முதல் பக்கம்

Apr 13, 2013

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்: பெரியகுளம் கிளை மாநாடு

2ஆவது கிளை மாநாடு:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெரியகுளம் ஒன்றியக்கிளையின் 2ஆவது கிளை மாநாடு இன்று-ஏப்ரல்,13,2013- காலை 10 மணிக்கு பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப் பள்ளியில்  நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார்.  கிளைச்செயற்குழு உறுப்பினர் எஸ்.கார்த்திகேயன் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் மாநாட்டைத் துவங்கி வைத்துப் பேசினார். கிளைச் செயலாளர் எஸ்.ராம்சங்கர் செயலறிக்கையினை சமர்ப்பித்துப் பேசினார். அதன் மீதான விவாதம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.




புதிய நிர்வாகிகள்:

கிளையின் தலைவராக ஏ.எஸ்.பாலசுப்ரமணியன், துணைத்தலைவர்களாக எஸ்.மனோகரன், ஞானசுந்தரி ஆகியோரும் கிளைச்செயலாளராக எஸ்.ராம்சங்கர் இணைச்செயலாளர்களாக என்.அப்பாஸ், எஸ்.கார்த்திகேயன் ஆகியோரும் பொருளாளராக எஸ்.ஏ.செல்வராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.ஸ்ரீராம், ராதாமணாளன், டி.கிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், ராமகுரு, கே.ஜி.பாலாஜி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். கிளை ஆலோசகர்களாக வி.ரமேஷ், ஏ.எஸ்.ராஜ்குமார் தேர்வு செய்யப்பட்டனர்.

அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்துமணிகண்டன், தேனி கிளைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர்.


உலகை மாற்றிய அறிவியல் நூல்கள் கருத்துரை:



கிளை மாநாட்டினை முன்னிட்டு உலகை மாற்றிய அறிவியல் நூல்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அறிவியல் இயக்க மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் கருத்துரையாற்றினார். இறுதியாக செயற்குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன் நன்றி கூறினார்.

 


Apr 12, 2013

அறிவியல் இயக்கம் : தேனி வட்டாரக்கிளை மாநாடு



3ஆவது கிளை மாநாடு:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி வட்டாரக்கிளையின் 3ஆவது மாநாடு ஏப்ரல் 11 அன்று மாலை தேனி மேத்ஸ் அகடமியில் நடைபெற்றது. கிளைத் தலைவர் மா.மகேஷ் தலைமை வகித்தார். கிளைச் செயற்குழு உறுப்பினர் முகமது ஆசிக் வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சேசுராஜ் துவக்கிவைத்துப் பேசினார்.

கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் செயலறிக்கை சமர்ப்பித்தார். பின்னர் அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

புதிய நிர்வாகிகள் தேர்வு:

அதனைத் தொடர்ந்து கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கிளையின் தலைவராக மா.மகேஷ், துணைத்தலைவர்களாக சேசுராஜ், ஜெ.மகபூப் பீவி, செயலாளராக மு.தெய்வேந்திரன் இணைச்செயலாளர்களாக முகமது ஆசிக், கோபிநாத் ஆகியோரும் கிளைப்பொருளாளராக அ.சதீஷ் மற்றும் கிளைச்செயற்குழு உறுப்பினர்களாக பாலகிருஷ்ணகுமார், பிரேம் குமார், மலைச்சாமி, மோகன்குமாரமங்கலம், மோகன், பிருந்தா தேவி, திவ்யசுந்தரம், அருண், குமார் உள்ளிட்ட நண்பர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன், போடி கிளைத்தலைவர் காளிதாஸ் ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப்பேசினர்.

 புவி கணித ஆண்டு கருத்துரை:

கிளை மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்க கருத்தாளர் ஜெ.மகபூப் பீவி புவி கணித ஆண்டு குறித்து கருத்துரையாற்றினார். கருத்துரையில் பூமி சூடேறுதல், காலநிலை மாற்றம், பூமி எதிர்நோக்கி இருக்கும் அபாயங்கள், நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் எனப் பல்வேறு அம்சங்கள் குறித்துப் பேசினார்.

புத்தகங்களின் அருமை பற்றி....

