முதல் பக்கம்

May 30, 2011

பள்ளிகளுக்கு அறிவியல் இயக்க புத்தகங்கள் வழங்கல்

தினமலர்:
பதிவு செய்த நாள் : மே 03,2011
கம்பம் :
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள 60 வகையான புத்தகங்கள் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5 வகுப்பு வரை வழங்க அனைவருக்கும் கல்வி இயக்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, இளைஞர் அறிவியல் மாநாடு,
துளிர் அறிவியல் வினாடி வினா,
துளிர் அறிவியல் திறனறிதல் போட்டிகள்,
எளிய கருவிகள் செய்தற்கான போட்டிகள்,
அறிவியல் பரிசோதனைகள் என பல்வேறு
அறிவியல் ரீதியான நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகிறது.
அத்தோடு சிறந்த புத்தகங்களை
அறிவியல் இயக்கம் வெளியிட்டு வருகிறது.
தேனி மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர்
சுந்தர் கூறியதாவது:
இந்த ஆண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள புத்தகங்களில் 60 வகையான புத்தகங்களை, அனைவருக்கும் கல்வி இயக்கம்,தொடக்க கல்வி மாணவர்களுக்கு ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கேள்வி பதில்,
அறிவியல் தொடர்பான சந்தேகங்கள்,புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல வகையான தலைப்புகளில் பொது அறிவியல் அறிவை வளர்க்கும் வகையில் இந்த புத்தகங்கள் உதவிகரமாக இருக்கும், என்றார்

பள்ளிகளில் கல்வியாண்டு முழுவதும் மாணவர் சேர்க்கை: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீர்மானம்

தினகரன்
கம்பம்,மே 15 ஒரு கல்வியாண்டில் மாணவர்கள் எப்பொழுது
வேண்டுமானாலும் பள்ளியில் சேர்ந்து கொள்ளலாம்
என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கம்பம் நகரில் முக்திவிநாயகர் நடுநிலைப்பள்ளியில்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்
கல்விசார்ந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் செந்தில்குமரன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சுந்தர் வரவேற்றார்.
முக்திவிநாயகர் நடுநிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார்.
குள்ளப்பகவுண்டன் பட்டி ராமகிருஷ்ணா ஆசிரியர்
பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் இளங்கோவன் வாழ்த்தி பேசினார்.

'குழந்தைகளும் தண்டனைகளும்' என்ற தலைப்பில்
கல்வியாளர் அமல்ராஜ், 'கல்வி உரிமைச்சட்டத்தின் மறுபக்கம்'
என்ற தலைப்பில் பாண்டியராஜன் கருத்துரை வழங்கினர்.
அதனை தொடர்ந்து தண்டனைகள்,பாராட்டுதல்களால்
தங்களது மாணவர்களிடையே ஏற்பட்ட மாற்றங்கள்
குறித்த அனுபவங்களை ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்டனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துகண்ணன்
நன்றி கூறினார்.

கூட்டத்தில் பொதுக்கல்வி முறையை
உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
சட்டத்தில் கூறியுள்ளபடி
அண்மைப்பள்ளிகளை திறப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
6 முதல் 14வயது வரையுள்ள
குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் 3முதல் 5வயது வரையுள்ள
குழந்தைகளுக்கும் தரமான,சமமான இலவசக்கல்வி கிடைப்பதற்கு
உறுதிசெய்ய வேண்டும்.
கிராமப்புற அரசுப்பள்ளிகளின் தரத்தையும்
பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தவேண்டும்.
ஆசிரியர் நியமனங்களை உடனடியாக
மேற்கொள்ள வேண்டும்.
வசதிகளை மேம்படுத்தாத தனியார் பள்ளிகளுக்கான
அங்கீகாரத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

கல்வியாண்டில் மாணவர்கள் எப்பொழுது
வேண்டுமானாலும் பள்ளியில் சேர்ந்து கொள்ளலாம் என்னும்

அதே வேளையில் அம்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்குவதற்கான
வழிமுறைகளை வகுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

May 27, 2011

அறிவியல் இயக்கக் கருத்தரங்கம்



கம்பம்,
மே 14: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், பள்ளி குழந்தைகளும் தண்டனைகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.கம்பம் ஸ்ரீ முக்தி விநாயகர் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்தில், அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பா.செந்தில்குமார் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தே.சுந்தர் வரவேற்றார்.ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார்.குழந்தைகளும் தண்டனைகளும் என்ற தலைப்பில், கல்வியாளர் அ.அமல்ராஜும், மொ.பாண்டியராஜனும் கருத்துரையாற்றினர். இதில், தண்டனை குறித்தும், இதனால் மாணவர்களிடம் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், வகுப்பறை அனுபவங்கள் குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.கருத்தரங்கில் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.முத்துக்கண்ணன் நன்றி கூறினார்.

மரம் வெட்டியதை தடுத்த பேராசிரியர் மீது தாக்குதல்


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளரும் பேராசிரியருமான பொ. ராஜமாணிக்கம், தான் வேலை பார்க்கும் கல்லூரியில் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், மீறி அவை வெட்டப்பட்டதை ஆவணப்படுத்த முனைந்தபோது கல்லூரி நிர்வாகத்தின் கையாட்களால் தாக்கப்பட்டுள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் செயல்பட்டு வரும் பேராசிரியர், அகில இந்திய மக்கள் அறிவியல் அமைப்பின் செயலாளராகவும் இருந்துள்ளார். அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் பேராசிரியர், "விஞ்ஞானச் சிறகு" இதழின் ஆசிரியரும்கூட. பல்லுயிரியம், புவி வெப்பமடைதல் தொடர்பாக தமிழகம் முழுவதும் பள்ளி - கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடையே உரைநிகழ்த்துதல், வானொலி நிகழ்ச்சிகள், சுற்றுப்பயணங்கள் செய்துள்ளார்.
மதுரை பெருங்குடியில் உள்ள சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராக அவர் பணிபுரிந்து வருகிறார். நீண்டகாலமாக பேராசிரியர் அமைப்பான மூட்டா உள்ளிட்டவற்றில் பங்கேற்று வருபவர். அந்தக் கல்லூரியில் பல்வேறு பழமையான மரங்கள் உள்ளன. பழந்தின்னி வெளவால்கள், பல்வேறு பறவைகளுக்கு புகலிடமாக இந்த மரங்கள் திகழுகின்றன. இந்தியாவில் வாழும் பழந்தின்னி வெளவால்களில் இந்திய பறக்கும் நரி என்றழைக்கப்படும் மிகப் பெரிய பழந்தின்னி வெளவால்கள் இந்தக் கல்லூரியில் 5,000க்கும் மேல் வாழ்ந்து வருகின்றன. ஆலமரம், புளியமரம், அசோக மரம் ஆகியவற்றில் வாழ்ந்துள்ளன. இந்த மரங்களின் விலை மதிப்பு ரூ. 30 லட்சம் எனப்படுகிறது. இந்த மரங்களையும் கல்லூரியில் உள்ள பல்லுயிரினங்களையும் பாதுகாக்க வேண்டுமென்று பேராசிரியர் ராஜமாணிக்கம் தொடர்ச்சியாக பிரசாரம் செய்து வருகிறார். இது தொடர்பாகவும், மரங்களை வெட்டுவதற்கு எதிராகவும் வனத்துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
ஆனால் கடந்த மாதத்தில் திடீரென ஒரு நாள் கல்லூரி நிர்வாகத்தின் துணையுடன் ஒரு கூட்டம் கல்லூரியின் பழைமையான மரத்தை வெட்டிக் கொண்டிருந்தது. பேராசிரியரின் எதிர்ப்பை அவர்கள் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து மரம் வெட்டப்படுவதை பேராசிரியர் ஒளிப்படம் எடுக்க ஆரம்பித்தார். அப்பொழுது மரம் வெட்டிக் கொண்டிருந்த கும்பல் அவரைத் தாக்கியது.
ஏற்கனவே இந்தக் கல்லூரியின் தன்னாட்சி அந்தஸ்தை பல்கலைக்கழக மானியக் குழு திரும்பப் பெற்றது. கல்லூரி நிர்வாகம் நீதிமன்றத் தடையாணை வாங்கியிருப்பதால் இது தற்காலிகமாக தடைபட்டுள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் சர்வாதிகார போக்குக்கு எதிராக மாணவர்களும், பேராசிரியர்களும் தன்னாட்சி அந்தஸ்தை திரும்பப் பெற வலியுறுத்தி வருகின்றனர். கல்லூரி நிர்வாகம் நிதி பிரச்சினைகளிலும் சிக்கிக் கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில்தான் சமூக செயல்பாட்டாளரும் பேராசிரியருமான ராஜமாணிக்கத்தின் மீது கல்லூரி நிர்வாக கையாட்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் மதுரையில் உள்ள சூழலியலாளர்களும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
அவருக்கு ஆதரவாக மாணவர்களும் கல்லூரி பேராசிரியர்களும் மரம் வெட்டியவர்களையும் ஒப்பந்ததாரர்களையும் விரட்டியடித்துள்ளனர். மதுரை விமான நிலைய சாலையில் மறியல் நடத்தியுள்ளனர். இனிமேல் மரம் வெட்டப்படாது என்று காவல்துறையினர் முன்னிலையில் கல்லூரி முதல்வர் அப்போது உறுதியளித்துள்ளார்.
ஆனால் ஏற்கெனவே ரூ. 10 லட்சம் மதிப் புள்ள 25 மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு வெளவால் களால் ஏற்படும் ஆபத்தைத் தடுக்க அந்த மரங்கள் வெட்டப்பட்டதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ள கருத்து விநோதமாக உள்ளது. இவற்றை விற்க வனத்துறையிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும். ஆனால் அதுவும் பெறப்படவில்லை. இந்தச் சம்பவத்தை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வழக்குத் தொடர்ந்தது. மேற்கொண்டு மரங்களை வெட்ட உயர் நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. 
-
பூவுலகு செய்தியாளர்( புதன், 20 ஏப்ரல் 2011 )
நன்றி : தெகல்கா

