள் தகவலாக வந்துள்ளது.


அடுத்த் பரம்பரையின் குணநலன்களை மாற்றியமைக்கும் வல்லமை பெற்றது, ஓர் ஆணின் மரபணு. ஆனால் அதுவே அவர் உடல்பருமன் உள்ள்ளவராக இருந்தால் அவரின் உடல் பருமன், அடுத்த தலைமுறையின் வாழ்நிலையை மாற்றிப் புரட்டிப் போடும் அதிக பட்ச காரணியாக உள்ளது டியூக் (Duke Cancer Institute )புற்று நோயியல் துறையில் பணி புரியும் மூலக்கூறியல் விஞ்ஞானி அதெலஹைட் சௌப்ரி ( Adelheid Soubry) என்பவர் அடுத்த தலைமுறையினர் நன்கு வாழவேண்டும் என்றால் இப்போதுள்ள மேற்கத்திய பாணி வாழ்க்கை முறையில் உள்ள அபாயங்களை புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற்போல வாழவை அமைத்துக் கொள்ளவேண்டும் . இதிலுள்ள தகவல், என்னவேன்றால , ஒரு குறிப்பிட்ட மரபணுதான் இந்த பணியை செவ்வனே, செய் கின்றது தந்தையின் பருமன் என்பது அவரது விந்தணு மூலம் குழந்தைக்கு எடுத்துச் செல்லும்போது அது குழந்தையின் இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணிகள் டி.என்.ஏ யின் மெதிலேஷன் (DNA methylation )மாற்றி விடுகின்றன.அதனால் எதிர்காலத்தில் சில குறிப்பிட்ட வகை , மலக்குடல் மற்றும் கருப்பை புற்று நோய்கள் வர ஏதுவாகிறது .புற்று நோயியல் மருத்துவரான காத்தரின் ஹோயோ(Cathrine Hoyo,) வும் இதே கருத்தைத்தான் தெரிவிக்கிறார். நமது மரபணுக்கள், சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் அனுசரிக்கும் தன்மையுள்ளவை இருப்பினும் கூட உடல் பருமன் தொடர்பான வேதியல் தகவல்கள் குழந்தையின் மரபணுவை மாற்றக் கூடியதாகவும் எதிர்காலத்தில் பிரச்சினைக்குரிய நோய்களை உருவாக்குவதாகவும் உள்ளது. கருவுற்றிருக்கும் பெண்களிடம் நடத்திய ஆய்வுகள் மூலம் இந்த செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

குழந்தை பிறக்கும் போது அதன் தொப்புள் எடுத்த DNA வேதிப் பொருள்கள் மூலம் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. டி.என்.ஏ யின் மெதிலேஷன் (DNA methylation )என்பது, உடல் பருமன் மூலம் உருவாகிறது என்றும் கண்டறியப்பட்டது


Journal Reference:
Adelheid Soubry, Joellen M Schildkraut, Amy Murtha, Frances Wang, Zhiqing Huang, Autumn Bernal, Joanne Kurtzberg, Randy L Jirtle, Susan K Murphy and Cathrine Hoyo. Paternal obesity is associated with IGF2 hypomethylation in newborns: results from a Newborn Epigenetics Study (NEST) cohort. BMC Medicine, 2013 (in press)
-பேரா.மோகனா.


No comments:

Post a Comment