3ஆவது கிளை மாநாடு:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி வட்டாரக்கிளையின் 3ஆவது மாநாடு ஏப்ரல் 11 அன்று மாலை தேனி மேத்ஸ் அகடமியில் நடைபெற்றது. கிளைத் தலைவர் மா.மகேஷ் தலைமை வகித்தார். கிளைச் செயற்குழு உறுப்பினர் முகமது ஆசிக் வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சேசுராஜ் துவக்கிவைத்துப் பேசினார்.
கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் செயலறிக்கை சமர்ப்பித்தார். பின்னர் அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
புதிய நிர்வாகிகள் தேர்வு:
அதனைத் தொடர்ந்து கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கிளையின் தலைவராக மா.மகேஷ், துணைத்தலைவர்களாக சேசுராஜ், ஜெ.மகபூப் பீவி, செயலாளராக மு.தெய்வேந்திரன் இணைச்செயலாளர்களாக முகமது ஆசிக், கோபிநாத் ஆகியோரும் கிளைப்பொருளாளராக அ.சதீஷ் மற்றும் கிளைச்செயற்குழு உறுப்பினர்களாக பாலகிருஷ்ணகுமார், பிரேம் குமார், மலைச்சாமி, மோகன்குமாரமங்கலம், மோகன், பிருந்தா தேவி, திவ்யசுந்தரம், அருண், குமார் உள்ளிட்ட நண்பர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன், போடி கிளைத்தலைவர் காளிதாஸ் ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப்பேசினர்.
புவி கணித ஆண்டு கருத்துரை:
கிளை மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்க கருத்தாளர் ஜெ.மகபூப் பீவி புவி கணித ஆண்டு குறித்து கருத்துரையாற்றினார். கருத்துரையில் பூமி சூடேறுதல், காலநிலை மாற்றம், பூமி எதிர்நோக்கி இருக்கும் அபாயங்கள், நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் எனப் பல்வேறு அம்சங்கள் குறித்துப் பேசினார்.
No comments:
Post a Comment