May 12, 2011

அன்னா ஹசாரே: இந்தியாவின் டிராஃபிக் ராமசாமி

 
எந்திரனுக்குப் பிறகு ஷங்கர் படம் எதுவும் ரிலீஸ் ஆகாத குறையை கடந்த ஒரு மாத
காலமாக தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறது தமிழக தேர்தல் ஆணையம். திருச்சியில்
5 கோடி, திண்டிவனத்தில் 2 ஒரு கோடி, கூடுவாஞ்சேரியில் 1 கோடி என தினசரி தலைப்பு
செய்திகளை தேர்தல் ஆணையமே ஆக்கிரமித்துக் கொள்கிறது. இந்தக் கறார்த்தனத்துக்கு
மிடிள்கிளாஸ் மக்களிடையேயும், ஊடகங்கள் மத்தியிலும் பெருத்த வரவேற்பு.
'இப்படில்லாம் பண்ணாதான் சார் இவனுங்க அடங்குவானுங்க' என மத்திய வர்க்க
மனநிலைக்கு இத்தகைய நடவடிக்கைகள் ஒரு வடிகாலாக அமைந்திருக்கின்றன. ஆனால் இந்த
ஆக்‌ஷன் காட்சிகளால் விளைந்த பலன் என்ன?



ஒரு செயல் அதன் பரபரப்புகளுக்காக அல்லாமல் நோக்கம் மற்றும் விளைவுகளைக் கொண்டே
மதிப்பிடப்பட வேண்டும். 'தேர்தலில் புழங்கும் பணத்தைக் கட்டுப்படுத்துவது.
இதன்மூலம் ஊழலை ஒழித்து நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவது'. அதாவது எரிவதை
பிடுங்கினால் கொதிப்பது தானாக அடங்கும் என்பது ஆணையத்தின் நோக்கம். அதனால்தான்
பண பரிவர்தனையை மாய்ந்து, மாய்ந்து கட்டுப்படுத்துகிறது தேர்தல் ஆணையம். ஆனால்
சட்டப்பூர்வமற்ற வகையில் பணம் பரிமாறப்படுவதை தேர்தல் ஆணையம்
எதிர்க்கிறதேயன்றி, வாக்காளர்களை ஊழல்படுத்தும் இந்த சிஸ்டத்தை எதிர்க்கவில்லை.
'இருக்கும் நிர்வாக அமைப்பு சிறந்தததுதான், அதில் சில ஓட்டை, உடைசல்கள்
இருக்கின்றன. அதை சரிசெய்துவிட்டால் வண்டி நன்றாக ஓடும்' என முட்டுக்கொடுக்கவே
முயற்சிக்கிறது.



அப்படியானால் 'சட்டப்பூர்வமாக' நடைபெறும் ஊழல்களைத் தடுப்பதற்கு என்ன வழி?
தேர்தலை ஒரு பகடைக் காயாக மாற்றி 'எங்களுக்கு ஓட்டுப்போட்டால் உங்களுக்கு
மிக்ஸி தருவோம்' என ஆஃபர் தருவதும், 'எங்களுக்கு வாக்களித்தால் லேப்டாப்
தருவோம்' என பேரம் பேசுவதும்… மக்கள் நலனின் பெயரால் சட்டப்பூர்வமாக நடக்கிறது
என்பதால் ஊழல் இல்லை என்றாகிவிடுமா? இவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரம்
தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறதா, இல்லையா என்பதல்ல இங்கு பிரச்னை. அதன்
செயல்பாடுகள் சட்டப்பூர்வமற்ற ஊழல்களை மட்டுமே 'ஊழல்' என மதிப்பிடுகிறது. இதையே
பொதுப்புத்தியாக நிறுவுகிறது.



ஜார்கண்ட் மாநிலத்தில் பூர்வீக பழங்குடிகளுக்கு சொந்தமான 1,10,000 ஏக்கர் நிலம்
வன்முறையாக பிடுங்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களிடம் வழங்குவதற்கு
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. இது ஊழலா, இல்லையா? அதே
மத்திய இந்தியாவின் தண்டகாரன்யா காடுகளில் இருக்கும் இரும்புத் தாது உலக
சந்தையில் ஒரு டன் 7000 ரூபாய் விலைபோகிறது. இதை ஒரு டன் வெறும் 27 ரூபாய்க்கு
ரெட்டி சகோதரர்களுக்கு விற்கிறது அரசு. இது ஊழலா, இல்லையா? 'இவை எல்லாம்
தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வரவில்லை. ஆணையம் அதன் எல்லைக்குள்
என்ன செய்ய இயலுமோ அதைத்தான செய்கிறது' என இதற்கு பதில் வரும். ஆனால்
நடைமுறையில் இது இந்த அளவுகோலில் புரிந்துகொள்ளப்படவில்லை. தேர்தல் ஆணையம் ஊழலை
ஒழிக்க வந்த ரட்சகனாகவே மதிப்பிடப்படுகிறது. அவர்களும் அவ்வாறுதான் தங்களை
கருதுகின்றனர் என்பது நடவடிக்கைகள் மூலம் தெரிகிறது.



ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கைகளால் விளைந்த விளைவுகள் என்ன?



பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டிருந்த போதிலும், வாக்காளர்களுக்கு பணம்
கொடுப்பது நிற்கவில்லை. அரசியல்வாதிகளிடம் பதுங்கிக் கிடக்கும் பணம்,
இம்மாதிரியான தேர்தல் சமயத்தில்தான் கொஞ்சமாவது வெளியே வரும். ஒலி-ஒளி
அமைப்பாளர்கள், மேடை அமைப்பவர்கள், தோரணம் கட்டுபவர்கள், கலைக் கூத்தாடிகள்,
இசைக் கலைஞர்கள், போஸ்டர் ஒட்டுபவர்கள், அச்சக உரிமையாளர்கள், பந்தல்
பணியாளர்கள் என பெருந்தொகையிலான தொழிலாளர்கள் தேர்தல் காலத்தில்தான் கொஞ்சம்
பணம் பார்ப்பார்கள். அவர்கள் அத்தனைப் பேருக்கும் இப்போது எந்த வேலையும் இல்லை.
அரசியல்வாதிகள் கொள்ளை அடித்தபோது எல்லாம் கண்டுகொள்ளாது, கொள்ளையடித்தப்
பணத்தை செலவு செய்யும்போது ஓடிவந்து தடுக்கிறார்கள். இதன்மூலம் மறைமுகமாக
ஊழல்வாதிகளுக்கு காப்பரண்களாகவும் திகழ்கிறது தேர்தல் ஆணையம்.



இதுநாள் வரை மக்கள் ஓட்டரசியல்வாதிகளின் ஊழல் அரசியலில் சிக்கித் திளைத்து
மக்கள் சலிப்புறும் சமயத்தில் கொஞ்ச நேரம் கௌரவ கதாபாத்திரத்தில் கதாநாயகத்தனம்
செய்துகொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம். மிடிள் கிளாஸ் மனநிலைக்கு தீனி போடும்
இந்த நடவடிக்கைகள் கொஞ்ச நாட்களுக்கு சக்சஸ்ஃபுல்லாக ஓடும் என்பதில் மாற்றுக்
கருத்து இல்லை. அடுத்து எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழலின் அளவு இன்னும்
பல்கிப் பெருகவே செய்யும். அப்போது அதைத் தடுக்க எந்த ஆணையம் வரும்? அன்னா
ஹசாரே வருவாரா?



ஊழலுக்கு எதிரான மசோதாவை சட்டமாக்கிவிட்டால் நாட்டில் ஊழலே ஒழிக்கப்பட்டுவிடும்
என அன்னா சாமியாடுவதைப் பார்த்தால் காமெடியாக இருக்கிறது. ஏற்கெனவே இங்கு ஊழல்
செய்வது சட்டப்படி சரியானது என்று இருக்கிறதா என்ன? இந்த கோயிந்து கோரிக்கைக்கு
நாடு முழுக்க ஆதரவு அலைப் பெருகியது தற்செயலான ஒன்றல்ல. இது திட்டமிடப்பட்டது.



முதலாளித்துவ பொருளாதாரத்தின் நெருக்கடியால் உலகம் முழுவதும் உருவாகி வரும்
மக்கள் புரட்சி யூகிக்க முடியாத திசைகளிலும் தன் செல்வாக்கை
நிலைநிறுத்திவருகிறது. இதைக்கண்டு உலகின் பல நாடுகள் அஞ்சுகின்றன. இந்தியாவில்
இப்படி ஓர் புரட்சி தற்போது சாத்தியமில்லை என்றாலும், ஆளும் வர்க்கங்களுக்கு
மக்கள் மனங்களில் உருவாகியிருக்கும் கூட்டு எதிர்ப்பு மனநிலையை உடனடியாக வடிய
வைக்க வேண்டும். பசித்து குரைக்கிற நாய்க்கு ஒரு பொறைத்துண்டு வீசுவது போல,
பொருளாதார நெருக்கடியால் உருவாகும் பிரச்னைகள் மற்றும் மத்திய கிழக்கின்
எழுச்சி ஆகியவற்றினால் இந்திய மனங்களில் உருவாகிவரும் எதிர்ப்புணர்வை நோக்கி
இந்த அரசு வீசியெறிந்த பொறைதான் அன்னா ஹசாரே.



இப்போது மட்டுமல்ல… மக்களின் எதிர்ப்புணர்வை வடிய வைக்க அரசே அவ்வப்போது
இத்தகைய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். அந்த எல்லைக்குள் 'திறம்பட
கோபப்பட்டால்' நீங்கள் மிடிள்கிளாஸ் ஹீரோவாகலாம். எதிர்ப்புணர்வை ஓர் எல்லையில்
நிறுத்தி வைத்து மழுங்கடிக்கும் வேலையை ஹசாரே திறம்படவே செய்து தந்தார்.
மற்றபடி 'ஆண்டி கரப்ஷன் ஃபோர்ஸ்' நடத்த அன்னா ஹசாரே என்ன ரமணா விஜயகாந்த்தா?



ஹசாரேவும் இந்த சிஸ்டத்தின் ஓட்டை, உடைசலை சரிசெய்து இதற்குள் ஓர் ஒளிமயமான
எதிர்காலத்தை கண்டடைந்துவிடலாம் எனவும், ஊழல் உள்ளிட்ட அனைத்து
பிரச்னைகளுக்கும் நடப்பு ஜனநாயக அமைப்புக்குள்ளேயே தீர்வு உண்டு எனவும்
நம்புகிறவர்தான். இந்திய அளவிலான டிராஃபிக் ராமசாமி என இவரை வரையறுப்பது
இன்னும் பொருத்தமாக இருக்கும். ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு வழக்குப் போடும்
டிராஃபிக் ராமசாமி மயிலாப்பூர் கோயிலுக்குள் அனைத்து சாதியினரும் சென்று வரும்
உரிமைக்கு ஆதரவாக வழக்குப் போட மாட்டார். அதேபோல்தான் அன்னா ஹசாரே
ஓட்டரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிராக போர்க்குரல் எழுப்புவாரேத் தவிர,
கார்பொரேட் கொள்ளைகளைக் கண்டுகொள்ள மாட்டார்.



'ஊழலை ஒழிக்க வேண்டும்' என மொன்னையாக பேசும் அவர், 'தொலைதொடர்புத் துறையில்
வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாகக் காட்டி 2,500 கோடி ரூபாய்
கொள்ளையடித்த ரிலையன்ஸ் நிறுவனத்தை விசாரிக்க வேண்டும்' என்றோ, 'ஸ்பெக்ட்ரம்
முறைகேட்டில் 2 ஜி அலைவரிசையைக் குறைந்த தொகைக்கு ஏலம் எடுத்த நிறுவனங்களை அரசு
முடக்க வேண்டும்' என்றோ கோரிக்கை வைக்கப் போவதில்லை. ஏனெனில் அவை
முதலாளிகளுக்கு எதிரான கோரிக்கைகள்.



நாடு முழுக்கவும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கொண்டு வந்து நாட்டை
மறுகாலனி ஆதிக்கத்துக்கு உட்படுத்தியுள்ளனர். தாமிரபரணி தொடங்கி பிளாச்சிமடா
வரை நாட்டின் நீர்வளம் அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள் உறிஞ்சுகின்றன.
கடல்வளத்தை கடற்கரையோர மேலான்மை சட்டம் என்ற பெயரால் குத்தகைக்கு விடுகின்றனர்.
எல்லையோர இனங்களுக்கு அனுதினமும் துன்ப, துயரம் மட்டுமே மிச்சமாக இருக்கிறது.
இவற்றை வெளிப்படையாகப் பேசி மக்களை அணி திரட்டும் வேலையை அன்னா ஹசாரே செய்வாரா?
மாட்டார். அவரது பிரச்னை எல்லாம் 'ஏம்ப்பா இல்லீகலா ஊழல் பண்றிங்க. சட்டப்படி
ஊழல் பண்ணீங்கன்னா யார் உங்களைக் கேட்கப்போறா?' என்பதுதான். இதற்காகத்தான் அவர்
சட்டம் இயற்றச் சொல்லி போராடுகிறார்.



ஊழல் எதிர்ப்பு என்கிறார். அந்த ஊழலை உற்பத்தி செய்யும் இந்த அரசு என்னும்
நிறுவனத்தை கேள்வி கேட்கமாட்டார். அதனால்தான் அவருக்கு பத்மபூஷன் தொடங்கி,
பத்மஸ்ரீ வரை சகல அரச விருதுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. அதன் உச்சமாக
2008-ம் ஆண்டு சிறந்த சமூக சேவைக்காக அன்னா ஹசாரேவுக்கு உலக வங்கி விருது
வழங்கி கௌரவித்தது. உலக வங்கியால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒருவர் ஊழலுக்கு எதிராக
போர்க்குரல் எழுப்புவதும், அதை இந்திய மிடிள்கிளாஸ் மனநிலைக் கொண்டாடுவதும்
எத்தனை நகைமுரண்?



இதை எல்லாம் தாண்டி உண்ணாவிரதம், தன்னைத்தானே வருத்திக்கொள்வது, தற்கொலை
செய்துகொள்வது… போன்றவற்றுக்கு எல்லாம் நடப்பு சூழலில் எந்தப் பொருளும் இல்லை.
ஒருவேளை உணவுக்குக் கூட வழியற்ற கோடிக்கணக்கானவர்கள் வாழும் நாட்டில் உண்ணாமல்
இருப்பதை ஒரு போராட்டமாக செய்வது, அவர்களை நோக்கி கிண்டல் செய்வது போலதான்.
இதையும் தாண்டி, விதர்பா விவசாயிகள் தற்கொலை, காஷ்மீரிலும், மத்திய
இந்தியாவிலும், வட கிழக்கிலும் இந்திய ராணுவக் கூலிப்படை நிகழ்த்திவரும்
கொலைகள் என உயிர்களை பலியெடுப்பதை பெருவிருப்புடன் செய்து வருகிறது இந்த அரசு.
இப்படிப்பட்ட சூழலில் தனக்கு எதிரான சக்தி ஒன்று தன்னைத்தானே வருத்திக்கொண்டு
மடிந்துப்போகிறது என்றால் அதற்காக இந்த அரசு மகிழ்ச்சி அடையத்தான் செய்யும்.



வடகிழக்கில் பத்து வருடங்களுக்கும் மேலாக அமுலில் இருக்கும் Armed Forces
Special Powers Act (AFSPA) சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இரோம் சர்மிளா ஜானு
உண்ணாவிரதம் இருக்கிறார். ஆனால் கேரளா முத்தங்கா காடுகளில் தங்கள் பூர்வீக நில
உரிமையை ஆதிவாசிகளை ஒருங்கிணைத்து மக்கள் போராட்டம் மூலம் வென்றடைந்தார்
சி.கே.ஜானு. இப்போது நமக்குத் தேவை சர்மிளா ஜானுவா, சி.கே.ஜானுவா என்ற
கேள்வியையும் நாம் எழுப்பியாக வேண்டும்.



மறுபடியும் ஹசாரேவுக்கு வருவோம். அவர் வரையறுக்கும் ஊழலுக்கு எதிரான
போராட்டத்தின் வரைபடம் முதலாளிகளால் வரையப்பட்டது. பாதுகாப்பான உடலுறவுக்கு
காண்டம் அணியச் சொல்லி வலியுறுத்தப்படுவதைப் போல, பாதுகாப்பான ஊழலை
உத்தரவாதப்படுத்த லோக்பால் மசோதாவை சட்டமாக்கச் சொல்கிறார் ஹசாரே. இந்த
உண்மைகளை மறைத்து ஊடகங்கள் இவரை Romanticise செய்கின்றன. ஏனெனில் இந்திய மத்திய
தர வர்க்கம்தான் இந்தியாவின் மிகப்பெரிய சந்தை. அந்த மத்திய தர வர்க்கத்தின்
குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஹசாரே பிரதிபலிக்கிறார்.

மனதை.. மயக்கும்.. குங்குமப்பூ..!

 *மனதை.. மயக்கும்.. குங்குமப்பூ..!*

* *
**
 *வளைகாப்பு*


**
 **
 "ஏண்டா ரமேஷ், ஒங்காத்துக்காரி,  புள்ளாண்டா இருக்கிறாளாமே..!

 ஆமாம் மாமி.

அது சரி. மறந்துடாமே,குங்குமப்பூ வாங்கிக்கொடுடா  ..!

அது எதுக்கு மாமி?

அபிஷ்டு, அபிஷ்டு . இந்தக் காலத்துலே, இது கூட தெரியாம இருப்பாளா? அதாண்டா,
பொண்டுகள் புள்ளாண்டா இருக்கப்போ, குங்குமப்பூ சாப்பிட்டா, கொழந்த செக்கச்
செவேல்ன்னு பொறக்கும். எனக்கும் கூட, ஒங்க மாமா வாங்கிக்கொடுத்தார்.

இப்பவா மாமி?

அசடு, அசடு  . மணி பொறந்தப்போடா..! தனியாளா இருக்கே..! தெனம் ராத்திரி, பாலிலே
குங்குமப்பூ போட்டு ஆத்துக்காரிக்கு கொடுடா..! ஒன் புள்ளையாவது செவப்பா
பொறக்கட்டும். "

   *குங்குமப்பூவும்  ... உடல் சிவப்பும்...!*

* *    **
 **
*
 *

  இது போல, நிறைய உரையாடல்களை, நாம் நிறைய கேட்க நேரிடுகிறது. ஆனால்,
குங்குமப்பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாக பிறக்குமா? சாப்பிட்டவர்களை
எல்லாம் கேட்டு பாருங்கள்..! ம். ம். மூச்சு  விட மாட்டார்கள். அந்தக் கதை
எல்லாம் ஆகாது நண்பா..! குழந்தைப் பாப்பாவின்  நிறம் என்பது அதன் அம்மா, அப்பா,
பாட்டி, தாத்தா, அத்தை, மாமா வின் வழி பரம்பரையை சார்ந்தது. நீங்க என்னதான்,
குங்குமப்பூ, குங்பூ  , மருந்து மாத்திரை, சாப்பிட்டாலும், மாய மந்திரம்
செய்தாலும், கஜ குட்டிக் கரணம் போட்டாலும்,பரம்பரை நிறத்தை மாற்ற
முடியாது..நண்பா..! உங்களது  அனைத்து நட்பு வட்டத்திலும் சொல்லி வையுங்கள்.
வீணே குங்குமப்பூவில் பணத்தை விரயம் பண்ண வேண்டாம். ..!

 *உலகின்..  விலையுயர்ந்த .. நறுமணப்பொருள்! *

* *  **
 **

**
 **
 *அரேபியா*

**
 **

* * உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த, மதிப்பு மிக்க  நறுமணப் பொருள்
குங்குமப்பூதான். எடையளவில், உலகின் விலை அதிகம் உள்ள வாசனைப் பொருள்
குங்குமப்பூ . இதன் விலை என்ன தெரியுமா? ஒரு கிராம் குங்குமப்பூ..ரூ 400 /=
க்கும் மேல்...! என்ன மயக்கம் போட்டுவிட்டீர்களா? கிட்டத்தட்ட தங்கத்தின்
விலைதான் எனலாம். இதனை தங்க வாசனைப் பொருள் என்றே அழைக்கின்றனர். குங்குமப்பூ
என்பது,ரோஸ் குங்குமப்பூ என்று சொல்லப்படும் மலரின்,உலர்ந்த  மகரந்த
தாள்தான்.குன்குமப்போவின் மணத்தையும், தரத்தையும், நிறமித்தன்மையையும்ம்
நிர்ணயம் செய்யும் திறமை பெற்றவர் இந்த ம்கரந்தம்தான். இதன் அறிவியல்
பெயர்..குரோகஸ் சாடீவாஸ் லின்னேயஸ் ( Crocus sativus Linnaeus ) என்பதாகும்.
சாப்ரன்(*saffron* ) என்ற ஆங்கிலச்சொல்    13 ம் நூற்றாண்டில், பழைய பிரெஞ்சு
வழக்கின் வழியே லத்தீனுக்குப் போய், சாப்ரானம் (*safranum*) ஆனது. ஆனால்
இது,சாப்ரான்(*za'farān*) என்ற  அரேபிய/பெர்சிய சொல்லிலிருந்து வந்தது என்றும்
கூறப்படுகிறது. இந்த வார்த்தைக்கு, "தங்கநிற மகரந்தத்தாளைப்
பெற்றிக்கிற"("having golden stigmas")   என்றே பொருளாகும்.