 ‘உங்கள் பிறந்த நாள் பரிசாக மதிப்புள்ள  எந்தப்  பொருளை எதிர்பார்க்கிறீர்கள்?–  மக்கள் கேள்வி
‘என்றைக்கும் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும் புத்தகங்களைத்தான்’ - லெனின்.           
 
‘ஒரு குழந்தைக்கு வாங்கித்தரும் மிகச் சிறந்த பரிசு என்னவாக இருக்க வேண்டும்? – பத்திரிகையாளர்         
‘புத்தகமாகத்தான் இருக்க வேண்டும்’ –   வின்ஸ்டன் சர்ச்சில்
 
‘உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாகக் கிடைத்தால் என்ன செய்வீர்கள் ?’ –; காகாகலேல்கர்.-         
‘ஒரு நூலகம் கட்டுவேன் ‘; - மகாத்மா காந்தி
 
‘தனிமைத் தீவில் ஓர் ஆண்டு நீங்கள் தள்ளப் பட்டால் என்ன செய்வீர்கள் ?’  -நிருபர்
-‘புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்’- ஜவகர்லால் நேரு.
 
‘மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது? ‘– பத்திரிகையாளர்.
‘புத்தகங்கள்தான்’ - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
 
‘சில மணி நேரத்தில் சென்று சேரும் விமானத்தைத் தவிர்த்துவிட்டு இரு நாள்கள் நேரம் எடுத்துக்  கொள்ளும் மகிழ்வுந்தில், பம்பாய் பயணத்தைத் தாங்கள் மேற்கொண்டது ஏன் ?’ – நிருபர்               
‘புத்தகங்கள் படிக்கும் வசதிக்காகத்தான்’ - பேரறிஞர் அண்ணா.
 
‘துப்பாக்கிகளை விட பயங்கரமான ஆயுதங்கள் எவை ?’ – நண்பர் - ‘புத்தகங்கள்தான்’ - மார்டின் லூதர்கிங்.
 
‘வழக்கிற்காக வருகை தந்த நீங்கள் எங்கே தங்க விரும்புகிறீர்கள்?’- இலண்டனில் வரவேற்பாளர்        
‘ஒரு நல்ல நூலகத்திற்கு அருகி;ல்.’ காந்தியடிகள்
 
‘பெண்கள் முன்னேற என்ன செய்ய வேண்டும்?’ – பத்திரிகையாளர்.   
‘அவர்கள் கையில் இரு;க்கும் கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகங்களைக் கொடுக்க வேண்டும்.’                - ஈ.வெ.ரா. பெரியார்
 
‘நேரம் காலம் பார்ப்பதில் நம்பிக்கையில்லாத நீங்கள் உங்களுக்கு நடைபெற வேண்டிய அறுவை சிகிச்சை இப்போது வேண்டாம் சில நாள்கள் தள்ளிப் போடுங்கள் என்று சொல்லுவது ஏன்? ’ -நிருபர்   
‘இன்னும் சில நூல்கள் படித்து முடிக்க வேண்டியுள்ளது.’– சி.என்.அண்ணாத்துரை
 
‘சிறைச்சாலையில் நீங்கள் எந்த மாதிரியான சலுகைகளை எதிர்பார்க்கிறீர்கள்?’ – சிறை அதிகாரி      
‘எனக்கு வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். புத்தகங்களைப் படிக்க அனுமதித்தால் மட்டும் போதும்’  - நெல்சன் மண்டேலா.
 
‘உன்னைத் தூக்கிpலிடும் நேரம் நெருங்கிவிட்டது. இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாய் பகத்சிங்?’ – சிறைஅதிகாரி                                                                  
‘ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளருடன் பேசிக்கொண்டிருக்கிறான்’ -- புத்தகம் படித்துக் கொண்டிருந்த பகத்சிங்.
 
‘புத்தகங்கள் வெறும் அச்சடித்த காகிதக் கட்டுகளல்ல…
நம் தோள்மீது கைபோட்டுக் கனிவோடு பேசும் நண்பர்கள்.  
கவலை போக்கிக் கண்ணீர் துடைக்கும் கருணைக் கரங்கள்…
புரட்சியை இசைக்கும் புல்லாங்குழல்கள்… 
முன்னேற்றத்தை முழக்கும் முரசங்கள்… 
விழிப்புணர்வூட்டும் விளக்குச் சுடர்கள்.. 
மனதுக்கு மகரந்தம் பூசி மகிழ்விக்கும் மகோன்னதங்கள்’   -- வெ.இறையன்பு
 
 
தான் நடிக்க ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு படத்தின் ஒப்பந்த முன்பணத்தில் நூறு டாலர்களுக்குப் புத்தகங்கள் வாங்கும் பழக்கமுடையவர் - சார்லிசாப்லின்
 
-குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப் பட்டபோது நூலகத்தை நோக்கி நடந்தவர்            - பேரறிஞர் இங்கர்சால்.
 
இன்றளவும் உலகிலேயே மிகப்பெரிய நூலகம் மாஸ்கோ நூலகம்தான் -ஒருகோடியே நாற்பது இலட்சம் நூல்கள்.
 
நேற்றைய நிகழ்வினை நிரல்படச் சொல்பவை… 
இன்றைய இலக்கினை இசைபட உரைப்பவை.. 
நாளைய வாழ்விற்கு நம்பிக்கை விதைப்பவை… 
புத்தகங்கங்கள் நம்மோடு பேசத் துடிக்கின்றன… 
பேசிப்பாருங்கள்..
 
 njhFg;G: ghtyu; nghd;.f

Apr 8, 2013

அறிவியல் இயக்க மாநாடு

தினகரன்
பதிவு செய்த நேரம்:2013-04-08 12:02:20

கூடலூர், : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் வட்டார கிளையின் 3வது மாநாடு மற்றும் கருத்தரங்கம் கம்பத்தில் நடந்தது. கிளைத்தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். இளங்கோவன் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் சுரேந்தர் வரவேற்றார். கிளை செயலாளர் முத்துக் கண்ணன் செயலறிக்கை வாசித்தார். பொருளாளர் தனசேகரன் பொருளறிக்கை தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீராமன், ஜெய்ஹிந்த் அகாடமி முதல்வர் அழகு, ஒருங்கிணைப்பாளர் முத்து மணிகண்டன், பெரியகுளம் கிளை செயலாளர் ராம்சங்கர், தேனி கிளை செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் பேசினர்.

மாநாட்டை முன்னிட்டு தண்ணீர் தண்ணீர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் தினகரன் உலகளாவிய அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பிரச்னைகள், குடிநீர் சார்ந்த நோய்கள் குறித்து பேசினார்.

மாவட்ட கருத்தாளர் தேவராஜின், மந்திரமா தந்திரமா மேஜிக் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். துணை செயலாளர் பாண்டி நன்றி கூறினார்.

Apr 6, 2013

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-கம்பம் கிளை மாநாடு & தண்ணீர்... தண்ணீர்... கருத்தரங்கம்



3ஆவது கிளை மாநாடு:

தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் வட்டாரக்கிளையின் 3ஆவது மாநாடு இன்று (ஏப்ரல்,6,2013) மாலை 5 மணி முதல் 8 மணி வரை கம்பம் ஜெய்ஹிந்த் அகடமியில் நடைபெற்றது. கிளைத்தலைவர் மா.சிவக்குமார் தலைமை வகித்தார். கிளை ஆலோசகர் ஆர்.இளங்கோவன் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் பொ.சுரேந்தர் வரவேற்றார். கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன் செயலறிக்கை வாசித்தார். கிளைப்பொருளாளர் மொ.தனசேகரன் பொருளறிக்கை சமர்ப்பித்தார். அதனைத்தொடர்ந்து அறிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்றது. 


புதிய நிர்வாகிகள் தேர்வு: 


அதனையடுத்து கிளையின் புதிய தலைவராக மா.சிவக்குமார், செயலாளராக க.முத்துக்கண்ணன், பொருளாளராக மொ.தனசேகரன் துணைத்தலைவர்களாக ஆர்.இன்பசேகரன், சி.பிரகலாதன், இணைச்செயலாளர்களாக ஜி.பாண்டி, சுரேஷ்கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக ஆர்.இராஜ்குமார், ஐய்யப்பன், சோமநாதன், சுரேந்தர், சுபாஷ், தீபன், அஜித்குமார், தினேஷ்குமார், நந்தகுமார், சி.ஈஸ்வரன், பொ.ஈஸ்வரன், செல்வன், சீனிவாசன், வடிவேல், சுப்புராஜ், முத்துக்கருப்பன் ஆகியோர் தேர்ந்ந்தெடுக்கப்பட்டனர்.ஆர்.இளங்கோவன், அழகு, தேவராஜ், ஜெ.முருகன் உள்ளிட்டோரைக் கொண்ட ஆலோசனைக்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.


தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை வாழ்த்தி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச்செயலாளர் தே.சுந்தர், மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன், ஜெய்ஹிந்த் அகடமி முதல்வர் அழகு, அறிவியல் இயக்க மாவட்ட வளர்ச்சி உபகுழு ஒருங்கிணைப்பாளர் முத்துமணிகண்டன், பெரியகுளம் கிளைச்செயலாளர் எஸ்.ராம்சங்கர், தேனி கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் ஆகியோர் பேசினர்.

தண்ணீர்... தண்ணீர்... என்ற தலைப்பில் கருத்தரங்கம் :



கிளை மாநாட்டை முன்னிட்டு தண்ணீர்... தண்ணீர்... என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலக்கருத்தாளர் முனைவர் எஸ்.தினகரன் சர்வதேச தண்ணீர் ஆண்டு-2013 சிறப்புரையாற்றினார். கருத்துரையில் உலகளாவிய அளவில் பாதுக்காக்கப்பட்ட குடிநீர் பிரச்சினைகள், குடிநீர் சார்ந்த நோய்கள், மேற்குத்தொடர்ச்சி மலை பற்றிய காட்கில் அறிக்கை என பல்வேறு கருத்துக்களைக் கூறினார். 

மந்திரமா தந்திரமா மேஜிக் நிகழ்ச்சி:

மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டக்கருத்தாளர் எஸ்.தேவராஜ் மந்திரமா தந்திரமா மேஜிக் நிகழ்ச்சியினை நடத்தினார். துணைச்செயலாளர் ஜி.பாண்டி நன்றி கூறினார். மொத்தம் 40 பேர் கலந்துகொண்டனர்.


--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

Apr 4, 2013

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- போடி 3ஆவது கிளை மாநாடு

அறிவியல் வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-போடி வட்டார கிளையின் 3வது மாநாடு 03-04-2013 (புதன் கிழமை)மாலை போடி பேருந்து நிலையம் அருகில் மூட்டா அலுவலகத்தில் நடைபெற்றது. கிளைத்தலைவர் திருமிகு.காளிதாஸ் மாநாட்டிற்குதலைமை தாங்கினார். திருமிகு சிவாஜி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கௌரவத் தலைவர் திருமிகு எஸ்.எம்.செளகத் அலிதுவக்கவுரை ஆற்றினார். கிளை செயலாளர் திருமிகு ப.ஸ்ரீதர் செயலறிக்கையை வாசித்தார். . கிளை பொருளாளர் திருமிகுகோ.ஜெகதீசன் பொருள் அறிக்கை சமர்ப்பித்தார் . அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கிளையின் தலைவராக திருமிகு காளிதாஸ் செயலாளராக திருமிகு ப.ஸ்ரீதர் பொருளாளராக திருமிகுகோ.ஜெகதீசன் ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்து எடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மாவட்ட ஆலோசனைகுழு உறுப்பினர் பேரா.ஆர்.பாண்டி, பெரியகுளம் கிளை செயலர் திருமிகு ராம்சங்கர், பெரியகுளம் கிளை தலைவர் திருமிகுபாலசுப்ரமணியம், மாவட்ட செயலர் திருமிகு தே.சுந்தர், தேனி கிளைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.கிளை பொருளாளர் திருமிகு ஜெகதீசன் நன்றியுரை வழங்கினார். கல்வி உப குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகுவி.வெங்கட்ராமன் மாநாட்டை ஒருங்கிணைத்தார். 

வி.வெங்கட்ராமன்