தினமலர்:
பதிவு செய்த நாள் : மே 03,2011
கம்பம் :
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள 60 வகையான புத்தகங்கள் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5 வகுப்பு வரை வழங்க அனைவருக்கும் கல்வி இயக்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, இளைஞர் அறிவியல் மாநாடு,
துளிர் அறிவியல் வினாடி வினா,
துளிர் அறிவியல் திறனறிதல் போட்டிகள்,
எளிய கருவிகள் செய்தற்கான போட்டிகள்,
அறிவியல் பரிசோதனைகள் என பல்வேறு
அறிவியல் ரீதியான நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகிறது.
அத்தோடு சிறந்த புத்தகங்களை
அறிவியல் இயக்கம் வெளியிட்டு வருகிறது.
தேனி மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர்
சுந்தர் கூறியதாவது:
இந்த ஆண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள புத்தகங்களில் 60 வகையான புத்தகங்களை, அனைவருக்கும் கல்வி இயக்கம்,தொடக்க கல்வி மாணவர்களுக்கு ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கேள்வி பதில்,
அறிவியல் தொடர்பான சந்தேகங்கள்,புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல வகையான தலைப்புகளில் பொது அறிவியல் அறிவை வளர்க்கும் வகையில் இந்த புத்தகங்கள் உதவிகரமாக இருக்கும், என்றார்
No comments:
Post a Comment