பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2011,23:36 IST
பெரியகுளம் : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பில், குழந்தை விஞ்ஞானி விருதிற்கான 19 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாவட்ட அளவில் பெரியகுளத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்குமரன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர், பொருளாளர் சிவாஜி, பெரியகுளம் கிளை தலைவர் பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் ராம்சங்கர் வரவேற்றார். மாநிலசெயலாளர் தியாகராஜன் உட்பட பலர் பேசினர். மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலிருந்தும் 280 மாணவர்கள், 57 குழுக்களாக அறிவியல் ஆய்வுகளை சமர்பித்தனர்.தமிழ் இளையோர் பிரிவில், பெரியகுளம் டிரையம்ப் நடுநிலைப்பள்ளி, கம்பம் ஸ்ரீமுக்தி விநாயகர் நடுநிலைப்பள்ளி. தமிழ் மூத்தோர் பிரிவில் கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்லம், கம்பம் முத்தையாபிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

நன்றி: தினமலர்
No comments:
Post a Comment