    *சரித்திரம்..படைத்த...சாப்ரான்..! /கலாச்சார..பாலமான ...குங்குமப்பூ...!*

* *    **
 **
 *நாகரிகம் உலவிய இடங்கள்*

* ***
 **
 *குங்குமப்பூ சாதம்*
 வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து, இன்று வரை உணவிலும், பானத்திலும் மனதை
மயக்கும் மணம் உள்ள பொருளாக குங்குமப்ப்பூ   பயன்படுத்தப்பட்டு  வருகிறது.
அதுமட்டுமா? குங்குமப்பூ, பல கலாச்சாரங்களை, நாகரிகங்களை இணைக்கும் பாலமாக
இருந்திருக்கிறது. ஆம்.  குங்குமப்பூ, உலகின் மிகவும் விலை மதிப்பற்ற
பொருளாகவே  பல மனித நாகரிகங்களை, கலாச்சாரங்களை
சந்தித்திருக்கிறது.ஆப்பிரிக்கா,ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா என பல கண்டங்களிலும்
குங்குமப்பூவின் பயன்பாடு பரவலாக  பரவி உள்ளது. அதன் சிவந்த மகரந்த இழைகள்,
கேக் வகைகள், இனிப்பு வகைகள், பான வகைகள், ஒயின் போன்ற மது வகைகளில் கலக்கப்
படுகின்றன. அதன் பயன்பாடு காலம் கடந்தது.

         *வரலாறுபேசும்...குங்குமப்பூ..விவசாயம்..!*

* *  **
 **
 *குங்குமப்பூ விளையும் நாடுகள்*
 குங்குமப்பூ  பயிரிடுதலும் கூட, சுமார் 3,500 ஆண்டுகளுக்கு
முற்பட்டது.  கொஞ்சம் கசப்பு சுவையுடன்,புல் வாசனையுடன்  இருக்கும்
குங்குமப்பூவை, மனிதர்கள் பல வகைகளில் பயன்படுத்தி இருக்கின்றனர். இதனை இனிப்பு
பொருள்களை அலங்கரிக்கவும், நறுமணத்துக்காகவும் உபயோகப் படுத்துகின்றனர்.
குங்குமப்பூ வண்ணம் தரும் பொருளாகவும், மருத்துவப் பொருளாகவும் கூட வளைய
வருகின்றது. தென்மேற்கு ஆசியாவே இதன் தாயகம். இருந்தாலும் கூட,
வாணிபரீதியாக பித்தளை காலத்தில்தான் ,முதன் முதல், இத்தாலிக்கு
அருகிலுள்ள கிரீட்டில் பயிரிடப்பட்டது.

        *அரை லட்சம்.. வயதான... குங்குமப்பூ ஓவியம்..!*

*      *
 **
 *குங்குமப்பூ அறுவடை செய்யும் பெண்*
* *மனித  வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால்,   சுமார் 50,000 ஆண்டு
முன்பே, குங்குமப்பூ நிறமிகள் கொண்டு ,வரைந்த  சித்திரங்கள் /குகை
ஓவியங்கள்  வரலாற்றுக்கு முற்பட்ட வட மேற்கு இரானின் பகுதிகளில்
இன்றும் இருக்கின்றன. பின்னர் சுமேரியர்கள் 4,000-7,000 ஆண்டுகளுக்கு
முன்பாகவே , காட்டில் காணப்படும் குங்குமப்பூவினை மருந்தாகவும், மாய மந்திரப்
பொருளாகவும் பயன்படுத்தினர்.பின்னர் குங்குமப்பூ யுரேசியா முழுவதும் பரவி,
அதன்பின், வடஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் பசிபிக் கடல் தீவுகள் முழுவதும்
பரவியது.

*குங்குமப்பூ இழையோடிய..ஆடையும்.. படுக்கையும்..!  *

* *  **
 **
* ** *

* * பழங்கால பெர்சியர்கள்*(ஈரானியர்கள் ).*,டெர்பணா( Derbena) மற்றும்
இஸ்பாகன்(Isfahan) நகர்களில்,  பெர்சிய குங்குமப்பூவினை கி.மு 10 ம்
நூற்றாண்டிலேயே வளர்த்தனராம். இந்த பகுதிகளில், குங்குமப்பூவினை நூலிழைகளில்
கலந்து, ஆடை தயாரித்தனர். இந்த ஆடைகள் புனித வழிபாடுகளுக்கு
அளிக்கப்பட்டது.பெர்சியர்களிடம் குங்குமப்பூ, வண்ணம் உருவாக்கவும்,
நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும்,  வலம் வந்தது.உடலின் கடின உழைப்புக்குப்
பின், குங்குமப்பூவையும், சந்தனத்தையும் கலந்து நீரில் கரைத்து,  பெர்சியர்கள்
குளித்து வெயிலின்  உக்கிரத்தைக் குறைத்து இளைப்பாறினர். அது மட்டுமா?
குங்குமப்பூ இழைகளை படுக்கையில் பரப்பி படுத்து உறங்கினர்.மன அழுத்தத்தை
தீர்க்கும் மருந்தாக, மன ஆறுதல் தரும்**
 **
 *குங்குமப்பூ தேநீர்*
பொருளாக பெர்சியர்கள் இதனை கருதி, தேநீரில் கலந்து அருந்தினர். பெர்சியர்
அல்லாத மக்கள், பெர்சியர்கள் இப்படி குங்குமப்பூவினை, மருந்தாகப்
பயன்படுத்துவதைப் பார்த்து, மிரண்டனர்;அரண்டனர். ஏன் தெரியுமா? இது பால்
உணர்வைத்தூண்டும் என்பதால்தான்.

 **
 **
 *பாலில் கலந்த குங்குமப்பூ*
இன்றும்கூட, பிராமணக் குடும்பங்களில், முதலிரவின் போது குங்குமப்பூ  கலந்த பால்
கொடுக்கப்படுகின்றது.

       *தாவரவியல் பதிவும்.குங்குமப்பூ..மலையும்.!*

* *  **
 **
அசிரியன்கள் வம்சத்தில், கி.மு. 7 ம் நூற்றாண்டிலேயே , அஷுர்பாநிபால்
(Ashurbanipal) என்ற அரசரின் நிர்வாகத்தில், முதன்முதல்  குங்குமப்பூ வளர்த்தது
தொடர்பாக தாவரவியல் குறிப்பேடுகளின்  பதிவில் உள்ளது . இஸ்ரேலில் உள்ள நாகேவ்
பாலைவனத்தில்,ஹார் கார்கோம் (*Har Karkom*) என்ற மலை உள்ளது.ஹார் கார்கோம்
என்பதன் பொருளே, குங்குமப்பூமலை  என்பதே..! எகிப்து மற்று ஜெருசலத்தில்,
குங்குமப்பூவின் பயன்பாடு பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4,000
ஆண்டுகளுக்கு மேலாக, பரவலாக குங்குமப்பூ பயன்படுத்தப்படுவதுடன், அது சுமார்
90  நோய்களின் நிவாரணியாக இருந்தததாகவும் பதிவுகள் சொல்லுகின்றன.* *



  * மாவீரர் அலெக்சாண்டர்..காயம்.கழுவிய/களைந்த ..குங்குமப்பூ..!*

        **
 **
 *மாவீரன் அலெக்சாண்டர்*

* *  ஆசியப் படையெடுப்பின் போது, மாவீரர் அலெக்சாண்டர், பெர்சிய குங்குமப்பூவை
பல வழிகளில் பயன்படுத்தி,தூள் கிளப்பினாராம். . குடிக்கும் பானங்களில்,
அரிசியில்/சாதத்தில் , குளிக்கும் நீரில் என கலந்து, போரின்போது ஏற்பட்ட
காயங்களை குணப்படுத்தினார். அலெக்சாண்டரின் போர்வீரர்களும், இந்த பழக்கத்தைக்
கைப்பற்றியதுடன்,பெர்சியர்கள் போலவே  குங்குமப்பூ குளியலை கிரீசுக்கும் கொண்டு
சென்றனர். பின்னர் தெற்கு ஆசியாவுக்குள் விஜயம் செய்தது குங்குமப்பூ.காஷ்மீர்
மற்றும் சீனாவுக்கு 900 -2,500 க்கு இடைப்பட்ட    ஆண்டுகளில் அடி எடுத்து
வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது

      * குங்குமப்பூவின் இந்திய நுழைவும்..மஞ்சள் நிற அங்கியும்..!*

* *     பெர்சியர்கள் ஊடுருவலாலும், காஷ்மீரின் காலனியாதிக்கத்தாலும்,
குங்குமப்பூ, புதிய தோட்டங்களிலும், பூங்காக்களிலும்  பயிரிடப்பட்டது. இதன்
பின், போனிசியன்கள்( Phoenicians ), காஷ்மீர் குங்குமப்பூவை, வண்ணம் தோய்க்கும்
பொருளாகவும், ஏகாந்த மன நிலை தரும் சிகிச்சை பொருளாகவும் விற்றனராம். இதன்
மூலமாக, குங்குமப்பூ, உணவாக, நிறமியாக தென்பகுதி ஆசியாவுக்குள் நுழையத்
துவங்கியது.  கௌதம   புத்தர் மறைந்த பின், அவரின் சீடர்கள்/புத்த பிட்சுக்கள்,
குங்குமப்பூ  நிற அங்கிகளை அணிந்தனர். இந்த ஆடைகள் குங்குமப்பூவில்
தோய்த்தெடுத்தது  இல்லை. இவை மஞ்சள்/பலாபழத்தின் மூலம் நிறம் பெற்றவையாகும்.
தமிழர்களும், சுமார் 2 ,௦௦௦000  ஆண்டுகளுக்கு மேலாக, குங்குமப்பூவை உபயோகப்
படுத்துகின்றனர். தமிழில், குங்குமப்பூ, "*ஞாழல் பூ*"  என்றே அழைக்கப்படுகிறது.
இது தலைவலி நீக்கியாகவும், வலியில்லா பிரசவ மருந்தாகவும் பயன்படுகிறது.

      *புத்தருக்கு.. தரப்பட்ட...காஷ்மீர்...குங்குமப்பூ!*

* * சில வரலாற்றியலாளர்களின்  கருத்துப்படி, பெர்சியாவிலிருந்து மங்கோலியர்கள்,
சீனாவுக்குள் ஊடுருவியபோது, அப்படியே அவர்களுடன் குங்குமப்பூவும் வந்தது. கி.மு
2000 -3000    ஆண்டுகளிலேயே, சீன மருத்துவ நூல்களில், சென்னோன்கின்னின்  பெரிய
மூலிகை என்ற தலைப்பில் 40 தொகுதிகள் குங்குமப்பூ பற்றி எழுதியுள்ளனர். இதில்
சுமார் 250 வகை, தாவர வேதிப்பொருள்கள் உள்ளன. குங்குமப்பூ,  மருந்தாக, பலவகை
நோய்களை நீக்கும் சர்வரோக நிவாரணியாகவே  கூறப்பட்டுள்ளது.கி.பி 3ம்
நூற்றாண்டில் கூட, சீனர்கள், குங்குமப்பூவை, காஷ்மீரிலிருந்துதான்  பெற்றனராம்.
வான் சென் என்ற மருத்துவ வல்லுநர், புத்தருக்கு தருவதற்காகவே, காஷ்மீரிகள்
குங்குமப்பூ வளர்த்ததாக குறிப்பிடுகின்றார். மேலும், இதன் நறுமணத்திற்காக  ,
குங்குமப்பூவினை ஒயினில் கலப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.**
 **
 *கோமதீஸ்வரர் சிலை*
கி.பி,. 938 லிருந்து, ஒற்றைக்கல்லினால் ஆன கோமேதேஸ்வரர் சிலைக்கு 12
ஆண்டுகளுக்கு ஒருமுறை, குங்குமப்பூ கலந்த எண்ணெயில் அபிசேகம் செய்யும்
மகாமஸ்டக் அபிஷேக(Mahamastakabhisheka )  விழா நடைபெர்றுகிறது.

       *மருந்தும் ...நறுமணப்பொருளுமான..குங்குமப்பூ.! *

     **
 **
குங்குமப்பூ, ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் கூட, நடமாடியது. கி.மு
,௦-, களில், கிரேக்கத்துக்கு அருகில் கிரேட் பகுதியில் வாழ்ந்த
மின்னோயன்கள்(Minoans ),குங்குமப்பூ, நோய் வந்த காலத்துக்குப்பின் உடல் நலம்
காக்கும் பயன்படுத்தும் மருந்தாகப் பயன்படுத்தியதை, படமாக வரைந்துள்ளனர்.
கிரேக்க கதைகள், குங்குமப்பூவின், கடல் வழிப் பயணத்தை அற்புதமாக, சுவர்
படங்களின் மூலம் நமக்கு காட்டுகின்றன. உலகின் அதிக மதிப்புள்ள குங்குமப்பூவைக்
காப்பாற்ற , நிறைய போர்கள் நடந்துள்ளனவாம். பழங்கால, மத்தியதரைகடல் வாழ்
மக்கள், குறிப்பாக, எகிப்தின் வாசனை திரவியலாளர்கள், காசா (Gaza) வின்
மருத்துவர்கள், ரொடிசின் நகர மாந்தர்கள், கிரேக்கத்தின் நீதிமன்ற அதிகாரிகள்
எனப் பலரும், குங்குமப்பூவை நறுமண நீருடனும், வாசனை திரவமாகவும், தைலமாகவும்,
களிம்பாகவும்,கண் இமைகளின் பூச்சாகவும், புனிதப் பொருளாகவும், நோய்
சிகிச்சைக்கான மருத்துவ மூலிகையாகவும் கொடி கட்டிப் பறந்தது.

   *வாணிபப்..பாலமான..குங்குமப்பூ..! *

* * **
 **
 *கொரிசியன் குகை*

**
 **
 *சான்டோரினியில் குங்குமப்பூ பறிக்கும் பெண்*

* *கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே,குங்குமப்பூ மிக நீண்ட தொலைவுக்குச் செல்லும்
வாணிபப் பொருளாக இருந்ததாம். கிரீஸ் -ரோமன் காலத்தில், கி.மு 8 முதல் -கி.பி 3
ம் நூற்றாண்டு வரை குங்குமப்பூ முக்கிய பங்கு வகித்தது. பின் கிரீட்டின்
மின்னோயர்கள்,கிரேக்கத்தின் தீவான சான்டோரினி (Santorini ) யில், இளம்
பெண்களும், குரங்கும் குங்குமப்பூ சேகரித்தனர். பழங்கால கிரேக்கர்கள், கிரேக்க
மாலுமிகள் ஆசியா மைனரின் தென் கடற்கரையிலுள்ள சிசிலியா  சென்று, உலகின் விலை
மதிப்பு மிக்க குங்குமப்பூவை கொண்டுவந்ததாக கூறப்படுகிறது. அங்குதான் அப்போது
நல்ல தரமான குங்குமப்பூ விளைவிக்கப்பட்டதாம். மேலும் கிரேக்கர்கள் தங்களின்
பார்னாசஸ் மலையிலுள்ள கொரிசியன் குகைகளில் (Corycian Cave of Mount Parnassus )
குங்குமப்பூவை  ரகசியமாய் பயிரிட்டனர் என்று பதிவுகள் தெரிவிக்கின்றன.

     *பேரழகி..கிளியோபாட்ராவின்..குங்குமப்பூ..குளியல் .!.*

    *  *
 **
 *எகிப்தின் வரைவுகள்*

* *  **
 **
 *எகிப்திய பேரரசி கிளியோபாட்ரா*
எகிப்தின் ஹெலேனிஸ்டிக்(hellenestic) பரம்பரையின் மகாராணியான கிளியோபாட்ரா,
தனது தங்க நிற உடலைப் பாதுகப்பதர்காகவும், தன் காதலரை
கவர்வதற்காகவும்  ,குளியல் தொட்டியில் ஏராளமான குங்குமப்பூ போட்டு குளித்து
விட்டு , மணக்க, மணக்க வருவாராம். குங்குமப்பூ வாசனை பாலின உணர்வினை தூண்டும்
என்று காலம் காலமாக நம்பட்டு வருகிறது. மனித இனம். வரலாற்றுக்கு முற்பட்ட
காலத்திலிருந்தே பயன்படுத்திய பழங்கால மருத்துவ  மூலிகைகளில் குங்குமப்பூவும்
ஒன்று. . எகிப்திய மருத்துவர்கள், பலவகை, வயிற்று நோய்களுக்கும்,
குங்குமப்பூவினையே மருந்தாகப் பயன்படுத்தினர். லேவண்ட், லெபனான், டையர் போன்ற
மத்தியகிழக்கு பகுதிகளில்,குங்குமப்பூ இழைகள்  துணிகளுக்குப்  போடும் வண்ணமாக
இருந்தது. மேலும், ரோம் நகரின் புகழ பெற்ற மருத்துவரான ஆலுஸ் கார்நிலியாஸ்
செல்சாஸ்(Aulus Cornelius Celsus) என்பவர், இருமல், வயிற்று வலி, சொறிசிரங்கு,
காயம் போன்றவைகளுக்கும், குங்குமப்பூவே, மருந்தாக பரிந்துரைத்துள்ளார்.
ரோமானியர்கள், சர்வரோக நிவாரணியான குங்குமப்பூவை  மிகவும் நேசித்தார்கள். ரோம்
சாம்ராஜ்ஜியம் விழும்வரை, குங்குமப்பூ விவசாயம் செய்தனர். ஆனாலும் கூட, இன்று
வாசனை திரவியங்களின் இடமான, பிரெஞ்சுக்கு 8 ம் நூற்றாண்டு அல்லது  14
ம் நூற்றாண்டிலோதான் குங்குமப்பூ விஜயம் செய்ததாம்.

     *குங்குமப்பூ..இறக்குமதியும்..குங்குமப்பூ..போரும்..!*

   **
 **
 *பிளேக் நோயினால் இறப்பு*

* *    ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப்  பின், ஐரோப்பா நகரங்கள் குங்குமப்பூவை
பயிரிட்டன. முகம்மதியர்களின் நாகரிகம் மீண்டும் ஸ்பெனுக்குள் குங்குமப்பூவைக்
கொண்டுவந்தது. 14ம் நூற்றாண்டில், பிளேக் நோயினால் ஏற்பட்ட கருப்பு இறப்பின்
போது, குங்குமப்பூ கலந்த மருந்துகள் நோயாளிக்கு கொடுக்கப்பட்டன. நோயாளியின்
அறையில் குங்குமப்பூ வைக்கப்பட்டது. குங்குமப்பூவின் பயன்பாடும்
விலையும், ஆகாசத்துக்குப் பறந்தது . ஏராளமான குங்குமப்பூ, மத்தியதரைக்கடல்
நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதில் ஒரு கப்பல் திருட்டும் நடந்து,
அதனால், 14 வார, "*குங்குமப்பூ போரும்*" வெடித்தது. இதன் பரவலான, பரபரப்பான
பயன்பாட்டிற்குப் பின், இதில் கலப்படமும், கலந்தது.     இங்கிலாந்தில்,
குங்குமப்பூ நகரம் உருவானது. இதுவே, குங்குமப்பூ வளர்க்கும், வாணிபம் செய்யும்
இடமாக விளங்கியது. இருப்பினும், மற்ற பருகும் பானங்களான  சாக்லேட், காபி,
தேநீர் மற்றும் வெனிலா வாணிபரீதியான    போட்டியில் இறங்கியதும்,
குங்குமப்பூவின் புகழ் கொஞ்சம் மங்கத்தொடங்கியது. பின் பிரெஞ்ச், இத்தாலி,
ஸ்பெயினில் மட்டும் குங்குமப்பூ பயிரிட்டனர்.

     * குங்குமப்பூ..கிராமம்! *

 **
 **
 *குங்குமப்பூ நகர்*


   இலண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கு அருகில் ஒரு கிராமம் உள்ளது. அதன்
பெயர். குங்குமப்பூ வால்டன் எனப்படுகிறது. இந்த ஊரில் மத்திம காலத்தில்(5 -15
ம் நூற்றாண்டில்) கம்பளிதான் முக்கிய வாணிபப் பொருளாக இருந்தது. 16-17 ம்
நூற்றாண்டுகளில் குங்குமப்பூ பரவலாக ஊர் முழுவதும் பயிரிடப்பட்டது.ஏனெனில்
அப்போதுதான் குங்குமப்பூவின் மகிமை உலகம் முழுவதும் பரவி இருந்தது. இனிப்பு
பொருள்கள், மிட்டாய், மருந்து, மாத்திரை தயாரிப்பு, உணவுப்பொருளில்
கலத்தல்,உடல் வலி குறைய மற்றும் விலை அதிகமான நிறமி என பல உருவம் எடுத்து பணி
புரிந்தது குங்குமப்பூ. இதனாலேயே இது அதிகமாய் சிப்பின் வால்டேனில் விளைவிக்கப்
பட்டது. இந்த ஊரில் குங்குமப்பூவின் வாணிபம் சக்கை போடு போட்டதால், இந்த
ஊருக்கு இயற்பெயரான, சிப்பின் என்பது மறைந்து, வியாபாரம் செய்யப்பட்ட பொருளே,
இதன் பட்டப் பெயராகி, குங்குமப்பூ வால்டன் என்று அழைக்கப் படலாயிற்று. உலகில்
முதன் முதலில் குங்குமப்பூவை உணவுப் பொருள்களில் வாசனைக்காக கலந்தவர்கள்
ஐரோப்பியர்கள்தான்.

     * குங்குமப்பூ.. தலைநகர்..!*

 **
 **
 *குங்குமப்பூ தலை நகர்*

* *        குங்குமப்பூ உலகம் முழுவது பயணித்தாலும், இன்றைய ஈரான் எனப்படும்
அன்றைய பெர்சியாதான் அந்தகாலத்தில் மட்டுமல்ல இந்த காலத்திலும் கூட, உயர் ரக
குங்குமப்பூ உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முன்னணியில் நிற்கிறது. ஆம்
நண்பர்களே, இன்று உலக உற்பத்தியில் ஈரானின் பங்களிப்பு மட்டும் 95 %-97 %
என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.இங்குள்ள கோரசன் ( Khorasan .) என்ற இடம்தான்,
உலகில் குங்குமப்பூவின் தலைநகர் என்று அழைக்கப்படுகிறது. மிக நீண்ட காலமாக,
குங்குமப்பூ பயிரிட்ட அனுபவத்தினால், இவர்களுக்கு அது பயிரிடப்படும் ,
யுக்தியும் பழக்கமும் கிடைத்துள்ளது. அதனாலேதான் ஈரானியக் குங்குமப்பூ
தனித்தன்மை வாய்ந்ததாக, உலகத் தரம் வாய்ந்ததாக உள்ளது.

    *குங்குமப்பூ ..விவசாயம்..!*

   **
 **
 *குங்குமப்பூ விவசாயம்*

**
 **
 *குங்குமப்பூ செடி*

* *   குங்குமப்பூ விவசாயம் என்பது கொஞ்சம் கடினமான  ஒன்றே..! குங்குமப்பூவில்
சுமார் 1500 வகைகள் உள்ளன.இதன் தாயகம்,பிறந்த இடம் பற்றிய புதிர்களும் கூட ,
குங்குமப்பூ பிரபலமானதற்கு காரணமாகும். இதன் விதையிலிருந்து இச்செடி
முளைப்பதில்லை. அதன் வேர்ப்பகுதில் உள்ள அடித் தண்டிலிருந்தே முளைக்கிறது.
குங்குமப்பூ விவசாயத்திற்கு அதிக நீர் தேவை இல்லை.  குங்குமப்பூவின் செடி
வெயிலும் நிழலும் உள்ள பகுதியில் நன்றாக வளரும். இது தண்டின் மூலமே பயிர்
செய்யப்படுகிறது. இதனை 7 -15 செ.மீ ஆழத்தில் நல்ல இடைவெளி விட்டு
நடப்படுகிறது.குங்குமப்பூ நடவு ஜுன் மாதம் செய்யப்படுகிறது.இலையிதிர்கலம்
மற்றும் குளிர் காலத்தில் குங்குமப்பூ செடி நன்கு வளருகிறது.  குங்குமப்பூ
மார்ச்-ஏப்ரல் மாதங்களில்தான் பூக்கும். எல்லா செடிகளும் அதிக பட்சம் இரண்டு
வாரத்துக்குள் பூத்து முடிந்துவிடும்.கோடையில் மட்டும் இந்த செடி சலனமின்றி
பேசாமல் இருக்கும். ஒரு செடியில் 1 -4 பூக்கள் மலரும்.பூவின் நீளம் 9 -10 செ.மீ
மட்டுமே. இதில் வயலெட் நிறத்தில் 6 இதழ்கள் இருக்கும். இதன் நுனியில் 3 மகரந்த
தாள்கள் நல்ல சிவப்பு வண்ணத்தில்  வெடித்து பிரிந்திருக்கும்.

