கூடலூர் : தினமலர்
பதிவு செய்த நாள் : டிசம்பர்,16,2010
கோவையில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு அண்மையில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். தேனி மாவட்டத்தின் சார்பாக கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்ல மாணவர்கள் சந்தியப்பிரவீன், ஹரிபிரசாத், சரத்குமார், கார்த்திக் கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பராட்டு விழா கூடலூர் வீகேன் பயிற்சி மையத்தில் நடந்தது. பொறுப்பாளர் சுரேந்தர் வரவேற்றார். விவசாய அலுவலர் தெய்வேந்திரன், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தர், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீராமன், துளிர் இல்ல ஆலோசகர் பிரகலாதன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் முத்துக்கண்ணன், பாஸ்கரன், வெங்கட்ராமன், ராஜசேகர், ரேணுகாதேவி ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment