கம்பம்,
மே 14: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், பள்ளி குழந்தைகளும் தண்டனைகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.கம்பம் ஸ்ரீ முக்தி விநாயகர் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்தில், அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பா.செந்தில்குமார் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தே.சுந்தர் வரவேற்றார்.ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார்.குழந்தைகளும் தண்டனைகளும் என்ற தலைப்பில், கல்வியாளர் அ.அமல்ராஜும், மொ.பாண்டியராஜனும் கருத்துரையாற்றினர். இதில், தண்டனை குறித்தும், இதனால் மாணவர்களிடம் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், வகுப்பறை அனுபவங்கள் குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.கருத்தரங்கில் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.முத்துக்கண்ணன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment