சூரியனின் கதிர்கள் முழுமையாக நம்மைத் தாக்காமல் பாதுகாக்கின்ற ஓசோன் படலம் மனிதர்களின் செயல்பாடுகளால் பாதிப்படைந்து வருவதை தடுப்பதற்காக 1987ஆம் ஆண்டு மாண்டிரியோலில் நடந்த மாநாட்டில் 24 நாடுகள் ஒப்பந்தம் செய்தன. ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட செப்டம்பர்,16ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை உலக ஓசோன் தினமாக அறிவித்தது. அந்நாளில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டக்கிளையின் சார்பில் சுருளிப்பட்டி, டார்வின் துளிர் இல்லத்தில் நேற்று (செப்டம்பர்,16) உலக ஓசோன் தினக் கருத்தரங்கம் நடைபெற்றது. கம்பம் கிளைப் பொருளாளர் மொ.தனசேகரன் தலைமை வகித்தார். துளிர் இல்ல மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.முத்துக்கண்ணன் முன்னிலை வகித்தார். மாணவர் பிரவீன் வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் உலக ஓசோன் தினம் குறித்தும் ஓசோன் படலம் பாதிப்பிற்கான காரணங்கள் குறித்தும் பாதிப்பினைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பவர்பாயிண்ட் மூலம் விளக்கமளித்தார். மாணவர் பழனி நன்றி கூறினார்.
--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI
No comments:
Post a Comment