     *அறுவடையும்..பதப்படுத்தலும்..!*

   **
 **
 *குங்குமப்பூ பிரித்தெடுத்தல்*

* *   குங்குமப்பூவின்  மலர்களை விடிகாலையிலேயே, பகலவன் உலா வருமுன்னே  ,
பறித்துவிட வேண்டும்.வெயிலில் இருந்தால் மலர்களின் நிறம் மங்கிவிடும்;தரம்
குறைந்துவிடும். இவை உலர்ந்தால்.. இதுதான் குங்குமப்பூ ..!ஒரு கிலோ உலர்
குங்குமப்பூ தயாரிக்க 1,00,000 -2,00,000 பூக்கள்/9,00,000 மகரந்தத்  தாள்கள்
வேண்டும். ஒரு கிராம் உலர் குங்குமப்பூ தயாரிக்க, சுமார் கிலோ பூவேண்டும்.
 ஆனால் காஷ்மீர் குங்குமப்பூவின் மகரந்தத்தால் கொஞ்சம் தடிமனாக இருப்பதால், ஒரு
கிராம் குங்குமப்பூ எடுக்க, சரியாக 190 பூக்கள்/570
மகரந்தங்கள் மட்டும் இருந்தால் போதும். குங்குமப்பூ பூக்கும்போது அழகான
லேவண்டர் (இளம் வயலெட் ) நிறத்தில்
இருக்கும்.சாதாரணமாய், குங்குமப்பூவின் விளைச்சல் என்பது , ஒரு ஹெக்டேருக்கு 10
கிலோதான்.

    *விலை.. அதிகமான.. குங்குமப்பூ..!*

   **
 **

* **<Photo48>*

* *   இதனை காற்றுப் புகாத ஒரு பாட்டிலில் போட்டு பத்திரமாய் ஈரப்பதம் இன்றி
அடைத்தது வைக்க வேண்டும். குங்குமப்பூ விலை அதிகமாக விற்பதன் காரணம் இதன்
உற்பத்தி செலவும்/உழைப்புக் கூலியும் தான். . ஆம், பூக்களைப் பறிக்க, மகரந்தம்
பிரித்தெடுக்க, பதப்படுத்த, தரம் பிரிக்க என அனைத்துப் பணிகளும் மனித
உழைப்பாலேயே நடை பெறுகின்றன.

   *குங்குமப்பூவின்..ஆராய்ச்சிகள்..! *

   **
 **
இத்தாலியின் அக்வில்லா பல்கலையின் பேராசிரியர் சில்வியா பிஸ்டி (Silvia Bisti)
என்பவர்,  கண் பார்வை தரும் நிறுவனத்துடன் இணைந்து, குங்குமப்பூவின்மருத்துவ
குணங்கள்,கண்ணை எப்படி பாதுகாக்கிறது என  அறிய ஆராய்ச்சி செய்தார்.பொதுவாக
குங்குமப்பூ கண்பார்வையை பாதுகாத்து சரி செய்கிறது. வயது முதிர்ந்தவர்களிடம்
உருவாகும் பார்வைக் குறைபாட்டையும் குணப்படுத்து கிறது. மேலும் இதில்
காணப்படும் எதிராக்சிகரணி (antioxidant)   பொருள்கள் மரபணுக்களை செம்மையாக
செயல்பட வைக்கிறது.  பிரான்ஸ் நாட்டின் ஆய்வுகள் உடல் எடையைக்
குறைக்கவும்,வயிற்றுப் பசியைக் கட்டுப் படுத்தவும் குங்குமப்பூ பயன்படுவதாய்
கண்டறிந்துள்ளன. மேலும் இது உடலின் செரடோனின்(Serotonin ) என்ற
ஹார்மோன் அளவையும் கட்டுப்படுத்தி, உடல் நிலையையும், மனநிலையையும் சீராக
வைப்பதாக அறிந்துள்ளனர்.இதானால் ஒருவரின் மனநிலை, பசி  , தூக்கம் மற்றும்
தசையின் சுருங்கும் தன்மை யாவும் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.இது அதிக உணவு
உண்பதையும் கட்டுப் படுத்துகிறது. இந்தியாவில் நாயர் என்பவர் 1991 ல் ஆய்வு
செய்து குங்குமப்பூ புற்றுநோயை எதிர்க்கும் மருந்துதான் என்று கண்டறிந்தார்.
சில ஆய்வுகள் இது தோல் புற்றை சரி செய்கிறது என தெரிவிக்கின்றன.



 *பலவகைகளில் பயன்படும்..நறுமணப்பூ..!*

 **
 **
 *குங்குமப்பூ அலங்காரம்*
 குங்குமப்பூ மருந்து உணவாக மட்டுமின்றி,பல தொழில்களிலும் புகுந்து,தன்
ஆட்சியை அங்கும் நிலைநாட்டி  களை கட்டுகிறது. இது புகையிலை தொழில், மதுபானத்
தொழில், பால் தொழில், முக அலங்கார தொழில்,முகத்துக்கான கிரீம்,  உடலுக்கு
தெளிக்கும் நறுமண பொருள் மற்றும் வண்ணச் சாயத் தொழில் போன்ற பலவகை
தொழிற்சாலைகளின் மைய அச்சாணியாய் , இயக்க மேலாளராய் இருந்து செயல்படுகிறது
குங்குமப்பூ.மேலும் குங்குமப்பூவினை எல்லா மத சடங்குகளிலும்
பயன்படுத்துகின்றனர். திபெத்திய புத்த பிட்சுக்கள் தங்களின் பிரார்த்தனைக்கும்,
பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்யவும், குங்குமப்பூவை  பயன்படுத்துகின்றனர்.
*
 அரேபிய எழுத்துக்கள்
*
படம் வரையும் ஓவியக் கலைஞர்கள், குர்ஆன் போன்ற முகம்மதிய மத
புத்தகங்களில் குங்குமப்பூ கொண்டு,பட வரைவுகளைச் செய்தும், எழுதியும்
இருக்கின்றனர்.

       *குங்குமப்பூவின்.. தரம்  ..!*
 
_பேரா.சோ.மோகனா

May 11, 2011

கருத்தரங்கம்

தினகரன்
நாள் மார்ச்,19,2011

கூடலூர்:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்
கூடலூரில் வனவளம் காப்போம் கருத்தரங்கம்
நடைபெற்றது.

ஐ.நா.சபை 2011ம் ஆண்டை சர்வதேச
வனவள ஆண்டாக அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளிகள்தோறும்
விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தி
வருகிறது.முதன்முறையாக கூடலூரில் வ.உ.சி.
நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.
கருத்தரங்கிற்கு தலைமையாசிரியை
வனிதாமணி தலைமை தாங்கினார்.
அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினர்
முத்துக்கண்ணன் வரவேற்றார்.கவிஞர் ஓவியாதனசேகர் பேசினார்.
:சுந்தர்

கூடலூரில் வனவளம் காப்போம் கருத்தரங்கம்

தினத்தந்தி
நாள்:மார்ச் 21,2011
2011ம் ஆண்டை சர்வதேச வனவள
ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்திருப்பதைத்
தொடர்ந்து தேனிமாவட்டம்
கூடலூர் வ.உ.சி.நடுநிலைப்பள்ளி
வளாகத்தில்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளிகள்தோறும்
விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்திவருகிறது.

முதன்முறையாக கூடலூர் பள்ளியில் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
வ.உ.சி.நடுநிலைப்பள்ளி
தலைமை ஆசிரியை வனிதாமணி தலைமை தாங்கினார்.
அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் வரவேற்று பேசினார்.

கவிஞர் ஓவியா தனசேகர் பேசினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர்
தே.சுந்தர்,அறிவியல் இயக்க ஆர்வலர் சி.பிரகலாதன்
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

துளிர் இல்லம்,மழலையர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் உட்பட
150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் வ.உ.சி.பள்ளி ஆசிரியர் கா.சிவமூர்த்தி நன்றி கூறினார்.
:சுந்தர்