முதல் பக்கம்

Sep 29, 2012

முப்பருவமுறை-தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை: விவாதம்


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி உபகுழுவின் சார்பில் செப்டம்பர்,27 அன்று மாலை 5 மணிக்கு கம்பம் அக்குபங்சர் அகாடமி மையத்தில் தமிழகத்தில் நடைமுறையிலுள்ள முப்பருவமுறை-தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை குறித்து விவாதம் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டப்பொருளாளர் செ.சிவாஜி தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் வரவேற்றுப் பேசினார். மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் ஜெயமுருகன் விவாதத்தைத் தொடங்கிவைத்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரச் செயலாளர் த.முருகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் தேனி மாவட்டச்செயலாளரும் பல்கலைக்கழக பாடத்திட்டக்குழு உறுப்பினருமான கவிஞர்.அ.உமர்பாரூக், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் மா.ராஜேஷ், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் முன்னாள் மேற்பார்வையாளர் ஆர்.இளங்கோவன், ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் எஸ்.சேசுராஜ் மற்றும் அறிவியல் இயக்க நண்பர்கள் நந்தகுமார், முரளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் நன்றி கூறினார். கம்பம் கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன், கிளைப்பொருளாளர் மொ.தனசேகரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

பாவ்லோ பிரைரே-ஆசிரியர் இணையக்கூட்டம்

பிரேசில் நாட்டின் கல்வியாளர் பாவ்லோ பிரைரே அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர்,19,2012 அன்று மாலை கம்பத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட அலுவலகத்தில் ஆசிரியர் இணையக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாவ்லோ பிரைரே 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுதில்லி நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்விசார் கலந்துரையாடலின் போது நிகழ்த்திய உரையின் நூல் வடிவமான  “எதார்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும்” என்ற புத்தகத்தை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது.

ஒரு ஆசிரியரோ, கல்வியாளரோ எப்பொழுதும் நடுநிலையாளராக இருந்ததில்லை. இருக்கவும் முடியாது. அப்படி ஒருவர் சொல்லிக்கொள்வாரேயானால் அது உண்மையில்லை. ஒவ்வொரு ஆசிரியருமே ஒரு அரசியல்வாதிதான் அல்லது கலைஞர்களாகத்தான் இருப்பார்கள்.

கற்பித்தல் என்பதே ஒரு அரசியல் செயல்பாடுதான்.

கல்வியின் மூலமாக மட்டுமே எந்த ஒரு அரசியல், சமூக மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது.

நடைமுறையில் இருக்கின்ற கல்வியும் பள்ளிகளும் நடுநிலையானவை அல்ல. அவை ஆளும் அதிகார வர்க்கத்தின் தத்துவார்த்த நிலையை அடுத்தடுத்த தலைமுறைகளிடம் மீள் உருவாக்கம் செய்கின்ற வேலையைத்தான் செய்துகொண்டிருக்கின்றன.

ஆசிரியராக இருக்கின்ற ஒருவர் 50 விழுக்காடு மாணவராகவும், 50 விழுக்காடு ஆசிரியராகவும் இருக்க தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

கல்வி என்பது கற்றல் என்பது உரைவீச்சுக்களின் மூலம் நிகழ்வதாக இருக்கக்கூடாது. மாறாக கலந்திரையாடலின் மூலமாகவே நிகழவேண்டும்.

இவ்வாறு பல்வேறு சிந்தனைகளை, விவாதக்கருத்துக்களை உள்ளடக்கியதாக இந்தப்புத்தகம் இருக்கிறது. இவ்விவாதத்தில் அறிவியல் இயக்க நண்பர்கள் ஜெயமுருகன், தே.சுந்தர், மொ.தனசேகரன், வி.வெங்கட்ராமன், க.முத்துக்கண்ணன் மற்றும் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இப்புத்தகத்தினை எழுத்தாளர் கமலாலயன் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. விலை ரூ.30/- அவசியம் படிங்க.

Sep 17, 2012

டார்வின் துளிர் இல்லத்தில் உலக ஓசோன் தினக் கருத்தரங்கம்

சூரியனின் கதிர்கள் முழுமையாக நம்மைத் தாக்காமல் பாதுகாக்கின்ற ஓசோன் படலம் மனிதர்களின் செயல்பாடுகளால் பாதிப்படைந்து வருவதை தடுப்பதற்காக 1987ஆம் ஆண்டு மாண்டிரியோலில் நடந்த மாநாட்டில் 24 நாடுகள் ஒப்பந்தம் செய்தன. ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட செப்டம்பர்,16ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை உலக ஓசோன் தினமாக அறிவித்தது. அந்நாளில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டக்கிளையின் சார்பில் சுருளிப்பட்டி, டார்வின் துளிர் இல்லத்தில் நேற்று (செப்டம்பர்,16) உலக ஓசோன் தினக் கருத்தரங்கம் நடைபெற்றது. கம்பம் கிளைப் பொருளாளர் மொ.தனசேகரன் தலைமை வகித்தார். துளிர் இல்ல மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.முத்துக்கண்ணன் முன்னிலை வகித்தார்.  மாணவர் பிரவீன் வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் உலக ஓசோன் தினம் குறித்தும் ஓசோன் படலம் பாதிப்பிற்கான காரணங்கள் குறித்தும் பாதிப்பினைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பவர்பாயிண்ட் மூலம் விளக்கமளித்தார். மாணவர் பழனி நன்றி கூறினார்.

--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

Sep 11, 2012

அமெரிக்காவில் அரசுப் பள்ளிகள்தாம் சிறப்பாக இருக்கும்!



First Published : 26 Aug 2012 12:00:00 AM IST

அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி  (மானுடவியல்) படித்து வரும் மாணவி எலினார். இவர் தனது படிப்பின் ஆராய்ச்சிக்காக கிராம மக்களின் வாழ்க்கை, கலாசாரத்தை அறிந்துகொள்ள கடந்த 10 மாதங்களுக்கு முன் மானாமதுரை அருகே மேலப்பசலை கிராமத்துக்கு வந்து ஓவியம் ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான குழும வீட்டில் தங்கினார். இவருக்கு ஆறுமுகத்தின் மகள் எம்.எஸ்சி படித்த ராஜேஸ்வரி மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல வகைகளில் வழிகாட்டுதலாக இருந்து வருகிறார்.  மானுடவியல் பாடத்தில் மக்கள் கிராம தெய்வங்களை வழிபடுவது, திருமணங்கள் நடத்துவது குறித்தும், கோயில் திருவிழாக்கள் கலாசார முறைகளையும் தனது ஆய்வுக்காக ஊன்றிக் கவனித்து வருகிறார் மாணவி எலினார்.    மேலப்பசலை கிராம மக்களிடத்தில் மாணவி எலினார் அன்பாகப் பழகி வருவதால், கிராம மக்களும் இவரிடம் மிகுந்த அன்பு செலுத்தி வருகின்றனர்.  கிராம மக்களுடன் சேர்ந்து வயல்வெளிகளில் வேலை செய்வது, வீட்டில் சமையல் வேலை செய்வது, கிராம மக்களுடன் சேர்ந்து திரையரங்குக்குச் சென்று சினிமா பார்ப்பது போன்றவற்றையும் தனது ஆராய்ச்சி படிப்புடன் எலினார் மேற்கொண்டுவருகிறார்.  மேலும், பெண்கள் வயல் வேலைகளுக்குச் சென்றால் அவர்களுடன் சென்று வயலில் நாற்று நடுவது, களை எடுப்பது போன்ற வேலைகளையும் செய்து வருகிறார். கிராமத்து வாழ்க்கையை ரசித்தபடி அனுபவித்துவரும் எலியனார் நம்மிடம் பேசியதிலிருந்து...  ""நான் பிரிட்டனில் முதுகலைப் படிப்புப் படித்தேன். தற்போது மானுடவியல் ஆராய்ச்சி படிப்புக்காக மேலப்பசலை கிராமத்தில் வந்து தங்கியிருந்து, படிப்பு சம்பந்தமாக ஆய்வு செய்து வருகிறேன்.  படிப்புக்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளேன். எனது படிப்புக்கு அமெரிக்கா, இந்திய அரசாங்கங்கள் உதவி செய்து வருகின்றன. நான் மேலப்பசலை அருகேயுள்ள கரிசல்குளம் கிராமங்களில் நடக்கும் திருமண விழாக்கள், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றுக்கு நேரிடையாகச் சென்று, ஏராளமான விஷயங்களைத் தெரிந்து கொண்டுள்ளேன்.  இது எனது ஆராய்ச்சிப் படிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  படிப்பு என்பது வாழ்க்கையில் முக்கியமானதாகும். அமெரிக்க கல்வி முறையானது படித்ததை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் முறையில் இல்லை. ஆனால், இந்தியாவில் படிக்கும் பாடத்திலிருந்து கேள்வி - பதில்களை மனப்பாடம் செய்து, அதையே பதிலாக எழுதுகிறார்கள். இந்த படிப்பு முறை வாழ்க்கைக்கு உகந்ததல்ல. படிக்கும் பாடத்திலிருந்து சொந்தமாகப் பதில் எழுத வேண்டும்.  அமெரிக்காவில் அரசுப் பள்ளிகள் தான் சிறப்பானதாக இருக்கும். வீடுகளுக்கு அருகேயுள்ள பள்ளிகளில்தான் சேர்ந்து படிக்க வேண்டும். ஒரு வகுப்புக்கு 30 மாணவர்கள்தான் இருப்பார்கள். பள்ளிகளில் விளையாட்டு, உடற்பயிற்சி முக்கியப் பாடங்களாக இருக்கும்.  தமிழகத்தில் விளையாட்டுக் கல்வி முறையும் படிப்பும் மாணவர்களை முன்னேற்றும் விதத்தில் இல்லை. இரவானால் இங்கு பெண்கள் வெளியில் செல்லத் தயங்குகிறார்கள். அமெரிக்காவில் இரவில் வெளியில் செல்ல பயம் கிடையாது.  திருமணத்துக்காக இங்கு போல் வரதட்சிணை வாங்கும் பழக்கம் எங்கள் நாட்டில் இல்லை'' என்றார்.  இவருக்கு உதவியாக உள்ள மேலப்பசலை ராஜேஸ்வரி, ""எலினார் தன்னம்பிக்கையுடன் சுறுசுறுப்பாக உள்ளார். எந்த நேரமாக இருந்தாலும் எங்கும் செல்லும் தைரியம் இவரிடம் உள்ளது.  மேலப்பசலை கிராம மக்களின் அன்பைப் பெற்றுள்ள இவர், சிறுவர்களுடன் விளையாடுவது இளைஞர்களுடன் சகஜமாக பேசி பழகுவது பெண்களுடன் சேர்ந்து வயலுக்கு நாற்று நடவும் களை எடுக்கவும்கூட செய்கிறார். இதெல்லாம் இவரது சிறப்பாகும்.  இவர் மேலப்பசலைக்கு வந்த பின்னர், இவரது பெற்றோர் ஒருமுறை இங்கு வந்து சென்றுள்ளனர்''  என்றார். 
ஞாயிறு கொண்டாட்டம்,

சாதனை மாணவர்களுக்கு அறிவியல் இயக்கம் பாராட்டு


 பதிவு செய்த நேரம்:2012-09-10 11:39:25
 
விழுப்புரம், : தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் சார்பில் சர்வதேச எழுத்தறிவு தின விழா விழுப்புரத்தில் நேற்று நடந்தது. முன்னாள் மாநில பொருளாளர் மனோகர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிவமுருகன், மாவட்ட கல்வி உப குழு அய்யனார், மாவட்ட பொருளாளர் கருணாகரன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் கல்வி பிரசார உப குழு வீரபாஸ்கரன் வரவேற்றார். ரமேஷ் அறிமுக உரையாற்றினார். 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்ற 422 மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி மாவட்ட வருவாய் அலுவலர் பிருந்தாதேவி சிறப்புரையாற்றினார். ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்க இணை இயக்குனர் நரேஷ் சிறப்புரையாற்றினார். இஎஸ் கல்வி குழும தலைவர் சாமிக்கண்ணு, அறிவியல் இயக்க மாநில தலைவர் மணி, ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர் பாட்சா, அனைத்து பொறியாளர் பேரவை மாநில துணை செயலாளர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

நன்றி: தினகரன்

சர்வதேச எழுத்தறிவு தினம் - 2012

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் மதுரை மேற்கு ஒன்றியம் பிள்ளையார்நத்தம் ஆகிய இடங்களில் அறிவியல் இயக்கத்தின் சார்பில் சர்வதேச எழுத்தறி தினம் நடத்தப்பட்டது. கருத்தரங்கம், மாணவர்களுக்கான போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டன.

திருமங்கலத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கா,காமேஷ் தலைமை வகிக்க. குருசாமி - ஞானவள்ளி அறக்கட்டளை நிறுவனர் குருசாமி அவர்கள் முன்னிலை வகித்தார். எழுத்தறிவு குறித்து பி.கே.என். மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சு.சங்கரன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்/ கலைஞர்கள் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினரும். கவிஞருமான ஆர்,காசிபாண்டியன் ஆகியோர் கருத்துரையாற்றினர். முன்னதாக தீபம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கோமதி வரவேற்புரையாற்ற, தீபம் மாவட்டப் பொருளர் முத்துலட்சுமி நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 50 மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 
பொதும்பு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு கிளைத் தலைவர் ஹரிபாபு தலைமை வகித்து சிறப்புரையாற்ற.பரவை சத்தியமூர்த்தி நகர் உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் மஞ்சுளா சிறப்பு விருந்திராக கலந்துகொண்டு பேச்சுப்போட்டி. ஓவியப்போட்டி. கட்டுரைப்போட்டி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கிளைச் செயலாளர் ஜோதிமுருகன் சிறப்பாக செய்திருந்தார். 25 க்கும் மேற்பட்ட துளிர் இல்ல மாணவர்கள். பெற்றோர்கள் என கலந்துகொண்டனர்.