முதல் பக்கம்

Nov 16, 2011

19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு-நவம்பர்,13,2011 மாநில அளவிலான மாநாட்டிற்கு தேனி மாவட்டத்தில் இருந்து 7 ஆய்வுகள் தேர்வு



துவக்கவிழா:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெரியகுளம் கிளையின் ஒருங்கிணைப்பில் குழந்தை விஞ்ஞானி விருதிற்கான 19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாவட்ட அளவில் நவம்பர் 13,2011 அன்று பெரியகுளம் எட்வர்டு நினைவு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.மாநாட்டிற்கான துவக்கவிழா தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  பெரியகுளம் கிளையின் தலைவர் ஏ.எஸ்.பாலசுப்ரமணி முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் எஸ்.ராம்சங்கர் வரவேற்றுப்பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளரும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான தே.சுந்தர் மாநாட்டின் மைய நோக்கம் பற்றி அறிமுக உரையாற்றினார்.. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன் துவக்க உரையாற்றினார். திருமிகு.எம்.வி.கிருஷ்ணமூர்த்தி, திருமிகு. எல்.சசிதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலக்கருத்தாளர் முனைவர். எஸ்.தினகரன் சர்வதேச காடுகள் ஆண்டு-2011 பற்றி சிறப்புரையாற்றினார். பெரியகுளம் கிளைப்பொருளாளர் பெ.ஆண்டவர் நன்றி கூறினார்.

 
சிறந்த ஆய்வுகள் தேர்வு:

ஆண்டிபட்டி, தேனி, போடி, பெரியகுளம், கம்பம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த 30 பள்ளிகள் மற்றும் துளிர் இல்லங்களைச் சேர்ந்த சுமார் 280  குழந்தைகள் 57 குழுக்களாக தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர். அதில் சிறந்த 7 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டன.தமிழ்- இளையோர் பிரிவில் கம்பம் ஸ்ரீமுக்தி விநாயகர் நடுநிலைப்பள்ளி மற்றும் பெரியகுளம் டிரையம்ப் நடுநிலைப்பள்ளி  மாணவர்களும் தமிழ்-மூத்தோர் பிரிவில் கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்லம், கம்பம் முத்தையாபிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்  மற்றும் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியரும் மாநில அளவிலான மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆங்கிலம்-இளையோர் பிரிவில் போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் ஆங்கிலம்-மூத்தோர் பிரிவில் தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். முனைவர்.மு.முகமது செரீப், திரு.அழகு, திரு.சேசுராஜ், திரு.எம்.மணிகண்டன், திரு.எஸ்.மனோகரன் திரு.ப.ஸ்ரீதர் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.
 
நிறைவு விழா:

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் முனைவர். ஜி.செல்வராஜ் தலைமை வகித்தார். எட்வர்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என்.ஜெயலட்சுமி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் திரு.முத்துக்குமார் முன்னிலை வகித்தனர்.  தேனி மாவட்ட வன அலுவலர் திருமிகு. வி.கணேசன் குழந்தை விஞ்ஞானிகளுக்கும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கி சிற்ப்புரையாற்றினார். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் துறைப் பேராசிரியர் முனைவர்.எஸ்.கண்ணன் பங்கேற்ற குழந்தைகள் அனைவருக்கும் பதக்கம் அணிவித்து  நிறைவுரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டப் பொருளாளர் செ.சிவாஜி நன்றி கூறினார். மாவட்டத் துணைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அறிவியல் இயக்கப் பொறுப்பாளர் அ.சதீஷ் மற்றும் வனக்காப்பாளர் வி.இராஜசேகரன் ஆகியோர் விழிப்புணர்வு பாடல்களைப் பாடினர். பேராசிரியர்கள், கருத்தாளர்கள், வழிகாட்டி ஆசிரியர்கள், குழந்தை விஞ்ஞானிகள் என 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சர்வதேச காடுகள் ஆண்டை முன்னிட்டு வன உயிரினங்கள் பற்றிய புகைப்படக் கண்காட்சி, சர்வதேச வேதியியல் ஆண்டை முன்னிட்டு வேதியியல்-நம் வாழ்க்கை,நம் எதிர்காலம் என்ற தலைப்பில் போஸ்டர் கண்காட்சி மற்றும் புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.

குறிப்பு: மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வருகின்ற நவம்பர் 24,25,26 தேதிகளில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. தமிழக ஆளுநர்  அவர்கள் துவங்கிவைக்கின்றார். தேசிய அளவிலான மாநாடு இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் டிசம்பர்,27-31 தேதிகளில் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment