முதல் பக்கம்

Nov 28, 2011

பிரெஞ்சு வேதியலாளரும்,மருந்தக பட்டியலின் முதன்மையாலருமான ,நிக்கோலஸ் லேமேரி (Nicolas Lémery (November 17, 1645 – June 19, 1715) பிறந்த தினம்




நண்பர்களே, ஏராளமான அறிஞர்கள் வேதியலுக்கு பங்களித்து இருக்கின்றனர். அதில் முக்கியமானவர் பிரெஞ்சு வேதியலாளரும்,மருந்தக பட்டியலின் முதன்மையாலருமான ,நிக்கோலஸ் லேமேரி (Nicolas Lémery (November 17, 1645 – June 19, 1715) பிறந்த தினம் இன்று. நிக்கோலஸ் பிரெஞ்சு நாட்டில் ரூன் (Rourn) என்ற ஊரில் பிறந்தார்.அமில-கார வேதியலின் கொள்கைகளை உருவாக்கியவர்களில் ஒருவர்.நிக்கோலசின் தந்தைஜூலின் லேமேரி, நார்மண்டி பாராளுமன்றத்தின் வழக்கறிஞர்.நிக்கொலசுக்கு 11 வயதாகும்போதே அவரின் தந்தை மறைந்து விட்டார். ஆனால் அவர்களின் குடும்பம், பாரம்பரியமாக ரூனின் நீதியரசர் தொழிலைப் பார்த்து வந்தது. அவரது குடும்பம் செல்வ செழிப்பு மிக்கதும் கூட. அவரது மாமாவுடன் இணைந்து மருந்தகத் தொழிலைப் பார்த்தார். MD வரை படித்தார். . .நிக்கொலஸ் வேதியலுக்கு இரண்டு முக்கியமான பங்களிப்புகள் செய்தார். மருந்தகத் துறையின் அகராதி/கலைக்களஞ்சியத்தை எளிமையாக 1698 ல் தொகுத்து அளித்தவர் இவரே. அடுத்து இன்னொரு முக்கியமான பணி ஆண்டிமணி தாதுவை எப்படி தயாரிப்பது என்பது பற்றியும், அதன் குணங்கள் பற்றியும்,கண்டுபிடித்து தெளிவாக பதிவு செய்து வைத்துள்ளார்.
s
-- S Mohana <mohanatnsf@gmail.com>

No comments:

Post a Comment