தினமலர் :
பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2011,
கம்பம் : தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாட்டிற்கு, மதுரையை சேர்ந்த பேராசிரியர்கள் உட்பட ஐந்து ஆசிரியர்களின் கட்டுரைகள் தேர்வாகியுள்ளன. தேனி மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் சுந்தர் கூறியதாவது :
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, தேசிய தொழில்நுட்ப தகவல் பரிமாற்றக்குழு, அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்புடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகின்றன. இவ்வாண்டு "அறிவியல் கல்வியின் போக்கும், புதிய சவால்களும்' என்று பொது தலைப்பு கொடுக்கப்பட்டது. பல உப தலைப்புகளிலும் ஆசிரியர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். தமிழ்நாட்டில் இருந்து 50 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 27 ஆய்வு கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மதுரை எஸ்.என். கல்லூரி பேராசிரியர் ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் இமயவரம்பன், கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் ராஜன், மதுரை முத்துப்பட்டி நர்சரி பள்ளி ஆசிரியர் பாண்டியராஜன், மதுரை பாப்புநாயக்கன்பட்டி ஆசிரியர் இளமாறன், வத்தலக்குண்டு ஆசிரியர் மகமுதா, மதுரை அறிவியல் இயக்க நிர்வாகி பாண்டியராஜன் ஆகியோரின் கட்டுரைகள் தேர்வாகி உள்ளன. தேர்வான ஆசிரியர்களுக்கு, நவம்பர் 8 ல் உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடைபெறும் தேசிய மாநாட்டில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும், என்றார்.

No comments:
Post a Comment