முதல் பக்கம்

Apr 6, 2013

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-கம்பம் கிளை மாநாடு & தண்ணீர்... தண்ணீர்... கருத்தரங்கம்



3ஆவது கிளை மாநாடு:

தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் வட்டாரக்கிளையின் 3ஆவது மாநாடு இன்று (ஏப்ரல்,6,2013) மாலை 5 மணி முதல் 8 மணி வரை கம்பம் ஜெய்ஹிந்த் அகடமியில் நடைபெற்றது. கிளைத்தலைவர் மா.சிவக்குமார் தலைமை வகித்தார். கிளை ஆலோசகர் ஆர்.இளங்கோவன் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் பொ.சுரேந்தர் வரவேற்றார். கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன் செயலறிக்கை வாசித்தார். கிளைப்பொருளாளர் மொ.தனசேகரன் பொருளறிக்கை சமர்ப்பித்தார். அதனைத்தொடர்ந்து அறிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்றது. 


புதிய நிர்வாகிகள் தேர்வு: 


அதனையடுத்து கிளையின் புதிய தலைவராக மா.சிவக்குமார், செயலாளராக க.முத்துக்கண்ணன், பொருளாளராக மொ.தனசேகரன் துணைத்தலைவர்களாக ஆர்.இன்பசேகரன், சி.பிரகலாதன், இணைச்செயலாளர்களாக ஜி.பாண்டி, சுரேஷ்கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக ஆர்.இராஜ்குமார், ஐய்யப்பன், சோமநாதன், சுரேந்தர், சுபாஷ், தீபன், அஜித்குமார், தினேஷ்குமார், நந்தகுமார், சி.ஈஸ்வரன், பொ.ஈஸ்வரன், செல்வன், சீனிவாசன், வடிவேல், சுப்புராஜ், முத்துக்கருப்பன் ஆகியோர் தேர்ந்ந்தெடுக்கப்பட்டனர்.ஆர்.இளங்கோவன், அழகு, தேவராஜ், ஜெ.முருகன் உள்ளிட்டோரைக் கொண்ட ஆலோசனைக்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.


தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை வாழ்த்தி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச்செயலாளர் தே.சுந்தர், மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன், ஜெய்ஹிந்த் அகடமி முதல்வர் அழகு, அறிவியல் இயக்க மாவட்ட வளர்ச்சி உபகுழு ஒருங்கிணைப்பாளர் முத்துமணிகண்டன், பெரியகுளம் கிளைச்செயலாளர் எஸ்.ராம்சங்கர், தேனி கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் ஆகியோர் பேசினர்.

தண்ணீர்... தண்ணீர்... என்ற தலைப்பில் கருத்தரங்கம் :



கிளை மாநாட்டை முன்னிட்டு தண்ணீர்... தண்ணீர்... என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலக்கருத்தாளர் முனைவர் எஸ்.தினகரன் சர்வதேச தண்ணீர் ஆண்டு-2013 சிறப்புரையாற்றினார். கருத்துரையில் உலகளாவிய அளவில் பாதுக்காக்கப்பட்ட குடிநீர் பிரச்சினைகள், குடிநீர் சார்ந்த நோய்கள், மேற்குத்தொடர்ச்சி மலை பற்றிய காட்கில் அறிக்கை என பல்வேறு கருத்துக்களைக் கூறினார். 

மந்திரமா தந்திரமா மேஜிக் நிகழ்ச்சி:

மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டக்கருத்தாளர் எஸ்.தேவராஜ் மந்திரமா தந்திரமா மேஜிக் நிகழ்ச்சியினை நடத்தினார். துணைச்செயலாளர் ஜி.பாண்டி நன்றி கூறினார். மொத்தம் 40 பேர் கலந்துகொண்டனர்.


--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

No comments:

Post a Comment