DINAKARAN
பதிவு செய்த நாள் 10/24/2011 10:4:23
பதிவு செய்த நாள் 10/24/2011 10:4:23
பெரியகுளம் : தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாவட்ட அளவில், மாநில மற்றும் தேசிய அளவில் மூன்று கட்டங்களாக நடைபெறும். இம்மாநாட்டில் பங்கேற்பதற்கான வழிமுறைகள், ஆய்வு செய்யும் உத்திகள், சமர்ப்பிக்கும் நெறிமுறைகள், தலைப்பை தெரிவு செய்யும் முறைகள் ஆகியவற்றை விளக்குவதற்காக தமிழ்நாடுஅறிவியல் இயக்கம் பெரியகுளம் கிளை சார்பில் வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் நடத்தியது.பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமிற்கு தலைமை ஆசிரியர் இராம்சங்கர் தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் தியாகராஜன் கலந்து கொண்டு ஆய்வுநெறிமுறைகள் தொடர்பான விபரங்களை எடுத்துரைத்தார். மாவட்ட கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் பேசினார். பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியை கற்பகம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment